Tuesday, December 31, 2013

புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் புலி ஆதரவாளர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் யாழ் குடாநாட்டிற்கு விஜயம்??

Tuesday, December 31, 2013
இலங்கை::
புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் புலி ஆதரவாளர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் யாழ் குடாநாட்டிற்கு விஜயம்.
 
புலிகளின் ஆதரவு கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன் உண்மையைக் கண்டறியும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கும் முனைப்பின் ஒர் கட்டமாக இந்த விஜயம் கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளன.

புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் புலி ஆதரவாளர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாண குடாநாட்டிற்கு விஜயங்களை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
 
 
மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் பிரவேசித்து இவ்வாறு யாழ்ப்பாண குடாநாட்டிற்கு விஜயம் செய்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ராதீகா சிற்சபேசன்  புலி ஆதரவு அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவவர் .


 
ஆளும் கட்சியின் சார்பில் அண்மையில் தீபக் ஒபராய் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும், அதற்கு போட்டியாகவே எதிர்க்கட்சியின் சார்பில் புலி ஆதரவு ராதீகா சிற்சபேசன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாண ஆளுநரின் புது வருட வாழ்த்துச்செய்தி!

Tuesday, December 31, 2013
இலங்கை::வட மாகாண மக்களுக்கு எனது உளங்கனிந்த புது வருட வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.மலரும் புத்தாண்டு உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் சாந்தி, சமாதானம், சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டுமென வாழ்த்துகிறேன்.”
தற்போது நிலவும் வருடமானது முடிவுக்கு வரும் இவ்வேளையில் புது வருடம் 2013க்குரிய வாழத்துரைகளையும் நல்லாசிகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப் புத்தாண்டில் சிறப்பு வாய்ந்த அனைத்தும் கிடைக்க வேண்டுமெனவும், இவற்றுடன் தங்களுக்கு மன நிறைவும், சந்தோசமும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டுமெனவும் வாழ்த்துகின்றேன்.

மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட சமாதான சூழ்நிலையையும் மகிந்த சிந்தனையான வடக்கின் வசந்தம் / உத்துறு வசந்தய ஆகிய செயல்திட்டங்களின் அடிப்படையில் வட மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களின் பலா பலன்களையும் இம் மாகாணத்தில் வாழும் மக்கள் அனுப்பவிக்க்க் கூடியதாக இருக்கின்றது என்பதை, வட மாகாண ஆளுநர் என்ற வகையில் நான் நினைவு கூருவதில் பெருமிதம் அடைகின்றேன். மேற்குறிப்பிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் பொருளாதர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ச அவர்களின் வழிகாட்டல்களின் கீழ் ஜனாதிபதி அவர்களின் துரித செயலணியினால் முறையாக அமுலாக்கப்பட்டன.

கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன.இடம்பெயர்ந்தோர் மீள்க்குடியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் பலர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர். சேதமுற்ற வீடுகள் புனரமைக்கப்பட்டுள்ளன. புதிய வீடுகள் பல நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இத்தருணத்தில் எமது நடவடிக்கைகளை முன்னோக்கி நகர்த்துவது காலத்தின் தேவை.

மிகவும் சந்தோஷமானதும் அதிஷ்டம் நிறைந்த்துமான இப்புத்தாண்டு மலரட்டும் என்று வாழ்த்துகின்றேன்.

ஜி.ஏ. சந்திரசிறி

ஆளுநர்

வட மாகாணம்.

வடக்கு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 18 பேர் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியல்!

Tuesday, December 31, 2013
இலங்கை::வடக்கு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 18 பேர் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்கள் நேற்று மாலை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.கணேஷமூர்த்தி தெரிவித்தார்.

அவர்களின் 03 படகுகளையும் காங்கேசன்துறை மீன்பிடித் துறைமுகத்தில் தடுத்துவைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவு பிறப்பித்தார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக தமிழகத்தின், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊர்காவற்துறை பகுதியில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இந்த வாரம் தமிழக அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாக இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக இந்திய பிரதமர் தெரிவித்ததாக, தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தமிழக மீனவர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசாங்கம் கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இலங்கை மற்றும் தமிழக மீனவ பிரதிநிதிகள் இடையே எதிர்வரும் 20 ஆம் திகதி பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரு நாட்களாக தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த நடவடிக்கை பேச்சுவார்த்தை மீதான நம்பிக்கையை இல்லாது செய்துள்ளதாக தி.மு.க தலைவர் குறிப்பிட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மன்னிப்பு கேட்க முடியாது தேவயானி மீதான வழக்கை தீவிரமாக விசாரிப்போம் அமெரிக்க அதிகாரிகள் தகவல்!!

Tuesday, December 31, 2013வாஷிங்டன்::இந்திய தூதரக பெண் அதிகாரி தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற முடியாது. இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது.
 
விசா முறைகேடு மற்றும் பணிப்பெண்ணுக்கான சம்பள விவகாரத்தில் இந்திய பெண் தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடேவை நியூயார்க் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது இடத்தில் கை விலங்கிட்டு கைது செய்தனர். மேலும் அவரை அவமானப்படுத்தியதாக செய்திகள் வெளியாயின.
 
தேவயானி கைது சம்பவத்துக்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், தேவயானியை கைது செய்ய முடியாத வகையில், ஐநாவுக்கான சிறப்பு தூதராக நியமித்து
உத்தரவிட்டது.
 
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கான பாதுகாப்புகளை மத்திய அரசு குறைத்தது. அத்துடன் அமெரிக்க தூதரக அதிகாரிகளின் சலுகைகளும் பறிக்கப்பட்டன. ஐநா சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள தேவயானிக்கு, விசாரணை விலக்கு அந்தஸ்து உள்ளது என்றும், அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் அமெரிக்காவை வலியுறுத்தினர்.
 
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், தேவயானிக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவர் ஜனவரி 13ம் தேதிக்குள் வழக்கில் ஆஜராக வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தூதராக இருந்தாலும் வழக்கில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க முடியாது. தேவயானியை மன்னிக்க வேண்டும் என்ற இந்திய தரப்பின்
 
கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் சிக்கல் நீடிக்கிறது. -

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண ஜெ., - பிரதமர் விரைவில் ஆலோசனை!

Tuesday, December 31, 2013
சென்னை::இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள், தொடர்ந்து கைது செய்யப்படும் பிரச்னைக்கு, தீர்வு காண்பது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர், மன்மோகன் சிங் ஆலோசனை நடத்த உள்ளதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
தமிழக மீனவ சங்க பிரதிநிதிகள், டில்லியில், பிரதமர், மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து, மனு அளித்தனர். பிரதமர் இல்லம் கடலூர் லோக்சபா தொகுதி, காங்கிரஸ், எம்.பி., - கே.எஸ்.அழகிரி தலைமையில், மீனவர்கள், நேற்று காலை, 11:00 மணிக்கு, பிரதமர் இல்லத்தில், அவரை

சந்தித்தனர்.நிருபர்களிடம், கே.எஸ்.அழகிரி கூறியதாவது: மீனவர்கள் பிரச்னையில், அ.தி.மு.க., அரசு, நிஜமான அக்கறை காட்டாமல், அரசியல் ஆக்குவதிலேயே முனைப்பாக உள்ளது. இவ்விஷயத்தில்,
 
ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை, காங்கிரஸ் மட்டுமே கடை பிடிக்கிறது.இருப்பினும், இந்த பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காணப்படுவது அவசியம். இதை தான், தமிழக காங்கிரஸ் சார்பில், மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளோம்.வெளியுறவுத் துறை மாதத்தில், 15 நாட்கள் தமிழக மீனவர்களும், மீதி, 15 நாட்கள், இலங்கை மீனவர்களும், மீன் பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக இருநாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகளும் சந்தித்துப் பேச, வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து, தமிழக முதல்வர், ஜெயலலிதாவுடன், தான் ஆலோசிக்க இருப்பதாக, பிரதமர் மன்மோகன் சிங், உறுதியளித்தார்.இவ்வாறு, கே.எஸ்.அழகிரி, கூறினார்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 256 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை பிரதமருக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்!

Tuesday, December 31, 2013
இலங்கை::சென்னை::இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 256 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ம்மாதம் 12ம் தேதி, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 111 பேரும், 15 படகுகளும் சிறை பிடிக்கப்பட்டன. அவர்கள் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 28ம் தேதி புதுக்கோட்டையைச் சேர்ந்த 22 மீனவர்களையும், 29ம் தேதி பாம்பனைச் சேர்ந்த 18 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் மீண்டும் பிடித்து சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இவ்வாறு செயல்படுவது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பகுதியாக இருந்த கச்சதீவை தாரை வார்த்ததன் காரணமாக, தமிழக மீனவர்கள் பாக்ஜல சந்தி பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் இணைந்து தொடர்ந்து பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டாலும், அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரை கொடூரமாக தாக்கப்படுவது தொடர்கிறது. இந்திய அரசு இனிமேலும் பொறுத்து கொள்ளாமல், இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இருநாட்டு மீனவர்களும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி, வரும் ஜனவரி 20ம் தேதி இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தலாம் என ஏற்கனவே டிசம்பர் 23ம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசும் இதை ஏற்றுக்கொண்டதாக பத்திரிகைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை. இந்த சூழ்நிலையில், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்காது. எனவே, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 256 தமிழக மீனவர்களையும், அவர்களது 81 படகுகளையும் விடுவிக்க பிரதமர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட இந்திய மற்றும் இலங்கை மீனவர்களில் சிலர் வடக்கு கடற்பரப்பில் இருநாட்டு பாதுகாப்பு பிரிவினரிடம் புரிந்துணர்வு அடிப்படையில் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர்!

Tuesday, December 31, 2013
இலங்கை::விடுதலை செய்யப்பட்ட இந்திய மற்றும் இலங்கை மீனவர்களில் சிலர் வடக்கு கடற்பரப்பில் இருநாட்டு பாதுகாப்பு பிரிவினரிடம் புரிந்துணர்வு அடிப்படையில் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் ஆறுபேரும், இரண்டு மீன்பிடி படகுகளும் இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர், கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 12 இலங்கை மீனவர்களும், 02 மீன்பிடிப் படகுகளும் இலங்கை கடற்படையினரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறையை அண்மித்த பகுதியிலுள்ள இரண்டு நாடுகளினது கடல் எல்லையில், இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் இலங்கை மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

ஜனா­தி­பதி தலை­மை­யி­லான அர­சாங்கம் எதனைச் செய்­தாலும் அதனை எதிர்ப்­பது என்ற நிகழ்ச்சிநிரலின் அடிப்­ப­டை­யி­லேயே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு: கெஹெ­லிய ரம்­புக்­வெல!

Tuesday, December 31, 2013
இலங்கை::ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் எதனைச் செய்­தாலும் அல்­லது எந்த வேலைத்­திட்­டத்தை முன்­மொ­ழிந்­தாலும் அதனை எதிர்ப்­பது என்ற நிகழ்ச்சிநிரலின் அடிப்­ப­டை­யி­லேயே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது.

எனவே இந்த விட­யத்­துக்கு அப்பால் கூட்­ட­மைப்பின் செயற்­பா­டுகள் குறித்து பேசு­வ தில் அர்த்தம் இல்லை என்று ஊட­கத்­துறை அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.
 
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் இன்னும் நாட்டை பிள­வு­ப­டுத்தும் நோகத்­தி­லேயே உள்­ளனர்.அதற்கு தடை­யாக இருக்­கின்ற ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ராக புலி ஆத­ரவு புலம் பெயர் மக்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வதே கூட்­ட­மைப்பின் நோக்­க­மா­க­வுள்­ளது என்றும் அமைச்சர் குறி ப்­பிட்டார்.
பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறு­கையில்:-
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்தை எதிர்க்­க­வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் அடிப்­ப­டையில் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. எனவே அர­சாங்கம் எவ்­வா­றான வேலைத்­திட்­டங்­க­ளையும் யோச­னை­க­ளையும் முன்­வைத்­தாலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது அவற்றை நிரா­க­ரித்­து­விடும் நிலை­யி­லேயே உள்­ளது.
அதா­வது ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை அசௌ­க­ரி­யப்­ப­டுத்­த­வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலில் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. அவ்­வாறு ஒரு நோக்­கத்­திலும் திட்­ட­மிட்ட நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­யவும் செயற்­பட்­டு­வரும் கூட்­ட­மைப்பு தொடர்பில் பேசிக்­கொண்­டி­ருப்­பதில் அர்த்­த­மில்லை.
அர­சாங்கம் எதனை செய்­தாலும் அதனை எதிர்ப்­பது என்ற நோக்­கத்­துடன் செயற்­படும் அர­சியல் கட்­சி­யுடன் எவ்­வாறு செயற்­ப­டு­வது? தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது தொடர்ந்தும் நாட்டை பிரிக்­க­வேண்டும் என்ற இலக்­கி­லேயே செயற்­ப­டு­கின்­றது.
அந்த நோக்­கத்­துக்கு தடை­யாக இருக்­கின்ற ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ராக சர்­வ­தே­சத்தில் இயங்கும் புலி ஆத­ரவு புலம் பெயர் மக்­க­ளுடன் இணைந்து கூட்­ட­மைப்பு நகர்­வு­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றது. எனவே அந்த நிகழ்ச்சி் நிர­லுக்கு அமை­யவே அவர்­களின் செயற்­பாடு அமைந்­தி­ருக்கும்.
குறிப்­பாக தேசிய பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணும் நோக்கில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வர முடி­யாது என்று கூட்­ட­மைப்பு கூறி­வ­ரு­கின்­றது. எனினும் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் இணைந்து அர­சியல் தீர்வு காணும் செயற்­பாட்­டுக்கு ஆத­ரவு வழங்­கு­மாறு அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக கோரி வரு­கின்­றது. ஆனால் கூட்­ட­மைப்பை பொறுத்­த­வரை பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு அல்ல எவ்வகையான யோசனையை முன்வைத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளாது.
காரணம் அர­சாங்கம் எதனை செய்­தாலும் அதனை எதிர்ப்­பது என்ற நிலைப்­பாட்­டி­லேயே கூட்­ட­மைப்பு இருந்­து­வ­ரு­கின்­றது. எனவே இந்தக் கட்­டத்­துக்கு அப்பால் அவர்கள் குறித்துப் பேசிக்­கொண்­டி­ருப்­பதில் அர்த்தம் இல்லை என்றார்.

புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பயணிகளின் பொருட்கள் துரையப்பா மைதான அரங்கில் காட்சிக்கு வைப்பு!

Tuesday, December 31, 2013
இலங்கை::புலிகளினால் ஷெல் தாக்குதலின் மூலம்   சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பயணிகளின் எலும்புகள், ஆடைகள் போன்ற பொருட்கள் ஜனவரி மாதம் 11,12ம் திகதிகளில் துரையப்பா மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். பயணிகளின் உறவினர்கள் அன்றைய தினம் அங்கு வந்து அப்பொருட்களை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

யாழ்ப்பாணத்திற்கும் மன்னாருக்கும் இடையில் உள்ள இரணைத்தீவுக்கு அப்பால் 1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ம் திகதி முற்பகல் 11 மணியளவில் புலிகளினால் ஷெல் தாக்குதலின் மூலம் ஆழ்கடலில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
 
குறித்த லயன் எயார் விமானத்தின் உதிரிப் பாகங்களும் பயணிகளின் ஆடைகள் போன்றவையும் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற ரஷ்ய விமானியின் தங்கப் பல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த விமானம் இரணைதீவில் இருந்து வடபகுதியில் சுமார் 4 கடல் மைல்களுக்கு அப்பால் கடலில் தரைமட்டத்தில் மூழ்கியிருந்தது.

இதனை தோண்டி எடுக்கும் பணிகள் இவ்வாண்டு மே மாதம் 3ம் திகதி
முதல் 6ம் திகதி வரையில் ஆழ்கடலில் இடம்பெற்றன. இந்த விமானத்தில் 4 ரஷ்ய விமானிகள் உட்பட 7 விமான சிப்பந்திகளும் 48 பயணிகளும் இருந்தனர்.
 
எல்லாமாக 3 விமான உபசரணையாளர்களும் இருந்தனர். இதில் பெண் உபசரணையாளராக இருந்த செல்வி தர்ஷினி குணசேகர முன்னாள் பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான குணசேகரவின் புதல்வியாவார்.
 
இந்த விமானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பயணிகளின் எலும்புகள், ஆடைகள் போன்ற பொருட்கள் ஜனவரி மாதம் 11,12ம் திகதிகளில் துரையப்பா மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

பயணிகளின் உறவினர்கள் அன்றைய தினம் அங்கு வந்து அப்பொருட்களை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

மட்டக்களப்பில் நவீன சந்தைக்கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு!

Tuesday, December 31, 2013
இலங்கை::மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பொதுச்சந்தையினை விரிவுபடுத்தும் வகையில் நவீன வர்த்தக நிலையங்களை கொண்டதான சந்தைக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,மாநகரசபையின் பிரதி ஆணையாளர் தனஞ்செயன்,கணக்காளர் மற்றும் மாநகரசபை ஊழியர்களும் இதில் கலந்துகொண்டனர்.

மகிந்த சிந்தனையின் கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இதற்கென சுமார் 40 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

இரவு வேளைகளிலும் செயற்படக்கூடியவாறு நவீன முறையில் இந்த சந்தை அமையவுள்ளதாக மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் தெரிவித்தார்.

இதன் மூலம் உற்பத்தியாளர்களும் பொதுமக்களும் நன்மையடையமுடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விஷேட நன்றியினை தெரிவிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்: பாராளுமன்றத்தில் சகவாழ்வு பிரதியமைச்சர் றிஸான் விசேடஉரை!

Tuesday, December 31, 2013
இலங்கை::இளைஞர் பாராளுமன்றத்தின் 5 வது அமர்வு 2014ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டவிவாதம் நடைபெறுகின்றது. 27ம் திகதிதொடக்கம் 29.12.2013ம் திகதிவரை இவ்நிகழ்வில் பிரதமவிருந்தினராக தேசியமொழி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வொசுதேவ நானயக்கார, இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்திஅமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் கலந்து கொண்டார்கள்.
 
இவ் அமர்வில் முதலாவது நாளில் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சகவாழ்வு பிரதியமைச்சருமான எம்.எல்.எம்.றிஸான் விஷேட உரையினை நிகழ்த்தினார்.
ஆங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் முதற்தடவையாக எமது நாட்டின் இளைஞர்,யுவதிகளின் முன்னேற்றத்திற்கு கூடுதலான நிதியினை வழங்கவுள்ளார்கள் என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
 
இந்த இளைஞர் பாராளுமன்றத்தின் இளைஞர் சகவாழ்வுபிரதியமைச்சர் என்ற ரீதியில் எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விஷேட நன்றியினை தெரிவிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
மேலும்,’எதிர்காலத்தில் வரவுசெலவுத்திட்டத்தினூடாக இளைஞர்பாராளுமன்றஉறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியினைவழங்கவேண்டும்’எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
 
எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தியாகத்துடன்,அர்பணிப்புடன் விவசாயம், கடல் தொழிலினை மேற்கொண்டுவரும் தொழிலாளர்களுக் குவரவு செலவு திட்டநிதியினூடாக கூடுதலான நிதியினை வழங்கி அவர்களின் குடும்பவருமானம் முன்னேற்றமடைய உதவிகளை வழங்க வேண்டும். மேலும்,விவசாயம்,கடற்றொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய புலமைப் பரிசில்கள் விஷேடமாக வழங்கவேண்டும் எனவும் தனது ஆலோசனையை முன்வைத்தார்.
 
மஹிந்த சிந்தனை அடிப்படையில் 25 தொழிற்பயிற்சி கல்லூரியாக தரம் உயர்த்தும் வேலைத்திட்டத்தில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையம் உள்வாங்கப்பட வேண்டும் எனவும், அம்பாறை மாவட்டத்தின் இளைஞர்,யுவதிகளின் கல்விகேந்திர நிலையமாக செயற்பட்டுவருகின்றது. 2011ம் ஆண்டு இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் திறந்துவைக்கப்பட்டது.
 
இவ் இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தினை தொழிற்பயிற்சி (சர்வதேச தரத்திலான) டிப்ளோமா கல்வித் தரமாக உயர்த்தவேண்டுமெனவும், இத் தொழிற் பயிற்சிநிலையத்தில் ‘மொழி ஆய்வு கூட தொழிற் பயிற்சிகல்லூரியாக’மாற்றி சிங்களம்,தமிழ்,ஆங்கிலம் மற்றும் வெளிநாடுகளில் எமது இளைஞர்கள் தொழிவாய்ப்பைப் பெற அதிக சம்பளத்துடன் பணியாற்ற அரபுமொழி, ஜப்பான் மொழி,கொரியா மொழிகளை கற்பிக்கும் மொழிக் கல்லூரியாக மாற்றம் பெறவேண்டும் எனவும் இதற்கு எங்களது இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருக்கும் அமைச்சர் வாசுதேசநாணயக்கார இத்திட்டதிற்கு பங்களிப்பு வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
 
மேலும், கருத்துத் தெரிவிக்கையில் அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் வியாபாரக் குறுகியநோக்குடன் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் இளைஞர்கள் பல பாதிப்புக்களுக்கு உள்வாங்கப்படுகின்றார்கள். பதிவு செய்யப்படாமல் இயங்கும் கல்வி மையத்தின் சிறப்பற்ற கல்வியினையும்,தரமற்ற சான்றிதழ்களும் பெற்று எமது இளைஞர்கள் பல ரூபாய்க்களை இழக்கின்றார்கள். எனவே, இதனைக் கவணத்திற்கொண்டு நாம் செயற்பட வேண்டிய கட்டாய காலத்தில் உள்ளோம்.
 
சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்தினை’தரமுயர்த்தக்கோரி’ சபாநாயகருக்கு விஷேட அறிக்கையினை சகவாழ்வு பிரதியமைச்சரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். றிஸான் வழங்கிவைத்தார். பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி,எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்கள் என்பது எமது நாட்டின் இளைஞர் பாராளுமன்றத்தின் வரலாற்றின் முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை ரீதியில் கல்வி அமைச்சால் நடாத்தப் பட்ட சிங்கள வாசிப்புப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவி!

Tuesday, December 31, 2013
இலங்கை::கிரி/சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையைச் சோ்ந்த தரம் 9ல் கல்வி கற்கும் மாணவி தஹானி பிர்தவ்ஸி அகில இலங்கை ரீதியில் கல்வி அமைச்சால் நடாத்தப் பட்ட சிங்கள வாசிப்புப் போட்டியில் வெற்றி பெற்று தனக்கான பரிசை கௌரவ கல்வி அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொள்வதைப் படத்தில் காணலாம்.


கல்முனை மாநகர சபை பட்ஜெட் சர்ச்சை; மு.கா. உறுப்பினர்களுடன் சுமூக தீர்வு!!

Tuesday, December 31, 2013
இலங்கை::நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஆதரித்து வாக்களிப்பது என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று, நேற்று மாலை நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் மு.கா.செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போதே கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் மேற்படி தீர்மானத்தை ஏகமனதாக மேற்கொண்டதாக மு.கா.செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி மெட்ரோ மிரர் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

கடந்த 2013-12-23ம் திகதி சமர்ப்பிக்கப்பட இருந்த கல்முனை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாளை 31 ஆம் திகதிக்கு முதல்வரினால் ஒத்தி வைக்கப்பட்டமை தெரிந்ததே.

இந்நிலையில் முஸ்லீம் காங்கிரசின் கல்முனை மாநகர உறுப்பினர்களிடையே ஏற்பட்டிருந்த கருத்து முரண்பாடுகளை நிவர்த்திக்கும் நோக்கில் இவ்விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்த ஹசன் அலி எம்.பி.;குறித்த உறுப்பினர்களின் குறை, நிறைகள் யாவும் தலைவரினால் கேட்டறியப்பட்டு- அவற்றுக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எல்லோரது பிரச்சனைகளையும் தான் உள்வாங்கியுள்ளதகவும் இப்போதைய சூழலில் எல்லோரும் ஒன்றிணைந்து கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தை வெற்றியடைய செய்ய பாடுபட வேண்டும் எனவும் இதன்போது தலைவர் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தை ஆதரித்து வாக்களிப்பது என கூட்டாக உறுதியளித்தனர் என்று ஹசன் அலி எம்.பி. மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் தலைவர், செயலாளர் ஆகியோருடன் கல்முனை அபிவிருத்தி குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மாகாண சபையின் முஸ்லீம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் முழக்கம் அப்துல் மஜீத், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், முன்னாள் முதல்வர் சிராஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் எம்.பி. அழகிரி தலைமையில் தமிழக மீனவ பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு!

Tuesday, December 31, 2013
புதுடெல்லி::தமிழக மீனவர் சங்க பிரநிதிகள் ஏற்கனவே தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் பிரதமரை சந்தித்து இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிகழ்ச்சி நடந்த 2 நாட்களில் தமிழகத்தின் ராமேசுவரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் காங்கிரஸ் எம்.பி. கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர்.

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட அவர்களுடைய படகுகளை மீட்கவும், இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண ஏற்பாடு செய்யவும் கோரி மனு ஒன்றையும் பிரதமரிடம் அளித்தனர்.

கே.எஸ்.அழகிரி எம்.பி.யுடன் மீனவர் பிரதிநிதிகள் ஆம்ஸ்ட்ராங், குணசேகரன், சங்கர் மற்றும் சிப்பிரியன் ஆகியோரும் உடனிருந்தனர்.

பிரதமரின் சந்திப்புக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

சுமார் 285 மீனவர்கள் இன்றும் இலங்கை சிறையில் இருக்கிறார்கள் என்பதையும், ஏராளமான படகுகள் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பதையும், மீனவர்களையும், படகுகளையும் விரைவில் மீட்டுத்தர வேண்டும் என்றும் பிரதமரிடம் விளக்கியுள்ளோம்.

இந்த பிரச்சினையை தான் நன்கு அறிந்திருப்பதுடன், வெளியுறவுத்துறை மந்திரி மூலமாக இலங்கை அரசுடன் பேசி வருகிறோம். தமிழக மீனவர்களும், யாழ்ப்பாண மீனவர்களும் கலந்து பேசி ஒரு முடிவினை காண்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தமிழக அரசுக்கு இதுபற்றிய தகவலை அனுப்பியிருக்கிறோம். அவர்களின் ஒப்புதல் கிடைத்த பிறகு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று பிரதமர் கூறினார்.

பிரதமரை சந்திக்கும் முன் மீனவ பிரதிநிதிகள் நிதி மந்திரியையும் சந்தித்து தங்கள் பிரச்சினையை கூறியுள்ளனர். அவர் உடனடியாக பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்தார். இந்த பிரச்சினையில் பிரதமர் தலையிட்டுள்ளதால் பெரிய மாற்றம் ஏற்படும் என்று கருதுகிறோம்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்!

Tuesday, December 31, 2013
சென்னை::மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கடந்த சனிக்கிழமையன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுகை மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச் சென்றுள்ளது. மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், வலைகள் மற்றும் டீசலையும் பறித்துச் சென்றுள்ளது.

மேலும், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்களையும் நேற்று சிறைபிடித்துச் சென்றுள்ளது. இலங்கை கடற்படையின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே, மத்திய அரசு ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 210 மீனவர்களை யும், நேற்றும், நேற்று முன்தினமும் கைது செய்யப்பட்டுள்ள 40 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள படகுகள், வலைகள் உள்ளிட்டவற்றை திரும்ப அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும், மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

 

2014ம் வருடத்திற்கான வடகடல் செயற்பாடுகளின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

Tuesday, December 31, 2013
இலங்கை::வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் 2014ம் வருடத்திற்கான செயற்பாடுகளின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடலொன்று நேற்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், வடகடல் நிறுவனத்தை இலாபகரமான முறையில் முன்னெடுப்பது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
 
கடற்தொழிலாளர்கள் மத்தியில் வடகடல் நிறுவனத்தின் வலைகள் தொடர்பில், விழிப்புணர்வுகளை விரிவாக்குவது, கடற்தொழில் சார்ந்த முக்கிய இடங்களில் நிறுவனத்தின் விற்பனைக் கூடங்களை ஆரம்பிப்பது, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு உற்பத்திகளை வழங்குவதை மேலும் பரவலாக்குவது போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.
 
தரம் குறைந்த மீன்பிடி வலைகள் மலிவாகக் கிடைக்கக்கூடிய விற்பனைச் சந்தையில் வடகடல் நிறுவன வலைகளை தரம் கூடியதாக உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில், பிரதி அமைச்சர் வீரகுமார திசாநாயக்க, பதில் செயலாளர் திருமதி. மங்கலிக்கா அதிகாரி, அமைச்சர் அவர்களது ஆலோசகர் திருமதி. ஜெகராஜசிங்கம், வடகடல் நிறுவனத் தலைவர், பொது முகாமையாளர் உட்பட ஏனைய அதிகாரிகள், அமைச்சு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காலி லபுதுவயில் நிர்மாணிக்கப்பட்ட தென் மாகாண சபைக்கான நான்கு மாடிக்கட்டடத்தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு!

Tuesday, December 31, 2013
இலங்கை::தென் மாகாண சபை மூலம் காலி லபுதுவயில் நிர்மாணிக்கப்பட்ட மாகாண சபை செயலகத்துக்கான நான்கு மாடி கட்டடத்தொகுதி நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
 
தக்ஷின பாய" என்ற பெயரிலான இந்த கட்டடத் தொகுதியின் திறப்பு விழாவில், அமைச்சர் குணரத்ன வீரகோன் இதென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டி கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான ரமேஷ் பத்திரண, மனுஷ நாணயக்கார  உட்பட பிரமுகர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

வடக்கில் பிரிவினைவாதம் அரச விரோத செயற்பாடு குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி: (புலி)கூட்டமைப்பின் சிறீதரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்வது குறித்து யோசனை!

Tuesday, December 31, 2013
இலங்கை::வடக்கில் பிரிவினைவாதம் அரச விரோத செயற்பாடு குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி: (புலி)கூட்டமைப்பின் சிறீதரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்வது குறித்து யோசனை.colombo பத்திரிகை தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனை நாடாளுமன்றிலிருந்து வெளியேற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தொடர்ந்தும் பிரிவினைவாதம் அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார் என  தெரிவித்துள்ளது.

எனவே, சிறீதரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்வது குறித்து  கவனம் செலுத்தி வருகின்றது.

சிறீதரன் அண்மையில் இந்திய விஜயத்தை முடித்துக் கொணடு நாடு திரும்பிய போது, புலிகளின் ஆதரவு அமைப்பான மே 17 என்னும் பிரிவினைவாத அமைப்பின் உறுப்பினர் தமிழ் பிரபாகரன் என்பவரை நாட்டுக்குள் அழைத்துச் சென்றதாக  பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

(புலி)கூட்டமைப்பின் சிறீதரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் அவசியமாகின்றது.

(புலி)கூட்டமைப்பின் சிறீதரன் கிளிநொச்சி பாடசாலையொன்றின் அதிபராகக் கடயைமாற்றியுள்ளார்.  யாழ் புலிகளின் தலைவர் தீபன், சிறீதரனின் நெருங்கிய உறவினர்.

வடக்கில் குழப்பங்களை ஏற்படுத்த சிறீதரன் முயற்சிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக colombo பத்திரிகை தெரிவித்துள்ளது.

நெடுந்தீவை சேர்ந்த (புலி)கூட்டமைப்பின்  
சிறீதரன் ஆசிரியராகவும் கிளிநொச்சி பாடசாலையின் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணத்தில் த.தே.கூட்டமைப்புடன் சந்தித்து பேசவுள்ளார்!

Tuesday, December 31, 2013
இலங்கை::இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் ஜாஃப்ரி டாய்ட்ஜ்(Geoffrey Doidge), கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் யாழ்ப்பாணத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
 
இவர் நல்லூர் கந்தசாமி கோவில், வல்லிபுர ஆழ்வார் கோவில், மற்றும் நயினாதீவு ஆகிய இடங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். யாழ். கோட்டை, பொது நூலகம் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களுக்கும் அவர் சென்று பார்வையிட்டுள்ளார்.
 
யாழ்ப்பாணம் சென்றுள்ள தென்னாப்பிரிக்கத் தூதுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் 
  தெரிவித்துள்ளார்
 
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, வடக்கு மாகாண சபையின் நிர்வாகம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆகியன குறித்து தென்னாப்பிரிக்கத் தூதுவர் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்ப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இலங்கைக்கு உதவ கியூபா உறுதி!

Tuesday, December 31, 2013
இலங்கை::ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வின்போது வரக்கூடிய இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கையின் நட்பு நாடுகளில் ஒன்றான கியூபா உதவுவதாக உறுதியளித்துள்ளது.
 
எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக, கொள்கை அடிப்படையிலான குறிப்பான தீர்மானங்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்பதனால், கியூபா அதை எதிர்க்கின்றது என கியூபா தூதுவர் இந்திரா லோப்பஸ் கூறினார்.
 
இப்படி ஒரு நாட்டைத் தனியாக தேர்ந்தெடுத்து தீர்மானம் கொண்டுவருவது ஒத்துழைப்பாகாது. இது அந்த நாட்டின் இறைமையை மீறுவதாகும். இது ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தேவையின்றி தலையிடுவதாகும். இது ஒரு நாட்டின் மீது தேவையில்லாத அழுத்தத்தை பிரயோகிப்பதாகும். இது சர்வதேச சட்டத்தின் உண்மைப் பொருளாகாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்க முடியாத நிலையில் கியூபா உள்ளதென்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளின் ஆதரவு கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் யாழ் நல்லூரில்!

Tuesday, December 31, 2013
இலங்கை::கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன்
சுற்றுலா விசாவில் வந்துள்ள இவர் எதிர்வரும் 2 ஆம் திகதிவரை தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது .
 
தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள இவர் நேற்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் . சிறிதரன் மற்றும் வட மாகண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார் .
 
மீள்குடியர்ந்த மக்களுடனும் கலந்துரையாடியுள்ளார் .அத்துடன் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு செயற்படும் பல அமைப்புக்களையும் சந்தித்து அவர் பேச்சு நடத்தியுள்ளார் .
 
இதேவேளை யாழிலுள்ள சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கும் இவர் விஜயம் மேற்கொண்டுள்ளார் . இந்த முகாமிற்கு ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது .
 
மனித உரிமை பிரச்சினைகள் உட்பட வடக்கின் நிலைமைகள் குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
 
இலங்கையில் பிறந்த ராதிகா கனடாவின் ஸ்கார்பரே ரூஜ் ரிவர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
 
வடக்கில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்த அவர் அங்குள்ள தற்போதைய நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பாகவும் விளக்கப்பட்டது.
 
வடக்கில் அவர் திரட்டிய தகவல்கள் தொடர்பில் கனடா திரும்பிய பின்னர்

கனடிய  நாடாளுமன்றத்தில் வழங்குவார் என  தெரிவித்தார் (புலிகளின் ஆதரவு) கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன்.

414 புதிய பஸ்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்:-புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்!

Tuesday, December 31, 2013
சென்னை::14 புதிய பஸ்களை  முதல்வர்  ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:_

முதல்வர் ஜெயலலிதா நேற்று (30.12.2013) கோடநாடு முகாம் அலுவலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 333 புதிய பேருந்துகள், 81 புனரமைக்கப்பட்ட பேருந்துகள், என மொத்தம் 414 பேருந்துகளைத்  துவக்கி வைத்தார். மேலும், 5151 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை, பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளமாக 154 கோடியே 26 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் 2 கோடியே 37 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் செரிவான போக்குவரத்து சேவையை பொது மக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. சிற்றூர் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் தங்குதடையின்றி போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 10 லட்சம் பயணிகள் பயணிக்கின்ற அளவில் 20,634 தடப் பேருந்துகளை இயக்கி வருகின்றன. சென்னை மாநகர மக்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்ட சிற்றுந்து சேவைகள் பொது மக்களின் பெரும் வரவேற்பினையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

பொது மக்களின் தேவைகளுக்கேற்ப முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது புதிய பேருந்துகள் மற்றும் புதிய வழித்தடங்களை அறிமுகம் செய்து வருகிறார். அந்த வகையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 333 புதிய பேருந்துகள், 81 புனரமைக்கப்பட்ட பேருந்துகள், என மொத்தம் 414 பேருந்துகளை துவக்கி வைப்பதன் அடையாளமாக நேற்று கோடநாடு முகாம் அலுவலகத்தில், முதல்வர் ஜெயலலிதா 7 ஓட்டுநர்களுக்கு பேருந்துகளுக்கான சாவிகளை வழங்கி, கொடியசைத்து  துவக்கி வைத்தார்.
முதல்வர் ஜெயலலிதா எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலைமை மேம்பட்டு வருவதால் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை, பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளம் ஆகியவை தற்போது விரைவாக வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 247 பணியாளர்களுக்கு 5 கோடியே 52 லட்சம் ரூபாய் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை;

2011 மற்றும் 2012_ஆம் ஆண்டுகளில் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற  4,321 பணியாளர்களுக்கு 140 கோடியே 68 லட்சம் ரூபாய் பணிக்கொடை;

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மே 2012 முதல் ஜூன் 2013 வரை ஓய்வு பெற்ற 583 ஓய்வூதியதாரர்களுக்கு  8 கோடியே 6 லட்சம் ரூபாய் விடுப்பு சம்பளம்;

என மொத்தம் 5151 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை, பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளமாக 154 கோடியே 26 லட்சம் ரூபாய் வழங்கும் அடையாளமாக 4 ஓய்வூதியதாரர்களுக்கு காசோலைகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் அமைந்துள்ள சாலை போக்குவரத்து நிறுவனத்தின், சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் கணிணி அறிவியல் பிரிவிற்கு 15,392 சதுர அடி பரப்பளவில் 1 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் மற்றும் முதுகலை மாணவர்களுக்கென 12,917 சதுர அடி பரப்பளவில்  ஒரு கோடியே 21 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய தங்கும் விடுதி கட்டடம் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை முதன்மைச்  செயலாளர் பிராஞு கிஷோர் பிரசாத், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்!

மின் இணைப்பு நுகர்வோருக்கு 8 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விலையில்லா சிறுகுழல் விளக்கு (சி.எப்எல்) வழங்கும் திட்டத்தை முதல்வர்ஜெயலலிதாநேற்று தொடங்கிவைத்தார்

புதுப்பிக்கத் தக்க மற்றும் மாசற்ற எரிசக்தியினை ஊக்குவித்து அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை தலைமை அலுவலகக் கட்டட மேற்கூரையில் 55 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 60 கிலோ வாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்பை முதல்_அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.மொத்தத்தில் 519 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மின் திட்டங்களை முதல்_ அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்து, மின் விநியோகத்தை துவக்கி வைத்தார்.