Wednesday, April 22, 2015
ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானது தவறுதான் என்று உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் பெஞ்ச் கருத்து தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் செயல்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.
நீதிபதி மதன் பி. லோகுர், ‘பவானிசிங் நியமனம் செல்லாது’ என்றும் நீதிபதி பானுமதி ‘செல்லும்’ என்றும் தீர்ப்பளித்தனர்.
எனவே இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல சி. பாண்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் இன்று நடந்த விசாரணையில், நீதிபதிகள் கூறுகையில், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் நியமனத்தில் சில முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிகிறது.
ஆனாலும், இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் புதிதாக விசாரணை நடத்த அனுமதிக்க மாட்டோம்.
பவானி சிங் நியமனத்தை எதிர்க்கும் மனுதாரர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததால் வரும் 27ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment