Monday, March 31, 2014
சென்னை::தமிழ் தேசிய கூட்டமைப்பு புலம்பெயர்ந்த புலிகள் ஆதரவு அமைப்பிற்கு அடிமையாகியுள்ளதாக இந்திய குற்றம் சுமத்தியுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சர் சுதர்சண நாச்சியப்பன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனிடையே, ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில், இந்தியாவின் பிரதிபலிப்பு சாதாரணமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்காமை தொடர்பில் இந்தியா மீது குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும் இதற்கு பதிலளித்த நாச்சியப்பன், தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல அபிவிருத்தி பணிகளுக்கு இந்தியா பாரிய ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்காவிட்டால், இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதனிடையே, இலங்கை மீதான சுயாதீன விசாரணையை இந்தியா நிராகரிப்பதாகவும், இவ்வாறான ஒரு நிலைமை நாளை இந்தியாவுக்கும் வரலாம் என்றும் நாச்சியப்பன் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment