Monday, March 31, 2014

இறுதிகட்ட போரின் போது இந்திய வம்சாவளித் தழிழர்கள் புலிகளின் சார்பில் முக்கிய பங்காற்றியிருந்தனர்: நார்வேயின் நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை : சம்பிக்க ரணவக்க!

Monday, March 31, 2014
இலங்கை::
தடைகளுக்கு அஞ்சி நாட்டின் எதிர்காலத்தை காட்டிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தேசிய இனத்தையோ, வரலாற்று சிறப்பு மிக்க அடையாளங்களையோ தாரை வார்க்க வேண்டியதில்லை. எவ்வாறான தடைகள் விதிக்கப்பட்டாலும் நாம் அனைவரும் இணைந்து செயற்பட்டால், தடைகளை முறியடிக்க முடியும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சற்று வலுவானது. கடந்த காலங்களில் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச் செயல்கள் பற்றியே வலியுறுத்தப்பட்டது. எனினும், தற்போதைய தீர்மானத்தில் மத நல்லிணக்கம், ஊடக சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை குறித்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. உள்ளக ரீதியிலான விசாரணைகளே நடத்தப்பட வேண்டும். இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை நார்வே வடக்கில் குடியேற்றியது.

இறுதிகட்ட போரின் போது இந்த இந்திய வம்சாவளித் தழிழர்கள் புலிகளின் சார்பில் முக்கிய பங்காற்றியிருந்தனர். எனவே நார்வேயின் நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சம்பிக்க கோரியுள்ளார். பத்தரமுல்லவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment