Tuesday, December 31, 2013
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் எதனைச் செய்தாலும்
அல்லது எந்த வேலைத்திட்டத்தை முன்மொழிந்தாலும் அதனை எதிர்ப்பது
என்ற நிகழ்ச்சிநிரலின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
செயற்பட்டுவருகின்றது.
எனவே இந்த விடயத்துக்கு அப்பால் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து பேசுவ தில் அர்த்தம் இல்லை என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
எனவே இந்த விடயத்துக்கு அப்பால் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து பேசுவ தில் அர்த்தம் இல்லை என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்னும் நாட்டை பிளவுபடுத்தும்
நோகத்திலேயே உள்ளனர்.அதற்கு தடையாக இருக்கின்ற ஜனாதிபதி மஹிந்த
ராஜபக் ஷவுக்கு எதிராக புலி ஆதரவு புலம் பெயர் மக்களுடன் இணைந்து
செயற்படுவதே கூட்டமைப்பின் நோக்கமாகவுள்ளது என்றும் அமைச்சர்
குறி ப்பிட்டார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்:-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை எதிர்க்கவேண்டும் என்ற
நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
எனவே அரசாங்கம் எவ்வாறான வேலைத்திட்டங்களையும் யோசனைகளையும்
முன்வைத்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அவற்றை
நிராகரித்துவிடும் நிலையிலேயே உள்ளது.
அதாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தை
அசௌகரியப்படுத்தவேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலில் கூட்டமைப்பு
செயற்பட்டுவருகின்றது. அவ்வாறு ஒரு நோக்கத்திலும் திட்டமிட்ட
நிகழ்ச்சி நிரலுக்கு அமையவும் செயற்பட்டுவரும் கூட்டமைப்பு
தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
அரசாங்கம் எதனை செய்தாலும் அதனை எதிர்ப்பது என்ற நோக்கத்துடன்
செயற்படும் அரசியல் கட்சியுடன் எவ்வாறு செயற்படுவது? தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பானது தொடர்ந்தும் நாட்டை பிரிக்கவேண்டும் என்ற
இலக்கிலேயே செயற்படுகின்றது.
அந்த நோக்கத்துக்கு தடையாக இருக்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்
ஷவுக்கு எதிராக சர்வதேசத்தில் இயங்கும் புலி ஆதரவு புலம் பெயர்
மக்களுடன் இணைந்து கூட்டமைப்பு நகர்வுகளை
முன்னெடுத்துவருகின்றது. எனவே அந்த நிகழ்ச்சி் நிரலுக்கு அமையவே
அவர்களின் செயற்பாடு அமைந்திருக்கும்.
குறிப்பாக தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நோக்கில்
நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர
முடியாது என்று கூட்டமைப்பு கூறிவருகின்றது. எனினும் பாராளுமன்றத்
தெரிவுக்குழுவில் இணைந்து அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டுக்கு
ஆதரவு வழங்குமாறு அரசாங்கம் தொடர்ச்சியாக கோரி வருகின்றது. ஆனால்
கூட்டமைப்பை பொறுத்தவரை பாராளுமன்றத் தெரிவுக்குழு அல்ல எவ்வகையான
யோசனையை முன்வைத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளாது.
காரணம் அரசாங்கம் எதனை செய்தாலும் அதனை எதிர்ப்பது என்ற
நிலைப்பாட்டிலேயே கூட்டமைப்பு இருந்துவருகின்றது. எனவே இந்தக்
கட்டத்துக்கு அப்பால் அவர்கள் குறித்துப் பேசிக்கொண்டிருப்பதில்
அர்த்தம் இல்லை என்றார்.
No comments:
Post a Comment