Tuesday, December 31, 2013

வட மாகாண ஆளுநரின் புது வருட வாழ்த்துச்செய்தி!

Tuesday, December 31, 2013
இலங்கை::வட மாகாண மக்களுக்கு எனது உளங்கனிந்த புது வருட வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.மலரும் புத்தாண்டு உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் சாந்தி, சமாதானம், சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டுமென வாழ்த்துகிறேன்.”
தற்போது நிலவும் வருடமானது முடிவுக்கு வரும் இவ்வேளையில் புது வருடம் 2013க்குரிய வாழத்துரைகளையும் நல்லாசிகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப் புத்தாண்டில் சிறப்பு வாய்ந்த அனைத்தும் கிடைக்க வேண்டுமெனவும், இவற்றுடன் தங்களுக்கு மன நிறைவும், சந்தோசமும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டுமெனவும் வாழ்த்துகின்றேன்.

மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட சமாதான சூழ்நிலையையும் மகிந்த சிந்தனையான வடக்கின் வசந்தம் / உத்துறு வசந்தய ஆகிய செயல்திட்டங்களின் அடிப்படையில் வட மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களின் பலா பலன்களையும் இம் மாகாணத்தில் வாழும் மக்கள் அனுப்பவிக்க்க் கூடியதாக இருக்கின்றது என்பதை, வட மாகாண ஆளுநர் என்ற வகையில் நான் நினைவு கூருவதில் பெருமிதம் அடைகின்றேன். மேற்குறிப்பிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் பொருளாதர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ச அவர்களின் வழிகாட்டல்களின் கீழ் ஜனாதிபதி அவர்களின் துரித செயலணியினால் முறையாக அமுலாக்கப்பட்டன.

கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன.இடம்பெயர்ந்தோர் மீள்க்குடியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் பலர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர். சேதமுற்ற வீடுகள் புனரமைக்கப்பட்டுள்ளன. புதிய வீடுகள் பல நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இத்தருணத்தில் எமது நடவடிக்கைகளை முன்னோக்கி நகர்த்துவது காலத்தின் தேவை.

மிகவும் சந்தோஷமானதும் அதிஷ்டம் நிறைந்த்துமான இப்புத்தாண்டு மலரட்டும் என்று வாழ்த்துகின்றேன்.

ஜி.ஏ. சந்திரசிறி

ஆளுநர்

வட மாகாணம்.

No comments:

Post a Comment