Saturday, November 30, 2013

பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது!

Saturday, November 30, 2013
இலங்கை::இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும் இடையில் புதுடில்லியில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும்.
 
இச்சந்திப்பு நேற்று  மாலை புதுடில்லியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.  ஆனால் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து எதுவும் தெரியவரவில்லை. 

இலங்கையில் பொதுநலவாய நாடுகள் நடந்து முடிந்ததன் பின் இலங்கை உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இந்தியா சென்றுள்ளார். 

இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாங்கள் பிரித்தானியாவின் இறையாண்மை உரிமையை மதிக்கின்றோம்: இதனை போலவே ஏனையோரும் நமது நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும்: கிறிஸ் நோனிஸ்!

Saturday, November 30, 2013
இலங்கை::பெரும் எண்ணிக்கையிலான பணய கைதிகளை புலிகளிடம் இருந்து இலங்கை அரசு மீட்டு அவர்களுக்கு மாறுவாழ்வு வழங்கியுள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் தெரிவித்தார்.
 
பி.பி.சி. தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நேர்ணாலில் அவர் இதனை கூறினார்.
 
இலங்கையில் மோதல்களுக்கு பின்னர் நல்லிணக்கம, புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உள்நாட்டு செயல்முறை மற்றும் சர்வதேச செயல் முறை ஆகியவற்றுக்கு இடையில் இருக்கும் வேறுபாடுகளை வரையறை செய்ய வேண்டும்.
 
நாங்கள் பிரித்தானியாவின் இறையாண்மை உரிமையை மதிக்கின்றோம். இதனை போலவே ஏனையோரும் நமது நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
 
இலங்கை இறையாண்மையுள்ள சுதந்திரமான நாடு. இயற்கையாக நீங்கள் எதிர்பார்க்கும் மரியாதையையே நாங்களும் பிரித்தானியாவிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம் என கிறிஸ் நோனிஸ் தெரிவித்தார்.
 
 

புலிகளுடன் தொடர்புடைய கத்தோலிக்க மதகுரு ஒருவர் தொடர்பான விசாரணைகளை இந்திய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்!

Saturday, November 30, 2013
சென்னை::புலிகளுடன் தொடர்புடைய கத்தோலிக்க மதகுரு ஒருவர் தொடர்பான விசாரணைகளை இந்திய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
 
அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு சென்ற ஒரு மதகுரு தொடர்பில் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த மதகுரு பற்றிய தகவல்களை தமிழக அரசாங்கம் உள்துறை அமைச்சிற்கு வழங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி கோரியுள்ளார்.

குறித்த மதகுருவினை அமெரிக்க எப்.பி.ஐ புலனாய்வுப் பிரிவினர் குற்றவாளியாக பட்டியல் படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளுடன் குறித்த மதகுருவிற்கு தொடர்பு
இருப்பதாகத் தெரிவித்துள்ளார்..
 
தமிழ் நாட்டில் தலைமறைவாக வாழ்கின்ற  புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
 
கத்தோலிக்க பாதிரியாரான கஸ்பார்ராஜ், புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்களை விநியோகித்ததாக கூறி, அமெரிக்காவின் எப்.பீ.ஐ. புலனாய்வு தரப்பினர் நியூயோர்க் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
 
இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருப்பதாகவும், அவருக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
அவர் தற்போது தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகவும், அண்மையில் இந்தியாவின் என்.டீ.டி.வி தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.
 
அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய உள்துறை அமைச்சு, தமிழக அரசாங்கத்திடம் கோரியுள்ள நிலையில், இதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த மதகுருவிற்கு எதிராக பிடிவிராந்து உத்தரவினை பிறப்பித்துள்ளதாக் குறிப்பிட்டுள்ளார்.

இறுத்திக்கட்டம் ஆவணப்படம் பிரஸ்ஸலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக திரையிடப்பட்டது: யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் புலிகள் இயக்கத்தின் பெண் உறுப்பினர் வாழ்வை விளக்கும் 'இறுத்திக்கட்டம்!

Saturday, November 30, 2013
இலங்கை::இலங்கையில் நடந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் புலிகள் இயக்கத்தின் ஒரு முன்னாள் பெண் உறுப்பினர் வாழ்வை விளக்கும் 'இறுத்திக்கட்டம்' ஆவணப்படம் பிரஸ்ஸலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக திரையிடப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றிலுள்ள இலங்கை நண்பர்கள் குழுவின் தலைவரான ஜொப்ரேவான் ஓடன் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தார்.

இந்த ஆவணப்படத்தை பார்த்தவர்களில்இ இலங்கையின் பெல்ஜியம் லக்ஷம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கான தூதுவரான பி.எம்.அம்ஸாஇ இலங்கையில் 11 வருடங்கள் வாழ்ந்த பிரித்தானிய பிரசையான றிச்சாட் மன்டிஇ ஆகியோரும் அடங்குவர்.

இந்த படத்தில்  புலிகளினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு உண்டான அவலங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினர் வழங்கிய இரக்கமான அன்பான கவனிப்புகள் சித்திரிக்கப்பட்டுள்ளன.

புலிகளினால் நடத்தப்பட்ட செஞ்சோலையில் வளர்ந்த புலி பெண் உறுப்பினர் ஒருவரை மையமாக கொண்டே இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெயவதனி எனும் இப்பெண் மறுபக்கத்தை தீயதாகவே பார்க்கும் வகையில் வளர்க்கப்பட்டவர்.

இந்த படம் ஜெயவதனி பற்றியதாயினும் இது தனி ஒருவரின் வாழ்க்கை சரித்திரத்துக்கும் அப்பால் செல்கின்றது. இதில் இவரைப்போன்ற பலரின் கதி காட்டப்பட்டுள்ளது. இது மீட்சிபெற முயலும் இலங்கையிலுள்ள மக்களின் கதையாகும்.

இவர்களுக்கு ஆழமான அனுதாபமும்  உதவியும் தேவை இதனால்தான் இந்த படத்தை தயாரித்தேன் என இந்த படத்தின் இயக்குநர் ஜீவன் சந்திமல் கூறினார்.

இந்த படத்தை பார்த்தவர்கள் ஒரு நீதியான சமநிலைப்பட்ட ஊடக கவனிப்பு என்ற நேக்கில் இந்தப் படத்தை இயன்றளவு பல இடங்களிலும் திரையிட வேண்டுமெனும் கருத்தை வெளியிட்டனர்.

பாராளுமன்றத்தில் நம்பிக்கை வைக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் பாராளுமன்றத்தை மலினப்படுத்தும் வகையிலேயே கருத்துக்களை வெளியிடுகின்றனர்: கெஹெலிய ரம்புக்வெல்ல!

Saturday, November 30, 2013
இலங்கை::பாராளுமன்றத்தை மலினப்படு த்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொடர்ச்சியான செயல் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதன் ஒரு நடவடிக்கையாகவே பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அக்கட்சி நிராகரித்து வருகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சிறுபான்மையினருக்கு பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்குச் சுதந்திரமில்லை என்று கூறும் சம்பந்தன் எம்.பி. அந்தக் கூற்றை எங்கிருந்து கொண்டு வெளியிட்டார் என கேட்க விரும்புகிறேன். பாராளுமன்றத்திலிருந்து கொண்டே இக்கூற்றை வெளியிடும் அவரின் ஏனைய கூற்றுக்களும் ஏற்கக் கூடியதல்ல என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வரவு  செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. இரா. சம்பந்தன் பாராளுமன்றத் தெரிவுக் குழு மூலம் தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்பது நம்பிக்கையற்றது என்றும் அக்குழு காலத்தைக் கடத்தும் செயல் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார். சம்பந்தன் எம்.பி.யின் கூற்றுக்கள் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எக்காலத்திலும் உயர் கெளரவம் மிக்க பாராளுமன்றத்தை மலினப்படுத்தும் வகையிலேயே செயற்பட்டு வந்துள்ளனர். அதன் ஒரு அம்சமாகவே பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அவர்கள் நிராகரித்துஅக்குழுவிற்கு சமுகம் தருவதை தவிர்த்து வருகின்றனர்.

பாராளுமன்றம் என்பது உயர் கெளரவம் மிக்கதும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்குப் பொருத்தமான இடம் என்பதுமே அரசாங்கத்தின் நம்பிக்கை. அந்த வகையிலேயே பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.பாராளுமன்றத்தில் நம்பிக்கை வைக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் பாராளுமன்றத்தை மலினப்படுத்தும் வகையிலேயே கருத்துக்களை வெளியிடுகின்றனர். அதன் ஒரு அம்சமாகவே சம்பந்தன் எம்.பி.யின் கூற்றும் அமைந்துள்ளது.

நாட்டில் சகல இன, மத, பிரதேச மக்களும் சமமாகவே மதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான தேவைகள் அனைத்தையும் சமமாகவே அரசாங்கம் வழங்கி வருகிறது. எந்த விதத்திலும் எத்தகைய உரிமையும் மறுக்கப்படவில்லை.  என்பதை அனைவரும் அறிவர். இந்நிலையில் சம்பந்தன் எம்.பியின் கூற்று புதிதல்ல. பாராளுமன்றத்தை மலினப்படுத்தும் நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சில நாடுகள் பிரபாகரனை அழிக்க விரும்பினவே தவிர மக்கள் குறித்து எவ்வித கரிசனையும் கொள்ளபில்லை: பசில் ராஜபக்ஷ!

Saturday, November 30, 2013
இலங்கை::எமது உள்ளூர் பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம். இதற்காக நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எமது உள்நாட்டு பிரச்சினைகளை எம்மால் மாத்திரமே தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில்;

தமது எதிரியான பிரபாகரனை எம்மூலம் அழிக்க வேண்டும் என்ற நோக்குடனே சில சர்வதேச நாடுகள் இருந்தனவே தவிர பொது மக்கள் குறித்து அவர்களுக்கு எந்த கரிசனைகளும் இருக்கவில்லை.

வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் வடக்கிற்கு செல்ல ஆரம்பத்தில் அச்சம் கொண்டிருந்தனர். இன்று கெமரூன் போன்றவர்கள் கூட எவ்வித அச்சமின்றி வடக்கிற்கு சென்று வரும் நிலைமையை நாம் ஏற்படுத் தியுள்ளோம்.

அதேபோன்று சகல தரப்பினரும் அச்சமின்றி பங்கு கொள்ளும் வகையில் முதற் தடவையாக ஜனநாயக ரீதியில் தேர்தல் வடக்கில் இம்முறையே நடந்து முடிந்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வடபகுதி மக்களின் நலன் கருதி பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப் பட்டுள்ளது. வடக்கின் அபிவிருத்திக்கும் செயற்பாடுகளுக்கும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கும் படை வீரர்களின் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 80 இலங்கையர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ( இன்டர்போல் ) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது!

Saturday, November 30, 2013
இலங்கை::பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 80 இலங்கையர்களை கைது செய்வதற்காக சர்வதேச
பொலிஸார் ( இன்டர்போல் ) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .
 
இவர்கள் மீது பயங்கரவாத நடவடிக்கைகள் , நிதி மோசடிகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது .
 
இவர்கள் அனைவரும் இலங்கைக்கு வெளியில் பல நாடுகளில் வசித்து வருகின்றனர் . அவர்களில் நான்கு பேர் பிரித்தானியாவில் வசித்து வருகின்றனர் என இன்டர்போல் தெரிவித்துள்ளது .
 
பிரித்தானியாவில் இருக்கும் நான்கு பேரில் ஒருவர் வங்கி உரிமையாளர் எனவும் இவர் விடுதலைப் புலிகளின் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தலைவர் என்றும் கூறப்படுகிறது .
 
மேலும் இவர்களை கைது செய்ய ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் , இன்டர்போல் பொலிஸாருக்கு உதவி செய்கின்றனர் .

 

6 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு!

Saturday, November 30, 2013
சென்னை::ஆந்திராவில் விசாகப்பட்டினம் பகுதியில் எல்லை தாண்டி வந்து இந்தியக் கடல் பகுதிக்குள் மீன் பிடித்த 6 இலங்கை மீனவர்களை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:_
 
கடலோரக் காவல் படையினர் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த மீன்பிடிப் படகு, இந்தியக் கடல் எல்லைக்குள் பயணித்தது தெரியவந்தது.
 
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்தப் படகில் இருந்தவர்கள் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் என்பது தெரிந்தது. மேலும் அவர்களது பெயர்கள் டில்லன் (24),சுமித் (32), சுரைத் (25), சஞ்சய்யா (25) ரண்டிகா (26), ஜீவன் (26) என்றும், அவர்கள் அத்திமீறி இந்தியக் கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வந்ததும் தெரிய வந்தது.
 
இதையடுத்து கடலோரக் காவல் படையினர் அவர்களைப் பிடித்து கொண்டு வந்து சென்னை துறைமுகம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 6 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்

தி.மு.க. அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: அ.தி.மு.க. புகார்!!

Saturday, November 30, 2013
சென்னை::ஏற்காடு தொகுதியில் தோல்வி பயத்தில் தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுவதாக இரவோடு இரவாக பணம், வேட்டி, சேலைகள், மதுபானங்களை வாக்காளர்களுக்கு விநியோகிப்பதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்திடம் அ.தி.மு.க. சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த கடிதத்தை தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் இந்த புகார் மனுவை தலைமை தேர்தல் ஆணையரிடம் அளித்தனர். 
 
அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் தக்க நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித்தார். 
இது குறித்து அ.தி.முக தலைமை கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_
 
ஏற்காடு தொகுதியில் தோல்வி பயத்தால் தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் வன்முறை மற்றும் அராஜகத்தில் ஈடுபடுவது குறித்து கழகப் பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 27ம் தேதி அன்றுதலைமை ம் த ர் த ல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 
 
இக்கடிதத்தை கழக கொள்கை பரப்புச் செயலாளரும், கழக மக்களவை குழு தலைவருமான மு.தம்பிதுரை தலைமையில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் கொடுத்தனர். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையர் இது குறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி அளித்தார். தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கழகப் பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டில் ஏற்காடு சட்டமன்ற தொதிக்குள் தி.மு.க.வின் தேர்தல் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தங்களுடைய கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். கடந்த 2009ம் ஆண்டு
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் நடத்திய அராஜகத்தைப் போன்று ஏற்காடு தொகுதிகளிலும் செய்து வருகின்றனர்.
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி மற்றும் எஸ்.ஆர்.சிவலிங்கம் தூண்டு தலின்பேரில் தொகுதியில் உள்ள தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் போன்றவற்றை கொடுத்து வருகின்றனர்.
 
முன்னாள் தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவும், அவரது ஆதரவாளர்களும் காலை 4 மணி அளவில் வாக்காளர்களுக்கு ஓட்டு ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் விநியோகித்து வருகின்றனர். கடந்த 22ந் தேதி எ.வ.வேலு பணம் விநியோகித்தபோது, விநி யோகித்ததை கண்டு பிடித்து தேர்தல் அதி காரிகளிடம் தெரிவித் தோம்.
 
ஆ ன ட் ல் அ வ ர் களால் அதை தடுக்க முடியவில்லை. அதிகாலை நேரத்தில் பணம் விநியோகிப்பதால் தேர்தல் அதிகாரிகளால் அதை கண்டறியமுடியவில்லை. தொகுதி முழுவதும் தி.மு.க. குண்டர்களையும், ரவுடிகளையும் ஏவி விட்டு பணம் விநியோகம் செய்தனர்.
 
டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்தவர் கள் அப் பகுதியில் உள்ள பஞ்சாயத்து ஒன்றியத் தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்களின் உதவியோடு வாக்காளர் களுக்கு பணம் கொடுப்ப தோடு, அப்பாவி வாக்காளர்களை மிரட்டவும் செய்கின்றார்கள். 
தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று வாக்காளர்களை மிரட்டு கிறார்கள்.
 
பல இடங்களில் இது போன்ற வன்முறை மற்றும் அராஜகத்தை அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26ந் தேதி தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தபோது அதை தடுத்த கழகத்தைச் சேர்ந்த மணிகண்டன் என் பவரை பெரிய கவுண்டா புரம் என்ற கிராமத்தில் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் ந் ச ய் த தவறுகளை மறைக்க கழகத்தின் மீது தி.மு.க.வினர் தவறான குற் ற ச் ச ட்ட்டுக் களை சுமத்தி வருகின்றனர்.
 
கடந்த 2009ம் ஆண்டு திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க.வினர் எத்தகைய முறைகேடுகள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டார்களோ, அதே போன்று ஏற்காடு சட்ட மன்ற தொகுதியிலும் செய்து பழியை கழகத்தின் மீது சுமத்தி வருகின்றனர். தி.மு.க.வினர் கொடுத்த பொய் புகாரின் அடிப்படையில் தமிழக அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, பா.வளர்மதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மு.தம்பிதுரை ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உண்மையில் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதா ர மற்றவை என்பதை உறுதி யுடன் தெரிவித்துக் கொள் கிறேன். 
 
தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு, தேர்தல் ஆணை யத்திடம் கழகத்தைப்பற்றி தவறான தகவல்கள் அடங்கிய மனுவை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்திருக்கிறார்கள். தங்கள் தவறை மறைப்பதற்காக அவர் எங்கள் மீது திசை திருப்பியுள்ளார். ஏற்காடு தொகுதியில் தி.மு.க. எந்த அளருக்கு விதிமுறைகளை மீறியுள்ளது என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
 
தி.மு.க. எம்.பி. கனிமொழி இத்தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தபோது அவரது காருக்கு பின்னால் 100 கார்கள் அணிவகுத்து வந்தனர். அதன் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன் சகோதரி தேன்மொழி புடவை களை த ன் காரில் வைத்துக்கொண்டு வ ட் க் க ட் ள ர் களுக் கு விநியோகம் செய்தபோது கையும், களவுமாக பிடிபட்டார். அந்த காரில் 800 புடவைகள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். வ_ழக்கு பதிவு செய்தும் யாரும் கைது செய்யப்படவில்லை.
 
தி.மு.க.வைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் வேட்டிகளை விநியோகம் செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
 
இதேபோன்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தகாக ஆதிசங்கரர் எ ம் . பி . யு ம் ம ற் று ம் தி.மு.க.வினர் மீது வ_ழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேபோல் தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலுசின்னகவுண்டாபுரம் என்ற ஊரில் வாக்காளர்கள் 50 பேருக்கு பணம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்டது. அப்போது 21 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டும் அவர் கைது செய்யப்படவில்லை. வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக ஆதிசங்க ர் எம் .பி. , டி.எம்.செல்வகணபதி எம்.பி. மற்றும் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் மீதும் வ_ழக்கு பதிவு செய்யப்பட்டு 77,675 ரூபாய் பணமும், டி.என்.21 சி.பி. 9495 என்ற பதிவு எண் உள்ள இனோவா காரும் பறிமுதல் செய்யப்பட்டது. யாரும் கைது செய்யப்படவில்லை. குப்புச ட்மி என்ற தி.மு. க . உறுப்பினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வ_ழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு பணம் 25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
தி.மு.க. இளைஞர் அணியைச் ம்
ச ர் ந் த கண்ணாயிரம் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வ_ழக்கு பதிவு செய்து 10,890 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கழகத் தெ ட்ண்டர் களையு ம் தாக்கியதாக செல்வ கணபதி எம்.பி. மற்றும் தி.மு.க.வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புகைப்படங்களை இத்துடன் தங்களுடைய கவனத்திற்காக இணைத்துள்ளேன். தும்பல் பஞ்சாயத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த கணேசன் என் பவர் பணம் கொடுத்த போது அவரை தடுத்த க ட்வல்துறை உ தவி ஆய்வாளர் தாக்கப்பட் டுள்ளார்.
 
இதுபோன்று தி.மு.க. வினர் பல சட்டவிரோத அராஜக செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர் கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக் கப்படவில்லை. எனவே தேர்தல் ஆணையம் உடனடியாக கீழ்கண்ட ந ட வ டி க் நி க க நி ள எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 1. வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்தவேண்டும். 2. வேட்டி, சேலைகள், மதுபானங்கள் முதலி யவற்றை வழங்குவதும் தடுக்கவேண்டும்.
 
3. தி.மு.க.வினர் வாக்காளர்களை விரட்டுவதும், தொகுதி முழுவதும் அவர் கள் நடத்தும் வன்முறை மற்றும் அராஜக செயல் களை தடுத்து நிறுத்த வேண்டும். 4. ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நியாயமாகவும், சுதந்திர மாகவும் நடைபெற தி.மு.க.வினர் செய்யும் தேர்தல் விதிமுறைகள் நடவடிக்கைகளையும், சட்டவிரோதச் செயல் களையும் தடுத்து நிறுத்த வேண்டும். 
 
இவ்வாறு கழகப் பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார் என்று அ.தி.மு.க.வின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Friday, November 29, 2013

2014 வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

Friday, November 29, 2013
இலங்கை::2014 வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2014 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

22ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் எதிராக வாக்களித்துள்ளன.
 
கடந்த ஏழு நாட்களாக வரவு-செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று வந்தது
 
இதேவேளை குழுநிலை விவாதம் டிசம்பர் 2 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்று அன்றைய தினம் மாலை இறுதி வாக்கெடுப்பு இடம்பெறும்.

மாவனெல்லை விவகாரம் பிரதேச செயலாளரின் உறுதிமொழியை அடுத்து பிக்குகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!

Friday, November 29, 2013
இலங்கை::தெவனகல புனித பூமியை முஸ்லிம்களிடமிருந்து மீட்டுத் தரக் கோரி மாவனெல்லை நகரில் பிக்குகள் 8 பேர் சாகும் வரையான சாகும்வரை உண்ணாவிரதத்தை நேற்று முற்பகல் ஆரம்பித்திருந்தனர்.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அனுராதபுரயே அமித்த தம்ம,மாகல்கந்தே சுதத்த,ரத்னபுரே நந்தாலோக,மெதிரிகிரியே புண்யாஸார,அம்பத்தலாவே சங்கரத்ன, சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுதத்த,திரியாயே சீலரதன,மெதிரிகிரியே சுதத்த ஆகிய தேரர்கள் கலந்துகொண்டிருந்தனர் .

தெவனகல புனித பூமியை பாதுகாக்கும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உண்ணாவிரத நிகழ்வில் பெரும் தொகையான பொதுமக்களும் கலந்துகொள்ளவில்லை என்பது குருப்பிடத்தக்கது. இதேவேளை மவனெல்லையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் இடுபட்டிருந்தனர்.

நேற்று மாலை மாவனெல்லை பிரதேச செயலாளர் அவர்கள் உண்னாவிரதம் நடைபெறும் இடத்துகு வருகை தந்து இப்பிரச்சினையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கதைத்து இன்னும் ஒரு கிழமைக்குள் தீர்வை பெற்றுத்தாருவதாக உறுதியளித்தார். அதனை தொடர்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் கொலை விவகாரம்: பொலிஸ் விசாரணை மும்முரம்!

Friday, November 29, 2013
இலங்கை::நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் கொலை விவகாரம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று யாழ் . பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி. முகமட் ஜெப்ரி தெரிவித்தார் .
 
யாழ் . தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தகவலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார் .
 
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் , ' மூன்று பிள்ளைகளின் தந்தையரான டானியல் றெக்ஷிசன் சம்பவ தினத்தன்று வெளியில் செல்வதாக மனைவிக்கு கூறியுள்ளார் . அதன் போது மனைவி மூன்றாவது பிள்ளையின் கல்வி தொடர்பாக பாடசாலைக்கு சென்றுள்ளார் .
 
தொடர்ந்து மனைவி வீட்டிற்கு வந்த போது வீட்டிற்கு அருகிலிருந்த கொட்டகையில் டானியல் றெக்ஷிசன் படுத்திருந்தார் . அவரது மனைவி மகளிடம் உணவு கொடுத்து அனுப்பிய போது தந்தையின் தலையிலிருந்து இரத்தம் வடிந்திருப்பதனை கண்டு , மகள் தாயாரிடம் தெரிவித்துள்ளார் .
 
அதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஆட்டோவில் நபரொருவருடன் புங்குடுதீவிற்கும் குறிகட்டுவானுக்கும் இடையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு றெக்ஷிசன் சென்றதாகவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது .
 
அத்துடன் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் அவருக்கு பிரச்சினைகள் எதுவுமில்லையெனவும் ஆட்டோவில் இவருடன் சென்ற நபர் குறித்து புலனாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ' எம்.சி. முகமட் ஜெப்ரி தெரிவித்தார் .
 
அந்தவகையில் பிரதேசத்தில் நடைபெறும் கொலை , கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக எவர் மீதாவது சந்தேகமிருந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தருமாறும் ,
 
அவ்வாறு தகவல் தருபவர்கள் தமது பெயர் , முகவரி குறிப்பிடாமல் சம்பவம் தொடர்பாகவும் சந்தேக நபர்கள் தொடர்பாகவும் தெரியப்படுத்தலாம் என்றும் அதன் மூலம் சந்தேக நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியுமெனவும் எம்.சி. முகமட் ஜெப்ரி மேலும் தெரிவித்தார் .

புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தைக் கணக்கெடுக்க முடியாது. அவரது குடும்பத்தில் யாரும் உயிருடன் இல்லை: டி.டபிள்யு.டி.குணவர்த்தன!


Friday, November 29, 2013
இலங்கை::புலிகளின் தலைவர்  பிரபாகரனின் குடும்பத்தைக் கணக்கெடுக்க முடியாது. அவரது குடும்பத்தில் யாரும் உயிருடன் இல்லை என புள்ளி விபரவியல் மற்றும் தொகை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி.டபிள்யு.டி.குணவர்த்தன தெரிவித்தார்.
 
போரில் ஏற்பட்ட இழப்புக்களை கணக்கெடுக்கும் நடவடிக்கை நேற்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.
 
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக 1983 ஆம் ஆண்டு முதல் 2009 மே வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சொத்தழிவு, உயிரிழப்பு, காணாமற் போனவர்கள் தொடர்பில் கணக்கெடுக்கும் பணிகளை புள்ளிவிவரவியல் மற்றும் தொகை மதிப்பீட்டுத் திணைக்களம் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது என .டி.டபிள்யு.டி.குணவர்த்தன தெரிவித்தார்

இலங்கை மனித உரிமைகளை மீறிய குற்றம் சுமத்த முயற்சிக்கும் டேவிட் கமரூனின் மோசமான நிலைப்பாடுகளை அருவருக்கத்தக்கது: கும்புறுகமுவே வஜிர தேரர்!

Friday, November 29, 2013
இலங்கை::இலங்கை மனித உரிமைகளை மீறிய குற்றம் சுமத்த முயற்சிக்கும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் மோசமான நிலைப்பாடுகளை அருவருக்கத்தக்கது என்று கண்டிக்கின்றோம்.
 
சில மேற்குலக நாடுகள் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சுமத்தும் குற்றச்சாட்டுக்களை வன்மையாக கண்டிப்பதாக கலாநிதி கும்புறுகமுவே வஜிர தேரர் தெரிவித்தார்.
 
கொழும்பு பொதுநூலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வமத தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்
 
சனல் 4 தொலைக்காட்சி நாட்டுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை நாட்டுக்கு செய்த துரோகம் என்றார்.
 
அதேவேளை இங்கு உரையாற்றிய ஜனாதிபதியின் மத விவகாரங்கள் தொடர்பான ஆலோசகர் கலகம தம்மரங்சி தேரர்,
 
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரும் பிரித்தானிய நாட்டை தனது காலனித்துவ நாடாகவே கருதி செயற்பட்டது.
 
அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் அழுத்தங்களை ஏற்படுத்தியது. பயங்கரவாதத்தின் ஊடாக படுகொலைகளை நிகழ்த்த முயற்சிகளை மேற்கொண்டது. அந்த நிலைப்பாடுகள் பிரித்தானியாவிடம் இன்றும் இருக்கின்றன என்றார்.

ஈரானில் பயங்கர நிலநடுக்கம் : இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உடல் நசுங்கி பலி!

Friday, November 29, 2013
டெஹ்ரான்::ஈரானில் அணு உலை அமைந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 7 பேர் பலியாயினர். ஈரானில் அமைக்கப்படும் அணு உலைகள் மற்றும் யுரேனியம் செறிவூட்டல் கட்டுப்பாடுகள் தொடர்பாக சர்வதேச நாடுகளுடன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
 
இதையடுத்து ஈரானில் இருக்கும் அணு உலைகளை பார்வையிட ஐநா நிபுணர்கள் வர உள்ளனர். 5 சதவீதத்துக்கு மேல் யுரேனியத்தை செறிவூட்ட மாட்டோம் என்று சர்வதேச நாடுகளுக்கு ஈரான் உறுதி அளித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஈரானில் அணு உலை அமைந்த பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானின் பஸ்கர் என்ற இடத்தில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள போரோஜான் என்ற இடத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் அணு உலை ஒன்றை ஈரான் அரசு நிறுவியுள்ளது.
 
ஈரான் புவியியல் ஆய்வு மைய அதிகாரி கதாமி கூறுகையில், Ôஇப்பகுதியில் 5.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்பகுதியில் கட்டிடங்கள் குலுங்கின என்று தெரிவித்தார். இந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான குடியிருப்புகள் நொறுங்கின. இடிபாடுகளில் சிக்கி 7 பேர் பலியாயினர். எனினும், நிலநடுக்கம் காரணமாக அணு உலைக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அணு உலை மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நிலநடுக்கம் காரணமாக அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டால் அண்டை நாடான சவுதியும் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 26 ஆயிரம் பேர் வரை பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 32 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Friday, November 29, 2013
இலங்கை::இலங்கையின் கிழக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களினதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
 
புல்மோட்டை கடற்பரப்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான்கு படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோதே இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
இந்த மீனவர்கள் நேற்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நான்கு படகுகளும் கடற்படையினரின் பாதுகாப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, இந்திய கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் ஆறு இலங்கை மீனவர்களை அந்த நாட்டு கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
 
இலங்கை மீனவர்கள் ஆறு பேரும் ராமாயபட்டணம் கடற்பரப்பினுள் மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக 
தகவல்கள் குறிப்பிடுகின்றன.
 
அத்துடன் இலங்கை மீனவர்களின் படகொன்றும் இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
கைதான ஆறு மீனவர்களும் இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் அந்த நாட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 5ல் இந்தியா,தென் ஆப்ரிக்கா முதல் ஒன்டேவில் மோதல்!

Friday, November 29, 2013
சென்னை::வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2,0 என வென்ற இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை 2,1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்த வெற்றி குதூகலத்துடன் டோனி அன்கோ தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு செல்லும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் மோதுகிறது.
 
முதல் ஒருநாள் போட்டி வருகிற 5ந்தேதி ஜோகனன்ஸ்பர்க்கிலும், 2வது ஆட்டம் 8ந்தேதி டர்பனிலும், 3வது மற்றும் கடைசி ஒன்டே 11ந்தேதி செஞ்சூரியனிலும் நடக்கிறது. ஒருநாள் போட்டியை தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது. முதல் டெஸ்ட் 18ந்தேதி முதல் 22ந்தேதி வரை ஜோகனன்ஸ்பர்க்கிலும், 2வது மற்றும் கடைசி டெஸ்ட் 26ந்தேதி முதல் 30ந்தேதி வரை டர்பனிலும் நடைபெறுகிறது.
 
இந்த தொடரில் ஜாகீர்கான் இடம் பிடித்திருப்பது இந்திய அணியின் பந்து வீச்சை பலப்படுத்தும் என நம்பப்படுகிறது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான தென் ஆப்ரிக்க ஆடுகளங்களில் ஜாகீர்கானின் ஸ்விங் கைகொடுக்கக்கூடும். சச்சின் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அனைவரும் விடைபெற்ற நிலையில் இந்த தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் இளம் வீரர்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

உளவுத்துறை எச்சரிக்கையால் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் படை!

Friday, November 29, 2013
மேட்டூர்::உளவுத் துறை எச்சரிக்கையின்படி மேட்டூர் அனல்மின் நிலையத்தில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 யூனிட்கள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. தற்போது, ரூ.3,500 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய யூனிட்டில் 600 மெகாவாட் மின்சாரம¢ உற்பத்தி செய்யப்படுகிறது.
 
இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடிந்தகரை சுனாமி காலனியில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் வீடு தரைமட்டமாகி 6 பேர் பலியானார்கள். அப்பகுதியில் போலீசார் சோதனையிட்டதில் 7 கிலோ வெடிமருந்தும், 6 நாட்டு வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, மின் நிலையங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத் துறை எச்சரித்துள்ளது.
 
இதனால், நேற்று முதல் மேட்டூர் அனல்மின் நிலையத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவர்களுடன் நேற்று முதல் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு இன்ஸ்பெக்டர், நான்கு சப்,இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 65 போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் கோவையில் இருந்து வரவழைக்கப்பட்ட 20 பெண் காவலர்களும் உள்ளனர். 24 மணி நேரமும் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு, அமைச்சர் டக்களஸ் தேவானந்தா அழைப்பு!

Friday, November 29, 2013
இலங்கை::வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு, அமைச்சர் டக்களஸ்  தேவானந்தா  அழைப்பு விடுத்துள்ளார். மாவட்ட அபிவிருத்திக் குழுவில்; முதலமைச்சர் இணைந்து செயற்பட வேண்டுமென அமைச்சர் தேவானந்தா கோரியுள்ளார்.
 
இதற்கு முன்னார் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறியுடன் இணைந்து செயற்பட்டதாகவும், தற்போது முதலமைச்சருடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி பேதங்களை களைந்து மாவட்ட மற்றும் மாகாண மக்களின் நலன்களை கருத்திற் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஊடாக வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கும் சேவையாற்ற முடியும் என என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி:பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Friday, November 29, 2013
இலங்கை::யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
திட்டமிட்ட அடிப்படையில் நல்லிணக்க முனைப்புக்களை கூட்டமைப்பு புறக்கணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுமென்றே மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்தி, அரசாங்கத்தையும் படையினரையும் ஆத்திரமடையச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாக வடக்கில் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 
யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும்
புலிகளின் உத்தரவுகளை கூட்டமைப்பு ஏற்றுச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் வரையிலும் பிரபாகரனின் ஈழக் கோரிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அல் கய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடனுக்கு அஞ்சலி செலுத்த அமெரிக்கா அனுமதிக்குமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பய்ஙகரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கல்முனை தனியார் பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்த 2 கோடி ரூபா; கொரிய இணக்கம்

Friday, November 29, 2013
இலங்கை::கல்முனை நகரில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையத்தை சகல வசதிகளும் கொண்டதாக தவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு கொரிய நாட்டு கொய்கா நிறுவனம் உதவ முன்வந்துள்ளது.
 
இதற்காக கொய்கா திட்டத்தின் கீழ் இரண்டு கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு கொய்காவின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி பார்க் சூக் இணக்கம் தெரிவித்துள்ளார்.
 
ஆசிய மன்றத்தின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்படி அபிவிருத்தி திட்டத்திற்கு உதவுவதற்கான இணக்கத்தை வெளியிட்டுள்ளார்.
 
கொழும்பிலுள்ள கொரிய நாட்டு தூதரகத்தில் அமைந்துள்ள கொய்கா தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
 
இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டு கல்முனை மாநகரப் பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் கொய்காவின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.
 
இதன்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை சாதகமாகப் பரிசீலிப்பதாக உறுதியளித்த கொய்காவின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி, கல்முனை கல்முனை தனியார் பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு இந்த ஆண்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்தார்.
 
இதன் மூலம் பிரயாணிகளினதோ பஸ் நடத்துனர்களினதோ பயன்பாட்டுக்கு உதவாத ஒன்றாகக் காணப்படுகின்ற கல்முனை தனியார் பஸ் நிலையத்தை சகல வசதிகளும் கொண்டதாக அபிவிருத்தி செய்வதுடன் ஒற்றுமை சதுக்கம் எனும் பெயரில் வியாபார மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தி இரவு நேரத்திலும் கல்முனை நகரை இயங்கச் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் ஜீன் போல் மொன்சாசு -நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு!

Friday, November 29, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்தமை பற்றி தாம் மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (28) முற்பகல் நீதியமைச்சில் அமைச்சர் ஹக்கீமுடனான சந்திப்பொன்றின் போதே இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் ஜீன் போல் மொன்சாசு இவ்வாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் மேலும் தெரிவித்தவையாவன,
23 ஆவது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு இலங்கையினால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டதையிட்டு தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் இது இலங்கை நாடு பெற்றுக்கொண்ட ஒரு வெற்றியாகவும் குறிப்பிடவும் முடியும். மேலும் இதன் மூலம் இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். இந்த ஆண்டிற்குள் பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராத்தாழ 50 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். இனி வரும் காலங்களில் இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றார். 
 
ஏதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பலவற்றில் மரண தண்டனையை அகற்றப்படவுள்ளது. அது சம்பந்தமாக சர்வதேச ஒப்பந்தங்களும் நடைபெறுகின்றன. இலங்கையிலும் மரண தண்டனையை இல்லாதொழிப்பதைப் பற்றி தூதுவர் அவர்கள் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் அதைக் குறித்து கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.
 
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திர் கிழக்கு மாகாணத்தில் முதலீட்டு மாநாடொன்று நடாத்தப்படுமென தெரிவித்தார். அதற்காக பிரான்ஸ் நாட்டு முதலீட்டாளர்களையும் அனுப்புமாறு தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வில் நீதியமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான் மற்றும் இணைப்புச் செயலாளர் ஏ.ஆர். மன்சூர் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
 

சனல் 4 தொலைக்காட்சி இஸ்ரேலின் கொடுமைகளுக்குள் சிக்கியிருக்கும் காஸாவுக்குச் செல்லாதது ஏன் ? தயான் ஜயதிலக்க!

Friday, November 29, 2013
இலங்கை::இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து குரல் கொடுக்கும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் சனல் 4 தொலைக்காட்சியும் 65 வருடங்களாக இஸ்ரேலின் கொடுமைகளுக்குள் சிக்கியிருக்கும் காஸாவுக்குச் செல்லாதது ஏன் என  முன்னாள் ஜக்கிய நாடுகள் தூதுவரும் எழுத்தாளரும், சோசலிசவாதியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க கேள்வியெழுப்பினார்.
 
ஜக்கிய நாடுகள் அமையத்தின்  பலஸ்தீன சர்வதேச ஒருமைப்பாட்டு தினம் நேற்று மாலை கொழும்பு 7 ஹெக்டர் கொபேக்கடுவ மத்திய நிலையத்தில் நடைபெற்றது. 
 
இந் நிகழ்வுக்கு பலஸ்தீன் - இலங்கை நட்புறவு அமைப்பின் இணைத் தலைவர்களான முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சிரேஸ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்தின ஆகியோர் தலைமை வகித்தனர்.
 
பிரதம அதிதிகளாக சிரேஸ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண,  பலஸ்தீனத் தூதுவர் கலாநிதி அன்வர் அல்-அக்ஹா ஆகியோரும் கலந்து கொண்டனர்.  இலங்கையில் உள்ள சுமார் 20 நாடுகளுக்கும் மேற்பட்ட தூதுவர்களும் இந் நிகழ்வில்  கலந்து கொண்டனர்.
 
பிரதான உரையை கலாநிதி தயான் ஜயதிலக்க ஆற்றினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
அண்மையில் இலங்கை வந்திருந்த பிரித்தானிய பிரதமர் கெமரூன் எவ்வித அனுமதியுமின்றி யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். அங்கு யுத்தம் நடைபெற்ற இடங்கள் பாதிக்கப்பட்ட மக்கள், மற்றும் உறவினர்களை இழந்த தாய்மார்களையெல்லாம்  சந்தித்து விட்டு கொழும்பு வந்தார். 
 
கொழும்பில் தன்னிச்சையான ஊடகவியாளர் மாநாட்டை கூட்டி இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்தார். ஆனால்  கடந்த 65 வருடங்களாக பலஸ்தீன முஸ்லிம்கள் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர்.  அமெரிக்காக பிரித்தானியா போன்ற நாடுகளே  ஆரம்பத்தில்  இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி பலஸ்தீன மக்களை பச்சை பச்சையாக கொலை செய்ய உதவினர். 
 
பலஸ்தீனத்தில்  சிறுபிள்ளைகளையும் வயோதிபர்களையும் பெண்களையும் கொலைசெய்கின்றனர். அவர்களது அடிப்படைத் தேவைகளான நீர் வழங்கல் மற்றும் பாதைகளையும் கட்டிடங்களையும் குண்டு வைத்துத் தகர்க்கின்றனர். 
 
 உலகிலேயே மிகக் கொடுரமான மனித உரிமை மீறல்களை கடந்த 65 வருடங்களாக   இஸ்ரேல் பலஸ்தீனத்தில் கட்டவிழ்த்து யுத்த வேடிக்கை நடாத்துகின்றது. இலங்கையின் வடக்கை விட பன்மடங்கு கொடுர சம்பவங்கள் பலஸ்தீனத்தில் நடைபெறுகின்றன. ஆனால் கெமரூன்  காஸாவுக்குச் சென்று பார்க்கவில்லை. ஏன் அவர் இஸ்ரேவேலுக்கு அல்லது யூதர்களுக்காக எதிராக மனித உரிமை பிரச்சினை பற்றி பேசவில்லையென நான் கேள்வி கேட்க விரும்புகின்றேன்.
 
 அதேபோன்று பி.பி.சி., சனல் 4 தொலைக்காட்சிகள் ஏன் பலஸ்தீனப் பிரச்சினையை சர்வதேசத்திற்குச் கொண்டு செல்லவில்லை எனவும் தயான் கேள்வி எழுப்பினார். 
 
இந் நிகழ்வில் பலஸ்தீனில் இஸ்ரேல் புரியும் அட்டூழியங்களைக் காட்சிப்படுத்தும் புகைப்படக் கண் காட்சியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

புலிகூட்டமைப்பில் பிளவு? பாராளுமன்றில் நான்ஆற்றும் உரை குறித்து வெளியில் இருந்து கேள்வி எழுப்பும் உரிமை எவருக்கும் கிடையாது: சிறீதரன் சம்பந்தனுக்கு பதிலடி!!

Friday, November 29, 2013
இலங்கை::பாராளுமன்றில் நான்ஆற்றும் உரை குறித்து வெளியில் இருந்து கேள்வி எழுப்பும் உரிமை எவருக்கும் கிடையாது: சிறீதரன் சம்பந்தனுக்கு பதிலடி!!
 
(புலிகளால்) மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாகிய எனக்கு பாராளுமன்றில் உரையாற்றுவதற்கான சிறப்புரிமை உண்டு. எனது பாராளுமன்ற சிறப்புரிமையை கேள்வி கேட்பதற்கு சபாநாகருக்கும் மட்டுமே உரிமை உண்டு. வேறு எவருக்கும் நான் ஆற்றும் உரைகள் குறித்து வெளியில் இருந்து  கேள்வி எழுப்பும் உரிமை கிடையாது" என தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்   தெரிவித்துள்ளார்.

நான் பாராளுமன்றில் என்ன பேசவேண்டும் என்பதனை கட்சியிடம் கேட்டு பேசவேண்டிய அவசியம் இல்லை. நான் (புலிகளால்) மக்களால் தெரிவுசெய்யப்பட்டவன். அப்படி கட்சியிடம் கேட்டுத்தான் பேசவேண்டும் என்றால் நான் வாழ்க்கையில் எதனையும் பேச முடியாது."

அந்த வகையில் எனது பாராளுமன்ற உரைகள் குறித்து பாராளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் படி எதனை நீக்க வேண்டும் எதனை சேர்க்க வேண்டும் என்பதனை சபாநாயகரே தீர்மானிக்க முடியுமே தவிர வேறு எவரும் வெளியில் இருந்து விமர்சிக்கவோ கேள்வி கேட்கவோ முடியாது என சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்...
 
சிறிதரன்   புலிகளின் முக்கிய உறுப்பினராக செயற்பட்ட தீபனின் நெருங்கிய உறவினரெனவும் இந்த உறவு முறையின் அடிப்படையில் சிறிதரன் எம்.பி, பாடசாலை மாணவர்களை   புலிகள் இயக்கத்தில் இணைவதற்கு அழுத்தம் கொடுத்தார்,

இலங்கையின் தமிழ் பிரஜைகள் என எடுத்துக்கொண்டால் 90 வீதமானவர்களுக்கு புலிகள் அமைப்பில் உறவினர்கள் இருந்துள்ளனர். ஏனவே அந்த 90 வீதத்தினரும் உறவினர்கள் புலி உறுப்பினர் என்பதற்காக கைது செய்யப்படவில்லை. அத்துடன் அதற்கான இடம் சட்டத்திலும் இல்லை.

ஆனால் சிறிதரன் கிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியராகவிருந்தபோது தனது பாடசாலைக்கு கல்வி பயில வந்த மாணவர்களை புலிகளியக்கத்தில் இணையுமாறு நிர்பந்தித்து புலிகளின் ஆட்சேர்ப்புக்கு உதவியிருந்தார் அவர் குற்றவாளியே. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.

வடக்கில் புலிகளின் மாவீரர் தினம் கொண்டாட ஏற்பாடுகள்: இதுவரை புலிகளின் ஆதரவாளர்கள் 11 பேர் கைது!

Friday, November 29, 2013
இலங்கை::வடக்கில் புலிகளின் மாவீரர் தினம் கொண்டாட ஏற்பாடுகள்: இதுவரை புலிகளின் ஆதரவாளர்கள் 11 பேர் கைது.
 
வடக்கில் மாவீரர் தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்திய புலிகளின் ஆதரவாளர்கள்  தொடர்ந்தும் கைதாகி வருகின்றனர். சுமார் 11 பேர் வரை படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

இலங்கை உள்விவகாரங்களில் வெளிச் சக்திகள் தலையீடு செய்யக் கூடாது: சீனா!

Friday, November 29, 2013
இலங்கை::இலங்கை உள்விவகாரங்களில் வெளிச் சக்திகள் தலையீடு செய்யக் கூடாது என சீனா அறிவித்துள்ளது.
 
இலங்கை அரசாங்கமும், அதன் மக்களும் உள்விவகாரப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளக் கூடிய ஆற்றலும் வல்லமையும் கொண்டவர்கள் என சீனா சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் நிலைமைகளை மோசமடையச் செய்யும் என தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் உரிமைகளுக்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமை மேம்பாடு தொடர்பில் இலங்கை மக்கள் தீர்மானத்தை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் மனித உரிமை விவகாரங்களை உலக நாடுகள் அணுக வேண்டுமென சீனா சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் உள்விவகாரங்களில் சர்வதேச சமூகம் அரசியல் நோக்கத்திற்காகவோ அல்லது இரட்டை நிலைப்பாட்டுடனோ தலையீடு செய்வதனை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது.
 
மனித உரிமை விவகாரத்தை ஒர் கருவியாகப் பயன்படுத்தி நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என குறிப்பிட்டுள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கை தீவிர முனைப்பு காட்டி வருவதாகவும் இதனை வரவேற்க வேண்டுமெனவும் சீனா தெரிவித்துள்ளது.  

இந்தியாவிற்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!

Friday, November 29, 2013
மதுரை::இந்தியாவிற்கான இலங்கை தூதர், பிரசாத் கரியவாசம், இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட தடை கோரிய மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. மதுரை ஐகோர்ட் கிளையில், திருநெல்வேலியை சேர்ந்த, லேனாகுமார் தாக்கல் செய்த மனு: முதல்வர்களுக்கு மெயில் : நம்நாட்டிற்கான இலங்கை தூதர், பிரசாத் கரியவாசம், மார்ச், 19ல், அனைத்து மாநில முதல்வர்களுக்கும், இ-மெயில் ஒன்றை அனுப்பினார். அதில், இலங்கையில் உள்ள, 12 சதவீத தமிழர்கள் மீது மட்டும், இந்திய அரசு அக்கறை காட்டுகிறது. அங்குள்ள, 75 சதவீத சிங்களர்கள், ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். எனவே, தமிழர்கள் மீது மட்டுமின்றி, சிங்களர்களையும் ஆதரிக்க வேண்டும் என, தெரிவித்திருந்தார்.

தடை விதிக்க வேண்டும் : இதை, பிரசாத் கரியவாசம் மீறியுள்ளார். அவர், நம்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை பாதிக்கும் வகையில், கருத்துக்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும். வெளிநாட்டு தூதர்களுக்கான நன்னடத்தை விதிகளை அமல்படுத்தும்படி, ?வளியுறவுத் துறைக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டுக் கொள்கை : மனுவை விசாரித்த, நீதிபதிகள், எம்.ஜெய்சந்திரன், எஸ்.வைத்தியநாதன் அடங்கிய, ஐகோர்ட், பெஞ்ச் உத்தரவு: இது வெளிநாட்டுக் கொள்கை தொடர்பானது. வெளிநாட்டு தூதருக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கை எடுக்கும்படி, கோர்ட் உத்தரவிட முடியாது. மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இம்மனு, விசாரணைக்கு ஏற்புடையதல்ல; தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது இந்தியர்களை, வட மாநிலத்தவர், தென் மாநிலத்தவர் என, பிரிக்கும் முயற்சி. ஐ.நா.,வின் வியன்னா மாநாட்டு தீர்மானப்படி, ஒரு நாட்டு தூதர், மற்றொரு நாட்டில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட நாட்டின் இறையாண்மைக்கு எதிராக, கருத்துக்களை வெளியிடக்கூடாது; அந்நாட்டு சட்டத்தை மதிக்க வேண்டும்.

புலிகளினால் கொலை செய்யப்பட்ட ராஜிவ் கொலை சதியை விசாரிக்கும் சி.பி.ஐ., ஏஜன்சியின் செலவு ரூ.100 கோடி!

Friday, November 29, 2013
சென்னை::முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலை வழக்கின் பின்னணியில் உள்ள சதி குறித்து விசாரிக்கும், பல்நோக்கு கண்கணிப்பு ஏஜன்சி, 100 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது,'' என, தூக்கு தண்டனை கைதி பேரறிவாளன் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் தெரிவித்தார்.
 
ராஜிவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை, தடா கோர்ட்டில், பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவில், "சதி திட்டம் குறித்து விசாரணை நடத்தும், பல்நோக்கு கண்காணிப்பு ஏஜன்சியை, கோர்ட் கண்காணிக்க வேண்டும். சதியில், உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் தொடர்பு இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, பல்நோக்கு ஏஜன்சியின் விசாரணையை, தீவிரமாக கண்காணிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
 
இம்மனு, நேற்று, தடா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பேரறிவாளன் சார்பில், வழக்கறிஞர், சந்திரசேகரன் ஆஜரானார். விசாரணையின் போது, நிருபர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.
விசாரணைக்குப் பின், வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறும்போது, ""பல்நோக்கு கண்காணிப்பு ஏஜன்சி, 100 கோடி ரூபாய்க்கும் மேல், செலவு செய்துள்ளது. சிறப்பு குழுவில், இயக்குனர், இரண்டு, இணை இயக்குனர்கள், டி.ஐ.ஜி., ஐந்து, எஸ்.பி.,க்கள் உள்ளனர். இக்குழு, கோர்ட்டுக்கு அறிக்கையை தாக்கல் செய்கிறது. ஆனால், அவற்றை தொடுவதில்லை. கோர்ட்டை கண்காணிக்க கோருவதற்கு, பேரறிவாளனுக்கு உரிமை உள்ளது,'' என்றார்.

இலங்கை கரையோரப்பாதுகாப்புக் குழு கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்காக ஜப்பானுக்கு விஜயம்!

Friday, November 29, 2013
இலங்கை::ஐந்து பேரடங்கிய இலங்கை கரையோரப்பாதுகாப்புக் குழு கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்காக ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
 
கடந்த மார்ச் மாதம் ஜப்பானுக்கு விஜயம் செய்த ஜனாதிபதியவர்கள் ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயுடனான சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையே தேவைப்படும் கரையோரப்பாதுகாப்பின் ஆற்றலை மேம்படுத்தல்,கடல்சார் சட்டங்களை அமுல் படுத்துதல்,
 
அணர்த்தங்களிலிருந்து பாதுகாத்தல்,சூழலைப்பாதுகாத்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்துவம் குறித்து கலந்தாலோசித்த்தன்பிரகாரம் இக்குழு ஜப்பானுக்கு சென்றுள்
ளது.
 
கரையோரப்பாதுகாப்புப் படையின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் ஏ.கே குருகே தலைமையிலான இக்குழுவானது ஜப்பானிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், ஜப்பானிய கரையோர பாதுகாப்புப்படை அதிகாரிகள், போன்றோர்களைச் சந்தித்ததுடன் கடல்சார் சட்டங்களை அமுல்படுத்துதல் தொடர்பாக உடன்பாடும் கண்டனர்.
 
