Saturday, November 30, 2013

புலிகளுடன் தொடர்புடைய கத்தோலிக்க மதகுரு ஒருவர் தொடர்பான விசாரணைகளை இந்திய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்!

Saturday, November 30, 2013
சென்னை::புலிகளுடன் தொடர்புடைய கத்தோலிக்க மதகுரு ஒருவர் தொடர்பான விசாரணைகளை இந்திய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
 
அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு சென்ற ஒரு மதகுரு தொடர்பில் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த மதகுரு பற்றிய தகவல்களை தமிழக அரசாங்கம் உள்துறை அமைச்சிற்கு வழங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி கோரியுள்ளார்.

குறித்த மதகுருவினை அமெரிக்க எப்.பி.ஐ புலனாய்வுப் பிரிவினர் குற்றவாளியாக பட்டியல் படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளுடன் குறித்த மதகுருவிற்கு தொடர்பு
இருப்பதாகத் தெரிவித்துள்ளார்..
 
தமிழ் நாட்டில் தலைமறைவாக வாழ்கின்ற  புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
 
கத்தோலிக்க பாதிரியாரான கஸ்பார்ராஜ், புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்களை விநியோகித்ததாக கூறி, அமெரிக்காவின் எப்.பீ.ஐ. புலனாய்வு தரப்பினர் நியூயோர்க் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
 
இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருப்பதாகவும், அவருக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
அவர் தற்போது தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகவும், அண்மையில் இந்தியாவின் என்.டீ.டி.வி தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.
 
அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய உள்துறை அமைச்சு, தமிழக அரசாங்கத்திடம் கோரியுள்ள நிலையில், இதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த மதகுருவிற்கு எதிராக பிடிவிராந்து உத்தரவினை பிறப்பித்துள்ளதாக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment