Monday, March 31, 2014
இலங்கை::இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புப் படை தலைமையகத்தினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண இராணுவப் படைப் பரிவுகளுக்கு இடையில் இடம்பெற்ற கரப்பந்தாட்டப் போட்டியில் 23 ஆவது படைப் பரிவு சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.
கடந்த இரு வாரங்கலாக நடைபெற்று வந்த இந்த சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணங்களிலுள்ள இராணுவப் படைப் பிரிவில் 10 அணிகள் பங்கு பற்றிய இப்போட்டியில் 22 ஆவது படைப் பிரிவு அணியினரும் 23 ஆவது படைப் பிரிவு அணியினரும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.
இப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுக்கு 24 ஆவது படைப் பிரிவின் அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி லெப்டிணன் கேணல் ஹரீன் வீரசிங்க தலைமையில் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் இரவு நேர விளையாட்டுப் போட்டியாக (29) சனிக்கிழமை நடைபெற்றது. 5 இக்கு 3 என்ற அடிப்படையில் நடாத்தப்பட்ட இந்த இறுதிச் சுற்றுப் போட்டியில் (25:22, 25:19, 25:24) என்ற புள்ளிகள் அடிப்படையில் 23 ஆவது படைப் பிரிவு சம்பியனாகியது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கமாண்ட பிரிகேடியர் எச்.கே.பீ.பிரீஸ், 241 பிரிகட் கமாண்ட கேணல் பிரியந்த கமகே, 242 பிரிகட் கமாண்ட கேணல் சிறிசாந்த, மேஜர்களான நவரட்ண, பிரசாத் உள்ளிட்ட பல இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.
No comments:
Post a Comment