Friday, November 29, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்தமை பற்றி தாம் மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தார்.
வியாழக்கிழமை (28) முற்பகல் நீதியமைச்சில் அமைச்சர் ஹக்கீமுடனான சந்திப்பொன்றின் போதே இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் ஜீன் போல் மொன்சாசு இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவையாவன,
23 ஆவது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு இலங்கையினால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டதையிட்டு தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் இது இலங்கை நாடு பெற்றுக்கொண்ட ஒரு வெற்றியாகவும் குறிப்பிடவும் முடியும். மேலும் இதன் மூலம் இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். இந்த ஆண்டிற்குள் பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராத்தாழ 50 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். இனி வரும் காலங்களில் இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றார்.
ஏதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பலவற்றில் மரண தண்டனையை அகற்றப்படவுள்ளது. அது சம்பந்தமாக சர்வதேச ஒப்பந்தங்களும் நடைபெறுகின்றன. இலங்கையிலும் மரண தண்டனையை இல்லாதொழிப்பதைப் பற்றி தூதுவர் அவர்கள் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் அதைக் குறித்து கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திர் கிழக்கு மாகாணத்தில் முதலீட்டு மாநாடொன்று நடாத்தப்படுமென தெரிவித்தார். அதற்காக பிரான்ஸ் நாட்டு முதலீட்டாளர்களையும் அனுப்புமாறு தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வில் நீதியமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான் மற்றும் இணைப்புச் செயலாளர் ஏ.ஆர். மன்சூர் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment