Tuesday, December 31, 2013வாஷிங்டன்::இந்திய தூதரக பெண் அதிகாரி தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற முடியாது. இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது.
விசா முறைகேடு மற்றும் பணிப்பெண்ணுக்கான சம்பள விவகாரத்தில் இந்திய பெண் தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடேவை நியூயார்க் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது இடத்தில் கை விலங்கிட்டு கைது செய்தனர். மேலும் அவரை அவமானப்படுத்தியதாக செய்திகள் வெளியாயின.
தேவயானி கைது சம்பவத்துக்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், தேவயானியை கைது செய்ய முடியாத வகையில், ஐநாவுக்கான சிறப்பு தூதராக நியமித்து
உத்தரவிட்டது.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கான பாதுகாப்புகளை மத்திய அரசு குறைத்தது. அத்துடன் அமெரிக்க தூதரக அதிகாரிகளின் சலுகைகளும் பறிக்கப்பட்டன. ஐநா சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள தேவயானிக்கு, விசாரணை விலக்கு அந்தஸ்து உள்ளது என்றும், அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் அமெரிக்காவை வலியுறுத்தினர்.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், தேவயானிக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவர் ஜனவரி 13ம் தேதிக்குள் வழக்கில் ஆஜராக வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தூதராக இருந்தாலும் வழக்கில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க முடியாது. தேவயானியை மன்னிக்க வேண்டும் என்ற இந்திய தரப்பின்
கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் சிக்கல் நீடிக்கிறது. -
No comments:
Post a Comment