Friday, November 29, 2013
சென்னை::வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2,0 என வென்ற இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை 2,1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்த வெற்றி குதூகலத்துடன் டோனி அன்கோ தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு செல்லும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் மோதுகிறது.
முதல் ஒருநாள் போட்டி வருகிற 5ந்தேதி ஜோகனன்ஸ்பர்க்கிலும், 2வது ஆட்டம் 8ந்தேதி டர்பனிலும், 3வது மற்றும் கடைசி ஒன்டே 11ந்தேதி செஞ்சூரியனிலும் நடக்கிறது. ஒருநாள் போட்டியை தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது. முதல் டெஸ்ட் 18ந்தேதி முதல் 22ந்தேதி வரை ஜோகனன்ஸ்பர்க்கிலும், 2வது மற்றும் கடைசி டெஸ்ட் 26ந்தேதி முதல் 30ந்தேதி வரை டர்பனிலும் நடைபெறுகிறது.
இந்த தொடரில் ஜாகீர்கான் இடம் பிடித்திருப்பது இந்திய அணியின் பந்து வீச்சை பலப்படுத்தும் என நம்பப்படுகிறது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான தென் ஆப்ரிக்க ஆடுகளங்களில் ஜாகீர்கானின் ஸ்விங் கைகொடுக்கக்கூடும். சச்சின் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அனைவரும் விடைபெற்ற நிலையில் இந்த தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் இளம் வீரர்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
No comments:
Post a Comment