Monday, March 31, 2014
இலங்கை::இம்முறை அம்பாறை மாவட்டத்தில் பல்கலைக் கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 10 வரிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரத அதிதியாக இலங்கை இராணுவத்தின் 24 ஆம் படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி லெப்டிணல் கேணல் ஹரீன் வீரசிங்க மற்றும் கோமாரி 242 ஆம் படைப்பரிவின் கேணல் சிறிசாந்த ஆகியோர் கலந்து கொண்டு 36 ஆயிரம் ரூபா பண வவுச்சரை தலா ஒருவர் வீதம் 10 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் பல்கலைக்கழகம் செல்ல தெரிவு செய்யப்பட்ட 10 வரிய மாணவர்களில் அக்கரைப்பற்று, பாணம, கோளாவில் ஆகிய பிரதேசங்களில் தலா 2 பேர் வீதமும், அட்டாளைச்சேனை, நிந்தவூர், கல்முனை, சாகாமம் ஆகிய பிரதேசங்களிலிருந்து தலா 1 பேர் வீதம் இந்த புலமைப் பரிசிலை குன ஜய பதனம நிருவனத்தின் அணுசரனையில் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment