Wednesday, April 22, 2015
அளித்த வாக்குறுதிகளை புதிய அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாவிட்டால் ஆட்சிப் பொறுப்பினை தம்மிடம் ஒப்படைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தற்போதைய அரசாங்கத்திடம் கோரியுள்ளார். கம்பஹாவில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த பகிரங்க கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த அரசாங்கம் பழிவாங்கல் நடவடிக்கைகளிலேயே கூடுதல் முனைப்பு காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைப்பதுவும், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்களை பழிவாங்குவதுமே இந்த அரசாங்கத்தின் கடமையாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பொய்களை செய்யாது முடியாவிட்டால் ஆட்சிப் பொறுப்பினை வழங்கி வெளியேறுமாறு முன்னாள் ஜனாதிபதி கோரியுள்ளார்.
தற்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளதாகவும், தேயிலை, இறப்பர், நெல் மற்றும் இரத்தினக்கற்களுக்கு உரிய விலை வழங்கப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க பணமில்லை என அரசாங்கம் கூறி வருவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்ய பணம் பெற்றுக்கொள்ளும் முறைமைகள் தமக்கு தெரியும் எனவும் முடியாவிட்டால், ஆட்சியை விட்டு விலகிக் கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
பழிவாங்கும் செயற்பாடுகளில் மேற்கொள்ளும் போது அதிகாரம் இழந்தால் இந்த நிலைமை தமக்கும் ஏற்படும் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment