Thursday, May 7, 2015

எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் குருணாகலில் நாளை மகிந்த ஆதரவுக் கூட்டம் நடத்தப்படும்: மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Thursday, May 07, 2015
எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் குருணாகலில் நாளை மகிந்த ஆதரவுக் கூட்டம் நடத்தப்படும் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தனை பெயரிட வேண்டுமெனக் கோரி நாட்டின் பல பகுதிகளிலும் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
 
எந்தவொரு அரசியல் காரணிகள் தேவைகளுக்காக இந்தக் கூட்டம் நிறுத்தப்பட மாட்டாது. கடந்த கூட்டங்களை விடவும் அதிகளவானவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென பிரசன்ன ரணதுங்க கோரியுள்ளார்.

No comments:

Post a Comment