Monday, March 31, 2014
இலங்கை::ஜெனிவா நவநீதம்பிள்ளை தலைமையிலான சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கின்றது என ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக தெரிவித்தார்.
இலங்கை::ஜெனிவா நவநீதம்பிள்ளை தலைமையிலான சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கின்றது என ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்,
வெளிநாடுகளின் அழுத்தங்கள் தொடர்பாக ஆராய்ந்து ஜெனிவாவில் அடுத்த கட்ட
நடவடிக்கை தொடர்பாக அரசாங்கம் முடிவெடுக்குமென்றும் அவர்
கூறினார்.
ஜெனிவாவில் அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து
தெரிவிக்கையிலேயே ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக
இவ்வாறு தெரித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக
கொண்டு வரப்பட்ட பிரேரணையானது அரசியல் நோக்கம் கொண்டதாகும்.
அது மட்டுமல்லாது தமிழ், சிங்கள முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின்
முயற்சிகளுக்கும் இப்பிரேரணையானது முட்டுக்கட்டை போடுவதாகவே
உள்ளது.
முப்பது வருட கால யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் பல பிரிவுகளாக மீள் கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதலாவதாக, இடம்பெயர்ந்த மக்களுக்கு வாழ்விடங்களை அமைத்துக்
கொடுத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசாங்கம்
கவனம் செலுத்தியது.
தற்போது அனைத்து இனங்களுக்கும் இடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அவ்வாறானதோர் சூழ்நிலையில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக
பிரேரணையை நிறைவேற்றியதானது தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்
அரசின் முன்னெடுப்புக்களுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
அதேவேளை, இலங்கையின் தமிழ் மக்களின் நலன்களில் இந்தியா அதிக அக்கறை கொண்டுள்ளது.
எனவே தான் இலங்கை அரசாங்கம் இனங்களிடையே நல்லிணக்கத்தை
ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதால் அதற்கு ஒத்துழைப்பு
வழங்க வேண்டுமென்றும் இலங்கை அரசாங்கம் தமது நடவடிக்கைகளை
முன்னெடுக்க சந்தர்ப்பங்களை வழங்க வேண்டுமெனக் கூறி ஜெனிவாவில்
வாக்களிப்பதிலிருந்து விலகிக் கொண்டது.
உண்மையிலேயே இது தமிழ் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்ட தீர்மானமாகும்.
நவநீதம்பிள்ளை ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை பக்கச்சார்பு கொண்டவர்.
எனவே அவர் தலைமையிலான சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை.
அத்தோடு இறையாண்மை கொண்ட நாடென்ற ரீதியில் சர்வதேச விசாரணையை நிராகரிக்கின்றோம். இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல் முடிவுகளோடு 2012ம் 2013 ஆம்
ஆண்டு தேர்தல்கள் முடிவுகளை ஒப்பீடு செய்து பார்ப்பதோடுஇ வெளிநாட்டு
அழுத்தங்கள் பொருளாதார விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து அடுத்த ஜெனிவா
கூட்டத் தொடருக்கு முகம் கொடுப்பது தொடர்பில் தீர்மானம்
எடுக்கப்படுமென்றும் மொஹான் சமரநாயக தெரிவித்தார்.
No comments:
Post a Comment