Monday, March 31, 2014

புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது!



Monday, March 31, 2014
இலங்கை::
புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் செயற்பட்டு வரும் புலி ஆதரவு அமைப்புக்களை தடை செய்வதற்கான முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட உள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் பல்வேறு பெயர்களில் இயங்கி வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறான அமைப்புக்கள் குறித்த நாடுகளின் அரசியல் கட்சிகள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதுடன், இலங்கைக்கு எதிராக சர்வதேச அரங்குகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே, புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் நிறுவனங்களை தடை செய்வதற்கு வெளிநாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது,

2009ம் ஆண்டில் இராணுவ ரீதியாக 
 
புலிகள் தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் ; புலிகளின் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் அரசாங்கம் சில திட்டங்களை வகுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போதும் சில புலி ஆதரவு அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இயங்கி வரும் புலி ஆதரவு அமைப்புக்களுக்கு இடையில் பிளவு காணப்பட்டாலும், சில முக்கியமான தருணங்களில் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment