Tuesday, December 31, 2013

2014ம் வருடத்திற்கான வடகடல் செயற்பாடுகளின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

Tuesday, December 31, 2013
இலங்கை::வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் 2014ம் வருடத்திற்கான செயற்பாடுகளின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடலொன்று நேற்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், வடகடல் நிறுவனத்தை இலாபகரமான முறையில் முன்னெடுப்பது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
 
கடற்தொழிலாளர்கள் மத்தியில் வடகடல் நிறுவனத்தின் வலைகள் தொடர்பில், விழிப்புணர்வுகளை விரிவாக்குவது, கடற்தொழில் சார்ந்த முக்கிய இடங்களில் நிறுவனத்தின் விற்பனைக் கூடங்களை ஆரம்பிப்பது, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு உற்பத்திகளை வழங்குவதை மேலும் பரவலாக்குவது போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.
 
தரம் குறைந்த மீன்பிடி வலைகள் மலிவாகக் கிடைக்கக்கூடிய விற்பனைச் சந்தையில் வடகடல் நிறுவன வலைகளை தரம் கூடியதாக உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில், பிரதி அமைச்சர் வீரகுமார திசாநாயக்க, பதில் செயலாளர் திருமதி. மங்கலிக்கா அதிகாரி, அமைச்சர் அவர்களது ஆலோசகர் திருமதி. ஜெகராஜசிங்கம், வடகடல் நிறுவனத் தலைவர், பொது முகாமையாளர் உட்பட ஏனைய அதிகாரிகள், அமைச்சு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment