Tuesday, December 31, 2013
இலங்கை::மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பொதுச்சந்தையினை விரிவுபடுத்தும் வகையில் நவீன வர்த்தக நிலையங்களை கொண்டதான சந்தைக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,மாநகரசபையின் பிரதி ஆணையாளர் தனஞ்செயன்,கணக்காளர் மற்றும் மாநகரசபை ஊழியர்களும் இதில் கலந்துகொண்டனர்.
மகிந்த சிந்தனையின் கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இதற்கென சுமார் 40 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
இரவு வேளைகளிலும் செயற்படக்கூடியவாறு நவீன முறையில் இந்த சந்தை அமையவுள்ளதாக மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் தெரிவித்தார்.
இதன் மூலம் உற்பத்தியாளர்களும் பொதுமக்களும் நன்மையடையமுடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:
Post a Comment