இக்குழுவானது ஜப்பானிய கரையோரப்பாத்துகாப்பு தலைமையகம், ஜப்பானிய கடல்சார் பாதுகாப்புப் படை முகாம்,காணி, போக்குவரத்து மற்றும் உல்லாசத்துறை அமைச்சுக்கள் போன்றவற்றுக்குச்செல்ல உள்ளதுடன் இன்னும் பலஇடங்களுக்கும் விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.மேலும் அவர்கள் இலங்கைத்தூதுவரையும் ஜப்பானில் சந்தித்தனர்

மனிதப் படுகொலை புரிந்த புலிகளை சுதந்திர வீரர்களாக சித்தரிப்பது தவறு: சர்வ மதத் தலைவர்கள்!

Friday, November 29, 2013
இலங்கை::மனித உரிமை என்ற போர்வையில் நாட்டில் நிலவும் சமாதானத்தை சீர்குலைப்பதற்கு தேசிய சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என சர்வ மதத் தலைவர்கள் தெரிவித்தனர்.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் இலங்கைக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களை முற்றாக நிராகரித்த சர்வ மதத் தலைவர்கள் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கும் வகையில் செயற்படுவோரிடமி ருந்து நாட்டைப் பாது காப்பதற்கு இலங்கையர் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகும் என தெரிவித்தனர்.

இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி குழப்பகரமான சூழலை வாய்ப்பாக்கிக் கொள்வதற்கு எத்தனிக்கும் சூழ்ச்சிக்காரர்களிட மிருந்து அரசாங்கமும் நாட்டு மக்களும் மிக அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

நாட்டுக்கு எதிராக தேசிய சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் சர்வமதத் தலைவர்கள் அமைப்பு நேற்று கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தியது. கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் போதே சர்வ மதத் தலைவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

நாட்டின் அரசியல் தலைவர்களையும் பொது மக்களையும் படுகெலை செய்த புலிகளுக்கு மாவீரர் தினம் கொண்டாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலி ஆதரவாளர்கள் முயற்சிப் பதாகவும் இத்தகைய குற்றவாளிகளை கெளரவிப்பதற்கு இந்த நாட்டில் இடமளிக்கக் கூடாது என அவர்கள் தெரிவித்தனர். அரசாங்கம் இது விடயத்தில் கவனம் செலுத்துவது அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கம்புறுகமுவே வஜிர தேரர் இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் :-

ஐக்கிய தேசியக் கட்சி தேசத் துரோகியாகச் செயற்படுகிறது. டி. எஸ். சேனநாயக்கா போன்ற சிறந்த தலைவர்கள் இருந்த கட்சி இன்று மிக மோசமாகச் செயற்பட்டு வருகிறது.

கட்சிக்குத் தலைவர் தேர்ந்தெடுப்பதில் பயனில்லை. அவர்கள் முதலில் நாட்டுக்கு எதிராக செயற்பாடுகளை நிறுத்தட்டும்.

புலிகளின் மாவீரர் தினம் கொண்டாட ஏற்பாடுகள் நடப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலி ஆதரவாளர்கள் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது- அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

குற்றவாளிகளை நினைவு கூருவதை எவரும் ஏற்க மாட்டார்கள். இத்தகைய நிகழ்வொன்று நிகழ்வதற்கு இடமளிக்கக்கூடாது. மீண்டும் இந்த நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு மக்கள் இடமளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

குருநாகல் மறை மாவட்ட அங்கிலிக்கன் திருச்சபை ஆயர் சாந்த பிரான்ஸிஸ் ஆண்டகை இங்கு உரையாற்றுகையில் :-

பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு வருகை தந்துவிட்டு யாழ்ப்பாணத்திற்கு ஒரு மணித்தியாலம் மட்டுமே சென்று திரும்பிய பிரித்தானிய பிரதமர் மனித உரிமை மீறப்பட்டுள்ளது எனக் கூறுவது எப்படி? யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் குருநாகலில் அனைத்துப் பிரதேசங்களிலும் வாழ்கின்றனர். பிரித்தானிய பிரதமர் அங்கு வந்து பார்த்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

நாட்டின் தலைவர்களையும் பொதுமக்களையும் படுகொலை செய்தவர்கள் மாவீரர்களா? அவர்கள் யார்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மனித உரிமை பிரச்சினை இல்லாத நாடுகளே உலகில் கிடையாது. அவ்வாறிருக்கையில் 30 வருட காலம் யுத்தம் நடந்த நாட்டில் மனித உரிமை பிரச்சினை இருப்பது இயல்பு. தமிழ் மக்களின் உரிமை மட்டும் பாதிக்கப்படவில்லை. அனைத்து மக்களினதும் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கெமரூன் உணர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்து மத குருக்கள் பாபு சர்மா இங்கு உரையாற்றுகையில் :-

இலங்கையில் சமாதான சூழலை ஏற்படுத்தி பொதுநலவாய மாநாட்டை நடத்தியமைக்காக டேவிட் கெமரூன் எமது ஜனாதிபதியைப் பாராட்டி இருக்க வேண்டும், அதைவிடுத்து அவர் நாட்டுக்கு எதிராகப் பேசிச் சென்றுள்ளார்.
பிஏ 9பீ பாதையில் பயணிக்க புலிகளுக்கு கட்டணம் வழங்க வேண்டிய யுகத்தை மாற்றி யாழ்ப்பாணத்துக்கு சுதந்திரமாக போய் வர கெமரூனுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமையை அவர் பாராட்டி இருக்க வேண்டும்.
பல தேர்தல்களில் தோல்வியுற்ற ஐ. தே. க. பிசனல் 4பீ ஊடகவியலாளர்களை அழைத்து அவர்களின் ஆதரவோடு தந்திரமாக அரசைக் கைப்பற்றலாம் என எண்ணி செயற்படுகின்றமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சுதந்திர போராட்ட வீரர்களான சேர் பொன். அருணாசலம், சேர் பொன். இராமநாதன், >சூ(> செல்வா, அமிர்தலிங்கம் போன்றோர் எக்காலத்திலும் நினைவு கூரத் தகுந்தவர்கள். எனினும் குற்றச்செயல்களையே செய்த புலிகளை மாவீரர் என நினைவு கூருவதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் எனவும் பாபு சர்மா தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய முஸ்லிம் மதத் தலைவர் ஹசன் மெளலானா தமதுரையில் :-

எமது தாய் நாட்டின் முன்னேற்றத்தைக் கண்டு எரிச்சல் படுபவர்களே நாட்டுக்கு எதிராகச் செயற்படுகின்றனர். மூன்று தசாப்த யுத்தகாலத்தில் எந்த சர்வதேசத் தலைவரும் வடக்குக்கு விஜயம் செய்ததில்லை.

எனினும் இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்த நிலையை மாற்றியுள்ளார். புலிகளை பேச்சுக்கு அழைத்த போதும் அவர்கள் படுகொலை செய்வதைக் கைவிடவில்லை. அதனால்தான் மனிதாபிமான நடவடிக்கையை ஜனாதிபதி ஆரம்பிக்க நேர்ந்தது.

யாழ்ப்பாணத்துக்குச் சென்ற டேவிட் கெமரூன் அங்கு பதாதைகளுடன் நின்ற பெண்களைப் பார்த்துவிட்டு மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகக் கூறினார். மக்கள் படுகொலைகளை நிறுத்தியது மனித உரிமை மீறலா?

கிழக்கிலும் பள்ளிவாசலில் 161 முஸ்லிம்கள் புலிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இது மனித உரிமை மீறல் இல்லையா? யாழ் சென்று வட மாகாண முதலமைச்சருடன் பேச்சு சடத்திய கெமரூம் கிழக்குக்கும் வந்து கிழக்கு முதலமைச்சருடனும் பேச்சு நடத்தியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை ஆரம்பிப்பது காலத்தின் தேவை இதற்காகவே புலிகளை ஒழிக்க சர்வதேச சமூகம் ஆதரவு வழங்கியது: சம்பந்தன்!

Friday, November 29, 2013
இலங்கை::தமிழ் மக்கள் உட்பட ஏனைய சமூகத்தினர் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வுகாண்பது தொடர்பில் கலந்துரையாடல் நடத்த வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
இந்த மக்களின் உரிமைகளை முழுமையாக பாதுகாப்பதற்கு அரசாங்கம் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டு கோள் விடுத்தார். வரவு - செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான ஆறாவது நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சம்பந்தன் எம்.பி. மேலும் குறிப்பிடுகையில்,
 
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்ற நோக்குடனே புலிகளை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பை வழங்கின. இவ்வாறு ஒத்துழைத்த சர்வதேச சமூகத்திற்கு அரசு என்ன பதிலை வழங்கப்போகின்றது என்று நான் இந்த சபையில் கேட்கவிரும்புகிறேன்.
 
பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய இரண்டும் மிக முக்கியமானது. இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பொறுப்புக் கூறுதல் இல்லாவிட்டால் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எனவே தமிழ் மக்களின் ஏற்றுக் கொள்ளும், தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய ஒரு சிறந்த தீர்வை வழங்க வேண்டும்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொது நலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பை வகித்த நிலையிலேயே இந்த வரவு - செலவு திட்டத்தை சமர்பித்துள்ளார்.
 
இந்த தலைமை பொறுப்பு வகிப்பதன் மூலம் அவருக்கு மேலும் பாரிய பல பொறுப்புக்கள் உள்ளன, இந்நிலையில் இந்த தலைமைத்துவத்தின் மூலம் சிறந்த ஒரு அனுகூலமான முடிவை தரும் என நான் எதிர்பார்க்கின்றேன் என்றார்.

இலங்கையின் வடமாகாணத்தில் சீரான நிர்வாகத்துக்கு இந்தியாவின் உதவி மிக அவசியம்: பிரசாத் காரியவசம்!

Friday, November 29, 2013
இலங்கை::இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளாதமை குறித்து இலங்கை மக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்திருந்த போதிலும் இலங்கை அரசியல் தலைவர்களுக்கு ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நன்கு தெரிந்திருந்த காரணத்தினால் இந்தியப் பிரதமர் வராதமை குறித்து அந்தளவுக்கு ஏமாற்றம் அடையவில்லை என்று புதுடில்லியில் உள்ள இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எங்கள் இரு நாடுகளும் தேசிய தேவைகளுக்கு ஏற்புடைய வகையில் பொருளாதார தேவைகளை உள்ளடக்கக்கூடிய வகையில் அரசியல் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் நடைமுறைப்படுத்துகின்றன. இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா உட்பட எங்கள் நட்பு நாடுகளின் நலனுக்கு தீங்கிழைக்கும் நோக்கம் எதுவுமில்லை என்றும் பிரசாத் காரியவசம் மேலும் தெரிவித்தார். நாம் இந்து சமுத்திர பிராந்தியத்தின் ஒருமைப்பாட்டுக்காகவே பாடுபடுகின்றோம். தமிழ்நாடு சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து நாம் மன வேதனைப்படுகிறோம் என்று பிரசாத் காரியவசம் எக்கோனமிக் டைம்ஸ் என்ற இந்தியப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திர பிராந்தியத்தை பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றின் அழிவுகளிலிருந்து காப்பாற்றி அச்சுறுத்தல்கள் அற்ற அமைதியான பிரதேசமாக உருவாக்குவதே இலங்கையின் நோக்கம் என்றும் அவர் கூறினார். இன்று இலங்கையில் வடபகுதியில் ஜனநாயகம் தலைத்தோங்குகிறது என்று தெரிவித்த அவர், வடமாகாணத்தில் சீரான நிர்வாகத்தை நடைமுறைப் படுத்துவதற்கு எங்களுக்கு நட்பு நாடான இந்தியாவினதும், தமிழ்நாட்டினதும் ஆதரவு அவசியம் என்று கூறினார்.

இந்திய கடல் எல்லையை தாண்டும் இலங்கை மீனவர்கள் : அனுமதி கோரும் இலங்கை அரசால் புது சர்ச்சை!

Friday, November 29, 2013
சென்னை::தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும் சம்பவங்கள் தொடரும் நிலையில், "இந்திய கடல் எல்லைக்குள் வழிப்போக்கர்களாக, இலங்கை மீனவர்களை அனுமதிக்க வேண்டும்' என, இலங்கை அரசு கோரியுள்ளது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச எல்லையைத் தாண்டி, வழி தவறிச் செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இது, தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை சிறையில் உள்ள, 80க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்; பறிமுதல் செய்து வைத்துள்ள விசைப்படகுகளையும், விடுவிக்க வேண்டும்' என, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
 
அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புக்களும், பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், "அரபிக் கடலின், சர்வதேச எல்லையில் மீன்பிடிக்கச் செல்லும் இலங்கை மீனவர்களை, இந்திய கடல் எல்லை வழியாக, வழிப்போக்கர்களாக செல்ல அனுமதிக்க வேண்டும்' எனக் கேட்டு, இலங்கை அரசு, இந்திய தூதரிடம் கடிதம் கொடுத்துள்ளது. இது, புதிய சர்ச்சையை ஏற்படுத்துவதாக உள்ளது. "இந்திய கடல் எல்லைக்குள் வந்தால், அத்து மீறலாகவே கருதப்படும். அவ்வாறு செல்வோரை கைது செய்யப்படுவர். இலங்கை அரசின் கோரிக்கை குறித்து, வெளியுறவு அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும்' என, கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், மீனவ அமைப்புகள், "இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்கலாம்' என, தெரிவித்துள்ளன.

தேசிய மீனவர் பேரவை பொதுச் செயலர் இளங்கோ கூறியதாவது: இலங்கையில் இருந்து, மீன்பிடி கப்பல்கள், அரபிக்கடல் செல்ல நீண்ட தூரம் சுற்ற வேண்டும். இந்திய கடல் எல்லை வழியாக சென்றால், தூரம் குறையும். அதனால், இலங்கை மீன்பிடி கப்பல்கள், இந்திய கடல் எல்லையில் வழிப்போக்கர்களாக சென்று வந்தனர். சமீபத்தில், தமிழக மீனவர்கள் தாக்குதலால், நம் கடலோர காவல் படையும் கெடுபிடி செய்து வருகிறது. இதனால், இலங்கை அரசு இப்படி ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளது. இந்திய கடல் பொருளாதார மண்டலத்திற்குள், 450 வெளிநாட்டு கப்பல்கள் மீன்பிடிக்க அனுமதி அளித்துள்ளோம். அது போன்று, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி, இந்திய கடல் எல்லையில், வழிப்போக்கர்களாக செல்ல அனுமதிக்கலாம். அதுபோன்று, இரு நாடுகளிலும் மீனவர்கள் சிறைபிடித்தல் சம்பவங்களுக்கும் தீர்வு ஏற்படுத்துவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் ஆண்டன் கோமஸ் கூறியதாவது: மனிதாபிமான அடிப்படையில், இந்திய கடல் எலைக்குள் வழிப்போக்கர்களாக செல்ல அனுமதிக்கலாம்; நமக்கு அவர்கள் எதிரிகள் அல்ல. அதற்காக, பன்னாடு நிறுவன பெரிய மீன்பிடி கப்பல்களுக்கு அனுமதி அளித்து விடக்கூடாது.
தனுஷ்கோடி தலைமன்னாருக்குமான இடைவெளி, 19 கடல் மைல் தூரம் தான். இதில், நமக்கு, 8 கடல் மைல் தூரமும், இலங்கைக்கு, 11 கடல் மைல் தூரமும் என, பிரிக்கப்பட்டுள்ளது. குறுகிய கடல்பகுதி என்பதால், இருநாட்டினருக்கும் மீன்பிடி உரிமம் வேண்டும்; இவ்வாறு செய்வதால், இரு நாட்டு மீனவர்களும் கைதாகும் நிகழ்வுகள் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார். இப்படி பல்வேறு கருத்துக்கள் உள்ள நிலையில், இலங்கை அரசின் இந்த கோரிக்கை, மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

இலங்கை குறித்து வெளிநாடுகளில் அவதூறு: யாருக்கும் அஞ்சப்போவதில்லை- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Friday, November 29, 2013
இலங்கை::இலங்கை குறித்து வெளிநாடுகளில் அவதூறு பரப்பி விடப்படுகிறது. எதற்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். தொடர்ந்து இலங்கை நலப்பணியில் பயணிப்போம் என்று இலங்கை அதிபர்  மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். பேய்களுக்கு அச்சமென்றால் சுடுகாட்டில் வீடு கட்டியிருக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை : வெளிநாடுகளுக்கு சென்று அரசாங்கத்திற்க எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. எந்த தரப்பிற்கும் அஞ்சப் போவதில்லை. பேய்களுக்கு பயந்தால் சுடுகாட்டில் வீடு அமைக்க முடியாது என பழமொழியொன்று உண்டு.

தாய் நாட்டுக்கு ஆற்ற வேண்டிய சேவையை நாங்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளோம். எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் எமது பயணத்தை கைவிட மாட்டோம். நாட்டின் ஜனநாயகத்தின் மீது எமக்கு நம்பிக்கை உண்டு. மக்களின் நம்பிக்கையை ஒரு போதும் சீர்குலைக்க மாட்டோம் . இவ்வாறு அவர் பேசினார்.
அவர் மேலும் பேசுகையில் ; சர்வதேச சக்திகளைக் கொண்டு இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்த சில தரப்பினர் முயற்சி மேற்கொள்கின்றனர்.
 
கடன் பெற்றுக்கொள்வதாக குற்றம் சுமத்துகின்றனர். நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே கடன் பெற்றுக்கொள்கின்றோம். அரசை கவிழ்க்க முயற்சிக்கப்படுகிறது. என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.