Tuesday, April 21, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வாக்குமூலமொன்றை அளிக்குமாறு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் அனைத்து நடவடிக்கைகளும் அதன் ஆணையாளர் நாயகத்தின் தேவைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகின்றது. தனியான பொலிஸ் பிரிவொன்று பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மஹிந்த ராஜபக்சவே பாதுகாத்து வந்தார்.ரணில் விக்ரமசிங்க பிரதமராக இன்று இருப்பதற்கு காரணம் மஹிந்த ராஜபக்சவே.
மஹிந்த ராஜபக்ச மீது கை வைக்க வேண்டாம், அது நல்லதற்கல்ல. பாதுகாப்புச் செயலாளர் மீது கை வைக்க வேண்டாம். அது நாட்டில் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓட வழியமைக்கும்.
பிரதமர் காரியாலயத்தில் வாராந்தம் கூடி யாரை கைது செய்வது என ஆராயப்படுகின்றது. நீங்கள் செய்யும் நடவடிக்கைகளை எங்களுக்கு எதிராக செய்யுங்கள், மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக செய்ய வேண்டாம் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment