Monday, May 04, 2015
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசியல்
பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையிலான எந்தவொரு தேர்தல் திருத்த
யோசனைக்கும் ஆதரவளிக்கப்பட மாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
அறிவித்துள்ளது.
புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையில் வடக்கு கிழக்கு அரசியல் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் 15 பாராளுமன்ற உறுப்பினர்களும், கிழக்கு மாகாணத்தில் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் காணப்படும் 160 தேர்தல் தொகுதிகளும் அதே விதமாக காணப்பட்டால் மட்டுமே 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment