Wednesday, April 22, 2015

அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் ஆட்சிப் பொறுப்பினை எம்மிடம் ஒப்படைக்கவும்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Wednesday, April 22, 2015
அளித்த வாக்குறுதிகளை புதிய அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாவிட்டால் ஆட்சிப் பொறுப்பினை தம்மிடம் ஒப்படைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தற்போதைய அரசாங்கத்திடம் கோரியுள்ளார். கம்பஹாவில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த பகிரங்க கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
 
இந்த அரசாங்கம் பழிவாங்கல் நடவடிக்கைகளிலேயே கூடுதல் முனைப்பு காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைப்பதுவும், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்களை பழிவாங்குவதுமே இந்த அரசாங்கத்தின் கடமையாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறான பொய்களை செய்யாது முடியாவிட்டால் ஆட்சிப் பொறுப்பினை வழங்கி வெளியேறுமாறு முன்னாள் ஜனாதிபதி கோரியுள்ளார்.
 
தற்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளதாகவும், தேயிலை, இறப்பர், நெல் மற்றும் இரத்தினக்கற்களுக்கு உரிய விலை வழங்கப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க பணமில்லை என அரசாங்கம் கூறி வருவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்ய பணம் பெற்றுக்கொள்ளும் முறைமைகள் தமக்கு தெரியும் எனவும் முடியாவிட்டால், ஆட்சியை விட்டு விலகிக் கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
 
பழிவாங்கும் செயற்பாடுகளில் மேற்கொள்ளும் போது அதிகாரம் இழந்தால் இந்த நிலைமை தமக்கும் ஏற்படும் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

போதையில் கே.பி.என் பேருந்து டிரைவர்! பயணிகள் உயிரோடு விளையாடலாமா..? அதிர்ச்சியூட்டும் வீடியோ!!


Wednesday, April 22, 2015
கே.பி.என் ட்ராவல்ஸ் என்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர் ஒருவர் குடிபோதையில் பேருந்தை ஓட்டிய போது பயணிகளால் கையும், பாட்டிலுமாய் பிடிபட்டிருக்கிறார்.

இதனை மொபைல்களில் படம் பிடித்த பயணிகள் வாட்ஸப் மூலம் உடனடியாக நண்பர்களுக்கு பரப்பியிருக்கிறார்கள்.

பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் ஓட்டுனரை நம்பித்தான் செல்கிறார்கள். ஆனால் அந்த ஓட்டுனரே போதையில் பேருந்து ஓட்டினால் பயணிகளின் மனநிலை எப்படி இருக்கும், அவர்களின் ஆவேசம் எப்படி எப்படி இருக்கும். இப்படி ஒரு வீடியோ உலா வருகிறது.
 
அந்த வீடியோவில் ஒரு கே.பி.என் பேருந்து நிற்கிறது. அதன் படிக்கட்டில் நிலைகொள்ளாத போதையில் அமர்ந்திருக்கிறார் ஒரு டிரைவர். அவரை சூழ்ந்திருக்கும் பயணிகளில் ஒருவர் அப்படியே பல்லையெல்லாம் கழட்டிடுவேன் என்கிறார். இன்னொரு பெண் ராத்திரி பன்னிரெண்டரை மணிக்கு வந்து உன்கிட்டயெல்லாம் பேசணும்னு அவசியமே இல்லை என்கிறார்.
 
அப்படி ஒரு நிதானமே இல்லாத அளவுக்கு இருந்துகிட்டு எங்களையெல்லாம் ஏத்திட்டு என்ன நம்பிக்கையில வண்டி ஓட்டிகிட்டு இருப்ப நீ... என்று ஆவேசப்படுகிறார் மற்றொரு பெண். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தும் நிதானத்தில் இல்லை அந்த டிரைவர்.

ஜெயலலிதா வழக்கில் பவானிசிங் ஆஜரானது தவறுதான்..ஆனால் விரைவில் தீர்ப்பு! உச்சநீதிமன்றம் அதிரடி!

Wednesday, April 22, 2015
ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானது தவறுதான் என்று உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் பெஞ்ச் கருத்து தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் செயல்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.

நீதிபதி மதன் பி. லோகுர், ‘பவானிசிங் நியமனம் செல்லாது’ என்றும் நீதிபதி பானுமதி ‘செல்லும்’ என்றும் தீர்ப்பளித்தனர்.
எனவே இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல சி. பாண்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் இன்று நடந்த விசாரணையில், நீதிபதிகள் கூறுகையில், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் நியமனத்தில் சில முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிகிறது.

ஆனாலும், இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் புதிதாக விசாரணை நடத்த அனுமதிக்க மாட்டோம்.
பவானி சிங் நியமனத்தை எதிர்க்கும் மனுதாரர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
 
மேலும் தற்போது இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததால் வரும் 27ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Tuesday, April 21, 2015

வெளிநாட்டு வங்கிகளில் தனக்கும், தனது மனைவி மற்றும் மகன்களுக்கு சட்டவிரோத அல்லது இரகசிய வங்கிக் கணக்குகள் எதுவும் இல்லை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ!

Tuesday, April 21, 2015
வெளிநாட்டு வங்கிகளில் தனக்கும், தனது மனைவி மற்றும் மகன்களுக்கு சட்டவிரோத அல்லது இரகசிய வங்கிக் கணக்குகள் எதுவும் இல்லை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் வெளிநாடுகளிலுள்ள வங்கிகளில் பணம் வைப்பிலிருப்பதாக, ஆளும் தரப்பினரால் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட தன்னிலை விளக்க அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
இரகசிய வங்கிக் கணக்குகள் தொடர்பில் தன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றபோதலும், அது அடிப்படை ஆதரமற்றவையாக இருக்கிறது என அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உதாரணத்திற்கு, தனது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு துபாயிலுள்ள வங்கியில் 1,064 மில்லியன் டொலர் பெறுமதியான பணம் வைப்பிலிருப்பதாக அமைச்சர் ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்திருந்தபோதிலும், அதற்கான ஆதாரங்கள் அவரால் கொடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
 
இதற்கு மேலதிகமாக மறைத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை கண்டுபிடிப்பதற்கு அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் புலனாய்வு பிரிவின் உதவியை அரசாங்கம் நாடியுள்ளதாக செய்தியொன்று வெளியாகியிருந்த நிலையில், சீசல்ஸ் தீவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை கண்டுப்பிடிப்பதற்காக விசேட குழுவொன்று அங்கு அனுப்பப்பட்டதாகவும் செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்து. இவை அனைத்தும் எவ்வித சாட்சியமும் அற்ற நிலையில் பரப்பப்படும் போலி பிரச்சாரம் என மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
இரகசிய வங்கிக் கணக்குகள் விஷயத்தில் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டு வருகின்றபோதிலும், ஆதாரங்களுடன் அவை நிரூபிக்கப்படவில்லை என்பதை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, உண்மையிலேயே இவ்வாறான கணக்குகள் இருந்திருந்தால் அவற்றை ஆதாரபூர்வமாக வெளியிட இவ்வளவு காலம் எடுத்திருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
 
தனது மகன்கள் பயன்படுத்துவதற்காக தனி ஹெலிகொப்டர்கள் கொண்டுவரப்பட்டதாகவும், அவர்களுக்கு அமெரிக்காவில் மாளிகைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் முன்னர் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்கள் போன்றே, தற்போது நிதி மோசடிகள் தொடர்பில் தேவையற்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த போலிப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்

முன்னாள் ஜனாதிபதியை லஞ்ச ஊழல் விசாரணைக்கு அழைத்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Tuesday, April 21, 2015
முன்னாள் ஜனாதிபதியை லஞ்ச ஊழல் விசாரணைக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் பத்தரமுல்ல சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதினால் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
சபாநாயகர் தலைமையில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவிருந்த கூட்டத்தினையும் நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக தெரியவருகிறது.
நாடாளுமன்ற அமர்வுகள் 15 நிமிடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
கட்சித் தலைவர்கள் சந்திப்பு நடத்தும் வகையில் இவ்வாறு நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இதனால் நாடாளுமன்றில் பதற்ற நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
நாடாளுமன்றம் 27ம் திகதி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தில் தொடர்ந்து நிலவிய பதற்ற நிலை காரணமாக எதிர்வரும் 27ம் திகதி வரை அவை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 
பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விசாரிக்கும் முடிவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நடுவே அமர்ந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம்!

Tuesday, April 21, 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லஞ்ச ஊழல் மவிசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக்கு அழைத்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மகிந்த ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபைக்கு நடுவே அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக்கு அழைத்துள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, வாசுதேவய நாணயக்கார, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
 
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லஞ்ச ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கு அழைத்ததை வன்மையாக கண்டிப்பதாகவும் அப்படி நடக்காது என்பதற்கு அரசாங்கம் நிரந்தர உத்தரவாதத்தை வழங்க வேண்டியது அவசியம் எனவும் கூறினர்.
 
விமல் வீரவன்ஸவும் வாசுதேவ நாணயக்காரவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கடுமையாக விமர்சித்தனர்.பிரதமர் நயவஞ்சக வேலை செய்வதாக வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தினார்.
பிரதமரின் தேவைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதிக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
 
இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,மகிந்த ராஜபக்சவை விசாரணைக்கு அழைத்துள்ளது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார்.
 
லஞ்ச ஆணைக்குழுவின் பணிகளில் அரசாங்கம் தலையிடாது. அது ஆணைக்குழுவின் சுதந்திரமான தீர்மானம்.சாட்சியம் ஒன்றை பெறவே முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் என்ன பிரச்சினை?. பிரச்சினைகள் இருந்தால், ராஜபக்ச அவர்களின் சட்டத்தரணிகள் உரிய நடவடிக்கையை எடுக்க முடியும் என பிரதமர் குறிப்பிட்டார்.
 
இதையடுத்து மகிந்த ராஜபக்சவை லஞ்ச ஆணைக்குழுக்கு கொண்டு செல்லக் கூடாது என கோஷமிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு நடுவில் அமர்ந்து கொண்டனர்.விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, சஜின் வாஸ் குணவர்தன, மகிந்தானந்த அளுத்கமகே, தினேஷ் குணவர்தன, நாமல் ராஜபக்ச, உதித்த லொக்குபண்டார, பந்துல குணவர்தன உட்பட சுமார் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு நடுவில் அமர்ந்து எதிர்ப்பை வெளியிட்டனர்.
 
கூட்டத்தை ஒத்திவைத்து, சபாநாயகர் செங்கோலை அப்புறப்படுத்திய பின்னரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு நடுவில் அமர்ந்திருந்தனர்.

மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடும்: மஹிந்தானந்த!

Tuesday, April 21, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வாக்குமூலமொன்றை அளிக்குமாறு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் அனைத்து நடவடிக்கைகளும் அதன் ஆணையாளர் நாயகத்தின் தேவைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகின்றது. தனியான பொலிஸ் பிரிவொன்று பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மஹிந்த ராஜபக்சவே பாதுகாத்து வந்தார்.ரணில் விக்ரமசிங்க பிரதமராக இன்று இருப்பதற்கு காரணம் மஹிந்த ராஜபக்சவே.
 
மஹிந்த ராஜபக்ச மீது கை வைக்க வேண்டாம், அது நல்லதற்கல்ல. பாதுகாப்புச் செயலாளர் மீது கை வைக்க வேண்டாம். அது நாட்டில் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓட வழியமைக்கும்.
 
 பிரதமர் காரியாலயத்தில் வாராந்தம் கூடி யாரை கைது செய்வது என ஆராயப்படுகின்றது. நீங்கள் செய்யும் நடவடிக்கைகளை எங்களுக்கு எதிராக செய்யுங்கள், மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக செய்ய வேண்டாம் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

எமது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த புதிய அரசாங்கம் முயற்சி: கோத்தபாய ராஜபக்‌ஷ!

Tuesday, April 21, 2015
புலிபயங்கரவாதிகளுக்கு எதிராக நானும் எனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்தவும் பெற்ற நற்பெயர்களுக்குக் களங்கம் ஏற்படுத்த புதிய அரசாங்கம் திட்டமிட்டு நடத்தும் நாடகமே லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை என்ற தெரிவித்திருக்கிறார் முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்‌ஷ.
 
முன்னைய ஆட்சிக் காலத்தில் தான் ஓர் அரச ஊழியராகவே இருந்தார் எனத் தெரிவித்திருக்கும் அவர் ஊதியத்துக்கு மேலாக சில ரூபாக்களையேனும் தான் சேர்க்கவில்லை என்றும் சொன்னார். வெளிநாட்டு வங்கிகளில் தான் வங்கிக் கணக்குகளையோ அல்லது இரகசிய கணக்குகளையோ வைத்திருக்கவில்லை என்றும் கூறினார்.
 
மேலும் ஹுனுப்பிட்டிய வங்கியில் மட்டுமே தனக்கு கணக்கு இருக்கிறது என்றும் அந்தக் கணக்கு 30 வருடங்களின் முன்னர் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக தொடங்கியதாகவும் கோத்தபாய மேலும் தெரிவித்தார்.

Tuesday, April 7, 2015

ரணில் - மைத்­திரி கூட்­ட­ணியில் பங்­கெ­டுக்க நாம் விரும்­ப­வில்லை,பதவி கிடைத்தால் பலமான எதிர்க்கட்சியை உருவாக்குவேன்: தினேஷ் குண­வர்­த்தன!

Tuesday, April 07, 2015
தேசிய அர­சாங்கம் எனும் சூழ்ச்சிக் கூட்­ட­ணியில் எம்மை பங்­கு­தா­ர­ராக்க முயற்­சிக்­கின்­றனர். ஆனால் ரணில் - மைத்­திரி கூட்­ட­ணியில் பங்­கெ­டுக்க நாம் விரும்­ப­வில்லை. பாரா­ளு­மன்­றத்தில் தனித்தே செயற்­ப­டு­கின்றோம் என முன்னாள் அமைச்­சரும் மஹிந்­தவை ஆத­ரிக்கும் அமைப்பின் முக்­கி­யஸ்­த­ரு­மான தினேஷ் குண­வர்­த்தன தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்சி தலைவர் பதவி எனக்கு கிடைக்­கு­மாயின் பல­மான எதி­ர­ணி­யினை உரு­வாக்­குவேன் என்றும் குறிப்­பிட்டார்.பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்கட்­சித்­த­லைவர் யார் என்­பது இன்று பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டரில் சபா­நா­ய­கரால் அறி­விக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் எதிர்க்­கட்சி தலைவர் தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

அனைத்து கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்து தேசிய அர­சாங்­கத்­தினை அமைப்­ப­தினால் நல்­லாட்­சி­யினை ஏற்­ப­டுத்தி விட முடி­யாது. ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் ஒரு அர­சாங்­கத்தில் இருப்­ப­தனால் இவர்கள் ஆட்­சி­யினை நல்­லாட்­சி­யென குறிப்­பி­ட­மு­டி­யாது.

எம்­மையும் தேசிய அரசின் கூட்­ட­மைப்பின் பங்­கு­தா­ர­ராக மாற்­றிக்­கொண்டு எதி­ரி­களை அடக்­கவே முயற்­சிக்­கின்­றனர். அமைச்சுப் பத­வி­க­ளுக்கு ஆசைப்­பட்டு நாட்டை சீர­ழிக்க ஒரு­போதும் நாம் துணை­போக மாட்டோம். எமது கூட்­டணி மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் கொண்டு வந்து நாட்டை பலப்­ப­டுத்­தவே முயற்­சிக்­கின்­றது. அதற்­க­மைய பாரா­ளு­மன்­றத்­திலும் பல­மாக செயற்­பட வேண்­டி­யுள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரின் கூட்­ட­ணியில் சேர்ந்து பய­ணிப்­பதை விடவும் தனித்து பய­ணிப்­ப­தற்கே விரும்­பு­கின்றோம்.
அதே­போன்று பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்­சி­யாக நாம் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றோம். இன்றும் பல­மான எதிர்க்­கட்­சி­யாக நாம் உரு­வா­கினால் எம்­முடன் இணங்கி செயற்­பட பலர் தயா­ராக இருக்­கின்­றனர். எனவே பாரா­ளு­மன்றக் கூட்­டத்தில் இன்று சபா­நா­யகர் தெரி­விக்கும் கருத்­திற்கு அமை­யவே அனைத்து தீர்­மா­னங்­களும் முன்­னெ­டுக்­கப்­படும்.

சபா­நா­ய­கரின் தீர்­மா­னங்­க­ளுக்­க­மைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி பதவியினை எமக்கு வழங்கினால் அதனை சரியாக செய்து காட்டுவோம். அதேபோல் பாராளுமன் றத்தின் பலமான எதிர்க்கட்சியாக உருவாகி இன்று நடந்து கொண்டிருக்கும் அநீதிகளை தட்டிக் கேட்போம் எனவும் அவர் தெரிவித் தார்.

இந்­திய உளவுப் பிரி­வி­ன­ருக்கு முன்ப­தாகவே இலங்­கையில் ''ஜிகாத்'' முஸ்லிம் தீவி­ர­வாதம் தலை­தூக்­கு­வ­தாக எச்­ச­ரிக்கை விடுத்தோம்: பொது பலசேனா!

Tuesday, April 07, 2015
இந்­திய உளவுப் பிரி­வி­ன­ருக்கு முன்ப­தாகவே இலங்­கையில் ''ஜிகாத்'' முஸ்லிம் தீவி­ர­வாதம் தலை­தூக்­கு­வ­தாக எச்­ச­ரிக்கை விடுத்தோம். ஆனால் கடந்த ஆட்­சி­யா­ளர்கள் கண்­டு­கொள்­ள­வில்லை. இன்­றையஆட் ­சி­யா­ளர்­களும் கண்­களை மூடிக்­கொண்டே உள்­ளனர் என குற்றம் சாட்டும் பொது பலசேனா. இனி­மே­லா­வது ''ஜிகாத்''தை தடை­செய்ய அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென் றும் அவ்­வ­மைப்பு தெரி­வித்­தது.

இது தொடர்­பாக பொது பல சேனாவின் நிர்­வாகப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே மேலும் தெரி­விக்­கையில், இலங்­கைக்குள் மெது­வாக ஊடு­ரு­விய முஸ் லிம் ''ஜிகாத்'' தீவி­ர­வாதம் இன்று நாடு முழு­வதும் வியா­பித்து விட்­டது. இன்று அவ்­வி­யக்கம் இந்­தி­யாவை அழிப்­ப­தற்கும் தாக்­கு­தல்­களை நடத்­தவும் திட்­ட ங்­களை தீட்டி வரு­வ­தா­கவும் இங்கு அவ்­வி­யக்­கத்தின் நட­வ­டிக்­கைகள் தீவி­ர­ம­டைந்­துள்­ள­தா­கவும் இந்­திய உளவுப் பிரி­வினர் எமது நாட்­டுக்கு அறி­வித்­துள்­ளனர்.

இவ் அறிவிப்பை மதிக்­காமல் இருக்­க­லா­காது. எனவே, அர­சாங்­கமும் எமது உளவுப் பிரி­வி­னரும் உஷாராக வேண்டும். ஜிகாத் தீவிரவாத அமைப்பை இங்கு தடை செய்ய வேண்டுமென்றும் டிலந்த விதா னகே தெரிவித்தார்.

நியாயம் கிடைக்கவில்லை...(புலி பினாமி) திருமாவளவன் மீது கோவை பெண் கவிதா மீண்டும் பரபரப்பு புகார் - வீடியோ!!




Tuesday, April 07, 2015
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் (புலி பினாமி) தொல்.திருமாவளவன் மீது கோவையை சேர்ந்த பெண் மீண்டும் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கோவையை சேர்ந்த கவிதா(34) என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மீது சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திலும் கோவை கமிஷனர் அலுவலகத்திலும் ஏற்கெனவே புகார்கள் கொடுத்துள்ளார்.
 
தன்னுடன் நெருக்கமாக பழகிவிட்டு, திருமணம் செய்ய மறுப்பதாக திருமாவளவன் மீது அவர் புகார் மனுவில் கூறி இருந்தார். இந்த நிலையில் இன்று மூன்றாவது முறையாக சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் திருமாவளவன் மீது கவிதா மீண்டும் புகார் அளித்தார்.
 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "திருமாவளவன் கடந்த 4 1/2 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் பழகத் தொடங்கினார். அவருடன் பழகிய பிறகு என் முதல் கணவரை பிரிந்து விட்டேன். தற்போது ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறேன்.

என்னுடன் நெருங்கி பழகிய திருமாவளவன் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். உன்னைத் திருமணம் செய்தால் என்னால் அரசியல் நடத்த முடியாது என்று கூறுகிறார்.

ரூ. 20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை என்னிடம் இருந்து திருமாவளவனும் அவரது ஆட்களும் அபகரித்து விட்டனர். அதுமட்டுமின்றி என்னிடம் உள்ள கோடிக்கணக்கான மற்ற சொத்துக்களையும் பறிக்க முயற்சி செய்கிறார்கள். இது குறித்து நான் பல முறை புகார் அளித்தும் பலனில்லை.

இதனையடுத்து அசோக் நகரில் உள்ள திருமாவளவனின் அலுவகத்தில் இன்று முதல் நீதிகிடைக்கும் வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளேன்" என்று தெரிவித்தார்.
 
கவிதாவின் இந்த அதிரடி முடிவை தொடர்ந்து, அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் அலுவலம் முன்பு காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஆந்திரா போலீசின் கொலைவெறி: தமிழகத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் உள்பட 20 பேர் சுட்டுப் படுகொலை!!

Tuesday, April 07, 2015
ஆந்திராவில் அம்மாநில போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தமிழகத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் உள்பட 20 தொழிலாளர்கள் உயிரிழந்தாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
ஆந்திர மாநிலம், திருப்பதியில் சேஷாசல வனப்பகுதியில் உள்ள ஈசகுண்டாவில் செம்மரங்களை தமிழக தொழிலாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் வெட்டுவதாக அம்மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆந்திர மாநில போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
 
அப்போது தொழிலாளர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. தொழிலாளர்கள் கல்வீசி தாக்கியதில் இரண்டு போலீசார் படுகாயம் அடைந்ததாகவும், இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் தொழிலளார்கள் 20 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இருதரப்புக்கும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை மோதல் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே கிடந்துள்ளது. ஆந்திர மாநில செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜி காந்தாராவ் தலைமையிலான போலீசார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.
 
துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 12 பேர். இவர்கள் திருவண்ணாமலை, வேலூர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.. துப்பாக்கிச் சூட்டில் சர்வதேச செம்மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த நபரும் உயிரிழந்தார். உயிரிழந்த 7 பேரை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.