Monday, March 31, 2014
மதுரை::சுட்டெரிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல்
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் நடிகர்,நடிகைகள்
பிரசாரம் செய்து வருகிறார்கள். இதேபோல் தலைவர்களும் பிரசாரம் செய்து
வருகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது. தமிழக
முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் பாதி இடங்களில் பிரசாரம் செய்து
முடித்துவிட்டார். அடுத்து வரும் நாட்களில் அவர் கோவை, தஞ்சாவூர், திருச்சி
போன்ற இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார். சுட்டெரிக்கும் வெய்யிலையும்
பொருட்படுத்தாமல் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். தி.மு.க.
சார்பில் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. வேட்பாளர்களுக்காக விஜயகாந்த், அவரது
மனைவி பிரேமலதா, காங்கிரசுக்காக ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்ற தலைவர்கள்
பிரசாரம் செய்து வருகிறார்கள்.
மற்ற கட்சிகளுக்கு நடிகர்கள் பெரும்பாலும்
பிரசாரம் செய்யவில்லை. ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்காக நடிகர்,நடிகையர்
பட்டாளமே களத்தில் குதித்துள்ளது. ச.ம.க.தலைவர் சரத்குமார், ஊர், ஊராக
சென்று பிரசாரம் செய்து தி.மு.க.வை தாக்கி வருகிறார். இதேபோல் நடிகர்
ராமராஜன், ஆனந்த்ராஜ், குண்டு கல்யாணம், வையாபுரி போன்றவர்களும்
அ.தி.மு.க.வை ஆதரித்து பேசி வருகிறார்கள். சமீபத்தில் அ.தி.மு.க.வில்
இணைந்த நடிகை ஆர்த்தியும் பிரசார களத்தில் குதித்து உள்ளார். பிரபல பாடகி
அனிதா குப்புசாமி பாட்டுப்பாடி ஓட்டு வேட்டையாடி வருகிறார். இதே நடிகை
விந்தியா விஜயகாந்தை கிண்டல் அடித்து பேசி வருகிறார். தலைவர்களும்
அ.தி.மு.க.வை ஆதரித்து பேசி வருகிறார்கள்.
குறிப்பாக தே.மு.தி.க.வில்
இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்தை கிண்டல் அடித்து பேசி
வருகிறார். இதேபோல் தி.மு.க.வில் இருந்து விலகிய பரிதி இளம்வழுதி,
ம.தி.மு.க.வில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் மற்றும் செ.கு. தமிழரசன்
போன்ற தலைவர்களும் தி.மு.க.வின் ஊழலையும் கச்சத்தீவை தாரை வார்த்து
கொடுப்பதற்கு துணையாக இருந்த கருணாநிதியையும் விமர்சித்து பேசி
வருகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்.பி.
எம்.எல்.ஏ.க்கள் அந்தந்த தொகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இதனால் தமிழக தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.
No comments:
Post a Comment