Monday, March 31, 2014சென்னை::இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை, இந்தியா
புறக்கணித்தது அதிர்ச்சி அளிக்கிறது,'' என, மத்திய அமைச்சர் வாசன்
கூறினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர்,
ஞானதேசிகன் தலைமையில், தேர்தல் பிரசார, "சிடி'க்கள் வெளியீடு நிகழ்ச்சி
நேற்று நடந்தது.
சிடி' வெளியீடு : மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன், சிடி'களை வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பெற்றுக் கொண்டார்.
வாசன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக காங்கிரஸ் கட்சி, 38 தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை அறிவித்து விட்டது. எங்கள் வேட்பாளர்கள் மகிழ்ச்சியுடன், தேர்தலை சந்திக்கின்றனர். அவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவர். கடந்த, 10 ஆண்டுகளில், மத்திய அரசு செய்த சாதனை திட்டங்களை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்வோம்.

காங்கிரசுக்கு, தமிழக மக்கள் வாக்களிப்பர்.
எம்மதமும் சம்மதம்; நிலையான ஆட்சி; நாட்டின் ஒற்றுமை. ஒருமைப்பாட்டை
காங்கிர சால் மட்டுமே காப்பாற்ற முடியும் என, மக்கள் நம்புகின்றனர்.
பிரதமர் யார் என, சொல்ல முடியாத நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க.,
கட்சிகள் தேர் தலை சந்திக்கின்றன. இது கேப்டன் இல்லாமல், கப்பல்
செலுத்துவதற்கு சமம். இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வந்த
தீர்மானத்தை, இந்தியா புறக்கணித்துள்ளது. இதற்கான காரணத்தையும் தெரிவித்து
உள்ளது.
முன்னர் ஆதரவு : இலங்கை பிரச்னையில், ஐ.நா., கொண்டு வந்த தீர்மானத்தை, ஏற்கனவே, மத்திய அரசு ஆதரித்துள்ளது. இந்த முறை நடுநிலை வகித்தது. இந்தியா எடுத்த முடிவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. வரும் நாட்களில் மத்திய அரசு உறுதியோடு செயல்பட்டு, இலங்கை அரசு மீது கண்டிப்புடன் இருக்க வேண்டும்.
சேதுசமுத்திர திட்டம் : சேதுசமுத்திர திட்டத்திற்கு, தமிழக அரசு எதிர்ப்பாக செயல்படுகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் திட்டங்கள் முக்கிய காரணம். சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் பயன்படும்.ஆனால், தமிழகத்தின் வளர்ச்சிக்கு, தமிழக அரசு தடையாக, இருப்பது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு, வாசன் கூறினார்.

No comments:
Post a Comment