Tuesday, April 07, 2015
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் (புலி பினாமி) தொல்.திருமாவளவன் மீது கோவையை சேர்ந்த பெண் மீண்டும் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவையை சேர்ந்த கவிதா(34) என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மீது சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திலும் கோவை கமிஷனர் அலுவலகத்திலும் ஏற்கெனவே புகார்கள் கொடுத்துள்ளார்.
தன்னுடன் நெருக்கமாக பழகிவிட்டு, திருமணம் செய்ய மறுப்பதாக திருமாவளவன் மீது அவர் புகார் மனுவில் கூறி இருந்தார். இந்த நிலையில் இன்று மூன்றாவது முறையாக சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் திருமாவளவன் மீது கவிதா மீண்டும் புகார் அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "திருமாவளவன் கடந்த 4 1/2 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் பழகத் தொடங்கினார். அவருடன் பழகிய பிறகு என் முதல் கணவரை பிரிந்து விட்டேன். தற்போது ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறேன்.
என்னுடன் நெருங்கி பழகிய திருமாவளவன் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். உன்னைத் திருமணம் செய்தால் என்னால் அரசியல் நடத்த முடியாது என்று கூறுகிறார்.
ரூ. 20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை என்னிடம் இருந்து திருமாவளவனும் அவரது ஆட்களும் அபகரித்து விட்டனர். அதுமட்டுமின்றி என்னிடம் உள்ள கோடிக்கணக்கான மற்ற சொத்துக்களையும் பறிக்க முயற்சி செய்கிறார்கள். இது குறித்து நான் பல முறை புகார் அளித்தும் பலனில்லை.
இதனையடுத்து அசோக் நகரில் உள்ள திருமாவளவனின் அலுவகத்தில் இன்று முதல் நீதிகிடைக்கும் வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளேன்" என்று தெரிவித்தார்.
கவிதாவின் இந்த அதிரடி முடிவை தொடர்ந்து, அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் அலுவலம் முன்பு காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment