Wednesday, April 22, 2015
கே.பி.என் ட்ராவல்ஸ் என்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர் ஒருவர் குடிபோதையில் பேருந்தை ஓட்டிய போது பயணிகளால் கையும், பாட்டிலுமாய் பிடிபட்டிருக்கிறார்.
இதனை மொபைல்களில் படம் பிடித்த பயணிகள் வாட்ஸப் மூலம் உடனடியாக நண்பர்களுக்கு பரப்பியிருக்கிறார்கள்.
பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் ஓட்டுனரை நம்பித்தான் செல்கிறார்கள். ஆனால் அந்த ஓட்டுனரே போதையில் பேருந்து ஓட்டினால் பயணிகளின் மனநிலை எப்படி இருக்கும், அவர்களின் ஆவேசம் எப்படி எப்படி இருக்கும். இப்படி ஒரு வீடியோ உலா வருகிறது.
அந்த வீடியோவில் ஒரு கே.பி.என் பேருந்து நிற்கிறது. அதன் படிக்கட்டில் நிலைகொள்ளாத போதையில் அமர்ந்திருக்கிறார் ஒரு டிரைவர். அவரை சூழ்ந்திருக்கும் பயணிகளில் ஒருவர் அப்படியே பல்லையெல்லாம் கழட்டிடுவேன் என்கிறார். இன்னொரு பெண் ராத்திரி பன்னிரெண்டரை மணிக்கு வந்து உன்கிட்டயெல்லாம் பேசணும்னு அவசியமே இல்லை என்கிறார்.
அப்படி ஒரு நிதானமே இல்லாத அளவுக்கு இருந்துகிட்டு எங்களையெல்லாம் ஏத்திட்டு என்ன நம்பிக்கையில வண்டி ஓட்டிகிட்டு இருப்ப நீ... என்று ஆவேசப்படுகிறார் மற்றொரு பெண். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தும் நிதானத்தில் இல்லை அந்த டிரைவர்.
No comments:
Post a Comment