Saturday, November 30, 2013
சென்னை::ஆந்திராவில் விசாகப்பட்டினம் பகுதியில் எல்லை தாண்டி வந்து இந்தியக் கடல் பகுதிக்குள் மீன் பிடித்த 6 இலங்கை மீனவர்களை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:_
கடலோரக் காவல் படையினர் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த மீன்பிடிப் படகு, இந்தியக் கடல் எல்லைக்குள் பயணித்தது தெரியவந்தது.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்தப் படகில் இருந்தவர்கள் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் என்பது தெரிந்தது. மேலும் அவர்களது பெயர்கள் டில்லன் (24),சுமித் (32), சுரைத் (25), சஞ்சய்யா (25) ரண்டிகா (26), ஜீவன் (26) என்றும், அவர்கள் அத்திமீறி இந்தியக் கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து கடலோரக் காவல் படையினர் அவர்களைப் பிடித்து கொண்டு வந்து சென்னை துறைமுகம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 6 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்
No comments:
Post a Comment