Monday, March 31, 2014
சென்னை::பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பிரசாரத்துக்காக
கட்சி நிர்வாகியும் நடிகருமான ராஜ்குமார் கொள்கை விளக்க பாடல்களை சி.டி.யாக
தயாரித்துள்ளார். இதில் 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஜோகன்
இசையமைத்துள்ளார். கார்த்திக் பாடல்களை எழுதியுள்ளார்.
இதே போல் ஜோதி ராமலிங்கமும் ஒரு சி.டி. தயாரித்துள்ளார். இந்த சி.டி.
வெளியீட்டு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது. மாநில தலைவர்
ஞானதேசிகன் தலைமை தாங்கினார். மத்திய மந்திரி ஜி.கே.வாசன் குறுந்தகடுகளை
வெளியிட்டார். அதை ஜெயந்தி நடராஜன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:_
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது மத்திய அரசு கொண்டு வந்த
திட்டங்கள்தான். இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இந்த தேர்தல் நல்ல
வாய்ப்பாக அமைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மாற்றத்தையும்,
மாற்றாம் தாய் மனப்பான்மையுடன் செயல்படாத நிலையையும் மக்களிடம் எடுத்துச்
சொல்வோம்.
நாட்டில் நிலையான ஆட்சியும், தொடர் வளர்ச்சியும், எம்மதமும் சம்மதம்
என்றும் இருப்பதையே மக்கள் விரும்புகிறார்கள். இதை காங்கிரசால் மட்டுமே
கொண்டு வரமுடியும்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா
புறக்கணித்து உள்ளது. அதற்கான காரணத்தையும் தெரிவித்து உள்ளது. அதே
நேரத்தில் இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டதற்கு மாற்றுக் கருத்து இல்லை.
எனவே இந்தியா எடுத்த முடிவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
வரும் நாட்களில் மத்திய அரசு உறுதியோடு செயல்பட்டு இலங்கை அரசு மீது கண்டிப்புடன் இருக்க வேண்டும்.
காங்கிரசில் நல்ல வேட்பாளர்கள் பலர் இருக்கிறார்கள். காங்கிரஸ் மிகப்
பெரிய தேசிய கட்சி. இதில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். எனவே
வாய்ப்பு கிடைக்காதவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
பின்னர் அவரிடம் காங்கிரஸ் நன்றிகெட்ட கட்சி என்றும், மதச்சார்பின்மையை
ஏற்று மனம் வருந்தி வந்தால் ஆதரவு தருவதாக கருணாநிதி கூறி இருப்பது பற்றி
நிருபர்கள் கேட்ட போது, தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்கு பிறகு காங்கிரஸ்
தொண்டர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். எங்கள் பாதை வெற்றிப் பாதை.
இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது காங்கிரஸ்
பேரியக்கம் மட்டும்தான். மதவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க எங்களுக்கு
பாடம் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் குமரி அனந்தன், பொருளாளர் கோவை தங்கம், யசோதா, சக்தி
வடிவேல், வில்லிவாக்கம் சுரேஷ், சுரேஷ் பாபு, டி.என்.அசோகன்,
எம்.எஸ்.திரவியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஞானசேகரன், மக்கள் தேசம் தலைவர்
சாத்தை பாக்கியராஜ், அருந்ததி மக்கள் கட்சி தலைவர் வலசை ரவிச்சந்திரன்
ஆகியோர் ஜி.கே.வாசனை சந்தித்து காங்கிரசுக்கு ஆதரவு
No comments:
Post a Comment