Monday, March 31, 2014
இலங்கை::இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 78 தமிழக மீனவர்களும் அவர்களது 20 படகுகளும் இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய 13 படகுகளுடன் 58 மீனவர்கள் காங்கேசந்துறைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய 13 படகுகளுடன் 58 மீனவர்கள் காங்கேசந்துறைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய இந்திய அதிகாரிகளினால் விடுவிக்கப்பட்ட10 படகுகளும் இலங்கை அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளன.
அத்துடன் இந்தியவாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இலங்கை மீனவர்களும் அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இந்தியவாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இலங்கை மீனவர்களும் அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தவிர மேலும் 20 தமிழக மீனவர்களும் அவர்களது ஏழு படகுகளும் இன்று தலைமன்னார் கடற்பரப்பில் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
இதனிடையே, இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்கள் இராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர்.இவர்கள் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தை நேற்று மாலை சென்றடைந்ததாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து தமிழக மீனவர்களும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய கடந்த வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த 26 ஆம் திகதி கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட மீனவர்களே தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.
இந்த மீனவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment