Tuesday, December 31, 2013
இலங்கை::ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வின்போது வரக்கூடிய இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கையின் நட்பு நாடுகளில் ஒன்றான கியூபா உதவுவதாக உறுதியளித்துள்ளது.
எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக, கொள்கை அடிப்படையிலான குறிப்பான தீர்மானங்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்பதனால், கியூபா அதை எதிர்க்கின்றது என கியூபா தூதுவர் இந்திரா லோப்பஸ் கூறினார்.
இப்படி ஒரு நாட்டைத் தனியாக தேர்ந்தெடுத்து தீர்மானம் கொண்டுவருவது ஒத்துழைப்பாகாது. இது அந்த நாட்டின் இறைமையை மீறுவதாகும். இது ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தேவையின்றி தலையிடுவதாகும். இது ஒரு நாட்டின் மீது தேவையில்லாத அழுத்தத்தை பிரயோகிப்பதாகும். இது சர்வதேச சட்டத்தின் உண்மைப் பொருளாகாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்க முடியாத நிலையில் கியூபா உள்ளதென்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment