Monday, May 04, 2015
2016ம் ஆண்டில் நடைபெறவுள்ள மே தினத்தை பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொண்டாடுவோம் என முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே தினத்தில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக மகிந்த ராஜபக்சவும் காணப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் கீழ் கொண்டாடுவோம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்த ஐக்கிய தேசியக் கட்சி தற்போது மே தின கூட்டத்தை நடத்தி, தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து பேசுவது நகைப்பை ஏற்படுத்துகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment