Tuesday, April 07, 2015
ஆந்திராவில் அம்மாநில போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தமிழகத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் உள்பட 20 தொழிலாளர்கள் உயிரிழந்தாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆந்திர மாநிலம், திருப்பதியில் சேஷாசல வனப்பகுதியில் உள்ள ஈசகுண்டாவில் செம்மரங்களை தமிழக தொழிலாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் வெட்டுவதாக அம்மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆந்திர மாநில போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது தொழிலாளர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. தொழிலாளர்கள் கல்வீசி தாக்கியதில் இரண்டு போலீசார் படுகாயம் அடைந்ததாகவும், இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் தொழிலளார்கள் 20 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இருதரப்புக்கும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை மோதல் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே கிடந்துள்ளது. ஆந்திர மாநில செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜி காந்தாராவ் தலைமையிலான போலீசார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 12 பேர். இவர்கள் திருவண்ணாமலை, வேலூர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.. துப்பாக்கிச் சூட்டில் சர்வதேச செம்மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த நபரும் உயிரிழந்தார். உயிரிழந்த 7 பேரை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment