Tuesday, December 31, 2013

எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விஷேட நன்றியினை தெரிவிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்: பாராளுமன்றத்தில் சகவாழ்வு பிரதியமைச்சர் றிஸான் விசேடஉரை!

Tuesday, December 31, 2013
இலங்கை::இளைஞர் பாராளுமன்றத்தின் 5 வது அமர்வு 2014ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டவிவாதம் நடைபெறுகின்றது. 27ம் திகதிதொடக்கம் 29.12.2013ம் திகதிவரை இவ்நிகழ்வில் பிரதமவிருந்தினராக தேசியமொழி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வொசுதேவ நானயக்கார, இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்திஅமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் கலந்து கொண்டார்கள்.
 
இவ் அமர்வில் முதலாவது நாளில் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சகவாழ்வு பிரதியமைச்சருமான எம்.எல்.எம்.றிஸான் விஷேட உரையினை நிகழ்த்தினார்.
ஆங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் முதற்தடவையாக எமது நாட்டின் இளைஞர்,யுவதிகளின் முன்னேற்றத்திற்கு கூடுதலான நிதியினை வழங்கவுள்ளார்கள் என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
 
இந்த இளைஞர் பாராளுமன்றத்தின் இளைஞர் சகவாழ்வுபிரதியமைச்சர் என்ற ரீதியில் எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விஷேட நன்றியினை தெரிவிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
மேலும்,’எதிர்காலத்தில் வரவுசெலவுத்திட்டத்தினூடாக இளைஞர்பாராளுமன்றஉறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியினைவழங்கவேண்டும்’எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
 
எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தியாகத்துடன்,அர்பணிப்புடன் விவசாயம், கடல் தொழிலினை மேற்கொண்டுவரும் தொழிலாளர்களுக் குவரவு செலவு திட்டநிதியினூடாக கூடுதலான நிதியினை வழங்கி அவர்களின் குடும்பவருமானம் முன்னேற்றமடைய உதவிகளை வழங்க வேண்டும். மேலும்,விவசாயம்,கடற்றொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய புலமைப் பரிசில்கள் விஷேடமாக வழங்கவேண்டும் எனவும் தனது ஆலோசனையை முன்வைத்தார்.
 
மஹிந்த சிந்தனை அடிப்படையில் 25 தொழிற்பயிற்சி கல்லூரியாக தரம் உயர்த்தும் வேலைத்திட்டத்தில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையம் உள்வாங்கப்பட வேண்டும் எனவும், அம்பாறை மாவட்டத்தின் இளைஞர்,யுவதிகளின் கல்விகேந்திர நிலையமாக செயற்பட்டுவருகின்றது. 2011ம் ஆண்டு இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் திறந்துவைக்கப்பட்டது.
 
இவ் இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தினை தொழிற்பயிற்சி (சர்வதேச தரத்திலான) டிப்ளோமா கல்வித் தரமாக உயர்த்தவேண்டுமெனவும், இத் தொழிற் பயிற்சிநிலையத்தில் ‘மொழி ஆய்வு கூட தொழிற் பயிற்சிகல்லூரியாக’மாற்றி சிங்களம்,தமிழ்,ஆங்கிலம் மற்றும் வெளிநாடுகளில் எமது இளைஞர்கள் தொழிவாய்ப்பைப் பெற அதிக சம்பளத்துடன் பணியாற்ற அரபுமொழி, ஜப்பான் மொழி,கொரியா மொழிகளை கற்பிக்கும் மொழிக் கல்லூரியாக மாற்றம் பெறவேண்டும் எனவும் இதற்கு எங்களது இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருக்கும் அமைச்சர் வாசுதேசநாணயக்கார இத்திட்டதிற்கு பங்களிப்பு வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
 
மேலும், கருத்துத் தெரிவிக்கையில் அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் வியாபாரக் குறுகியநோக்குடன் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் இளைஞர்கள் பல பாதிப்புக்களுக்கு உள்வாங்கப்படுகின்றார்கள். பதிவு செய்யப்படாமல் இயங்கும் கல்வி மையத்தின் சிறப்பற்ற கல்வியினையும்,தரமற்ற சான்றிதழ்களும் பெற்று எமது இளைஞர்கள் பல ரூபாய்க்களை இழக்கின்றார்கள். எனவே, இதனைக் கவணத்திற்கொண்டு நாம் செயற்பட வேண்டிய கட்டாய காலத்தில் உள்ளோம்.
 
சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்தினை’தரமுயர்த்தக்கோரி’ சபாநாயகருக்கு விஷேட அறிக்கையினை சகவாழ்வு பிரதியமைச்சரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். றிஸான் வழங்கிவைத்தார். பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி,எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்கள் என்பது எமது நாட்டின் இளைஞர் பாராளுமன்றத்தின் வரலாற்றின் முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment