Friday, November 29, 2013

புலிகளினால் கொலை செய்யப்பட்ட ராஜிவ் கொலை சதியை விசாரிக்கும் சி.பி.ஐ., ஏஜன்சியின் செலவு ரூ.100 கோடி!

Friday, November 29, 2013
சென்னை::முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலை வழக்கின் பின்னணியில் உள்ள சதி குறித்து விசாரிக்கும், பல்நோக்கு கண்கணிப்பு ஏஜன்சி, 100 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது,'' என, தூக்கு தண்டனை கைதி பேரறிவாளன் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் தெரிவித்தார்.
 
ராஜிவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை, தடா கோர்ட்டில், பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவில், "சதி திட்டம் குறித்து விசாரணை நடத்தும், பல்நோக்கு கண்காணிப்பு ஏஜன்சியை, கோர்ட் கண்காணிக்க வேண்டும். சதியில், உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் தொடர்பு இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, பல்நோக்கு ஏஜன்சியின் விசாரணையை, தீவிரமாக கண்காணிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
 
இம்மனு, நேற்று, தடா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பேரறிவாளன் சார்பில், வழக்கறிஞர், சந்திரசேகரன் ஆஜரானார். விசாரணையின் போது, நிருபர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.
விசாரணைக்குப் பின், வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறும்போது, ""பல்நோக்கு கண்காணிப்பு ஏஜன்சி, 100 கோடி ரூபாய்க்கும் மேல், செலவு செய்துள்ளது. சிறப்பு குழுவில், இயக்குனர், இரண்டு, இணை இயக்குனர்கள், டி.ஐ.ஜி., ஐந்து, எஸ்.பி.,க்கள் உள்ளனர். இக்குழு, கோர்ட்டுக்கு அறிக்கையை தாக்கல் செய்கிறது. ஆனால், அவற்றை தொடுவதில்லை. கோர்ட்டை கண்காணிக்க கோருவதற்கு, பேரறிவாளனுக்கு உரிமை உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment