Friday, November 29, 2013
இலங்கை::பாராளுமன்றில் நான்ஆற்றும் உரை குறித்து வெளியில் இருந்து கேள்வி எழுப்பும் உரிமை எவருக்கும் கிடையாது: சிறீதரன் சம்பந்தனுக்கு பதிலடி!!
(புலிகளால்) மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாகிய எனக்கு பாராளுமன்றில் உரையாற்றுவதற்கான சிறப்புரிமை உண்டு. எனது பாராளுமன்ற சிறப்புரிமையை கேள்வி கேட்பதற்கு சபாநாகருக்கும் மட்டுமே உரிமை உண்டு. வேறு எவருக்கும் நான் ஆற்றும் உரைகள் குறித்து வெளியில் இருந்து கேள்வி எழுப்பும் உரிமை கிடையாது" என தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நான் பாராளுமன்றில் என்ன பேசவேண்டும் என்பதனை கட்சியிடம் கேட்டு பேசவேண்டிய அவசியம் இல்லை. நான் (புலிகளால்) மக்களால் தெரிவுசெய்யப்பட்டவன். அப்படி கட்சியிடம் கேட்டுத்தான் பேசவேண்டும் என்றால் நான் வாழ்க்கையில் எதனையும் பேச முடியாது."
அந்த வகையில் எனது பாராளுமன்ற உரைகள் குறித்து பாராளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் படி எதனை நீக்க வேண்டும் எதனை சேர்க்க வேண்டும் என்பதனை சபாநாயகரே தீர்மானிக்க முடியுமே தவிர வேறு எவரும் வெளியில் இருந்து விமர்சிக்கவோ கேள்வி கேட்கவோ முடியாது என சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்...
சிறிதரன் புலிகளின் முக்கிய உறுப்பினராக செயற்பட்ட தீபனின் நெருங்கிய உறவினரெனவும் இந்த உறவு முறையின் அடிப்படையில் சிறிதரன் எம்.பி, பாடசாலை மாணவர்களை புலிகள் இயக்கத்தில் இணைவதற்கு அழுத்தம் கொடுத்தார்,
இலங்கையின் தமிழ் பிரஜைகள் என எடுத்துக்கொண்டால் 90 வீதமானவர்களுக்கு புலிகள் அமைப்பில் உறவினர்கள் இருந்துள்ளனர். ஏனவே அந்த 90 வீதத்தினரும் உறவினர்கள் புலி உறுப்பினர் என்பதற்காக கைது செய்யப்படவில்லை. அத்துடன் அதற்கான இடம் சட்டத்திலும் இல்லை.
ஆனால் சிறிதரன் கிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியராகவிருந்தபோது தனது பாடசாலைக்கு கல்வி பயில வந்த மாணவர்களை புலிகளியக்கத்தில் இணையுமாறு நிர்பந்தித்து புலிகளின் ஆட்சேர்ப்புக்கு உதவியிருந்தார் அவர் குற்றவாளியே. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.
No comments:
Post a Comment