Sunday, August 31, 2014

Sunday, August 31, 2014
கியோட்டோ::ஜப்பானில் உள்ள பழமைவாய்ந்த புத்தர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சிறப்பு தரிசனம் நடத்தினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்கள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். நேற்று அவர் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் அங்குள்ள புகழ் பெற்ற கியோட்டோ நகருக்கு சென்றார். அப்போது அவர் கியோட்டோ நகர மேயருடன் இணைந்து வாரணாசி நகரை ஸ்மார்ட்டி சிட்டியாக மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் கியோட்டோ நகரத்தின் பங்களிப்புடன் வாரணாசியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவது குறித்து இரு தரப்பினரும் ஒப்பந்தங்கள் மேற்கொண்டனர். அப்போது மோடியுடன் இந்திய தூதர் தீபா கோபாலன், கியோட்டோ நகர மேயர் தைசாகு சுடோசுவா ஆகியோரும் உடன் இருந்தனர்.
 
பின்னர் பிரதமர் மோடி இன்று காலை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கியோட்டோ நகரில் அமைந்துள்ள பழம் பெருமை வாய்ந்த தோஜி புத்த கோயிலுக்கு சென்றார். எட்டாம் நூற்றாண்டில் புத்த மதத்தின் பகோடா முறையில் கட்டப்பட்ட அந்த கோயிலில் சுமார் அரை மணிநேரத்திற்கும் அதிகமாக சுற்றி பார்த்து மகிழ்ந்தார். கோயிலுக்கு வந்த மோடியை தலைமை மதகுரு மோரி வரவேற்று கோயிலின் சிறப்புகளை விளக்கி கூறினார். ஜப்பானில் அமைந்துள்ள பகோடா வகை கோயில்களில் 57 மீட்டர் உயரத்துடன் அமைந்துள்ள மிகவும் உயரமான புத்த கோயில் இதுவாகும். இதுகுறித்து மதகுரு கூறுகையில், Ôஇரண்டு பிரதமர்களும் எங்களது கோயிலுக்கு வந்துள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறதுÕ என்றார்.கோயிலுக்கு மோடி வந்த போது ஏராளமான இந்தியர்கள் இந்திய தேசிய கொடியை அசைத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். தோஜி புத்த கோயில் யுனெஸ்கோவில் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
புத்த கோயிலில் தரிசனத்தை முடித்து விட்டு மோடி, கியோட்டோ பல்கலை கழகத்திற்கு சென்றார். அங்கு நோபல் பரிசு பெற்ற மருத்துவ விஞ்ஞானி யமனாகாவை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் கொடிய நோய்களை தடுப்பது குறித்தும், பரம்பரை பரம்பரையாக தொடரும் ரத்த செல் அனீமியாவை கட்டுப்படுத்தும் நோக்கிலான ஸ்டெம் செல் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஜப்பான் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனையடுத்து இந்தியா ஜப்பான் இடையிலான ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

40 நாட்களாக நடந்த ராமேஸ்வரம் மீனவர் போராட்டம் வாபஸ்!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

Sunday, August 31, 2014
மண்டபம்::கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த ராமேஸ்வரம் மீனவர்களின் தொடர் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு, நாளை முதல் கடலுக்கு செல்வதாக மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.மீன்பிடி தடைகாலத்திற்கு பிறகு தமிழக கடலோர பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 93 பேரையும், 64 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக்கோரி ஜூலை 24ம் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இலங்கை அரசு மீனவர்களை மட்டும் விடுதலை செய்து, விசைப்படகுகளை விடுவிக்கவில்லை. இதனால் மீனவர்கள் மற்றும் மீனவ குடும்பத்தினர் அதிருப்தியடைந்தனர்.

பிடிக்கப்பட்ட 64 விசைப்படகுகளையும் விடுவிக்கக்கோரி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகினர். கடந்த 29ம் தேதி டெல்லியில் இந்திய  இலங்கை அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டுக்கூட்டம் நடந்தது. இதில், இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் படகுகளை விடுவிக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மீனவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மீனவர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அனைத்து மீனவ சங்க கூட்டம் காமராஜர் மீனவ சங்கத்தலைவர் நம்புசேகர் தலைமையில் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று செப்டம்பர் முதல் தேதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்வது என முடிவு செய்யப்பட்டது. கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்கவேண்டும். இந்திய  இலங்கை பிரதிநிதிகள் கொழும்பில் சந்திக்கும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்கள் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்‘‘ என வேண்டுகோள் விடப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை பதவியில் இருந்து ஓய்வு!

Sunday, August 31, 2014
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று அந்த பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
 
இலங்கைக்கு எதிராக பல தகவல்கள் இருப்பதாகவும் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஐ.நா விசாரணை குழு தொடர்ந்தும் முன்னெடுக்கும் என நவநீதம்பிள்ளை இறுதியாக குறிப்பிட்டுள்ளார்.
 
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் நவநீதம்பிள்ளை, சர்வதேச அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதானியாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
 
அதேவேளை நவநீதம்பிள்ளை ஓய்வுபெறுவது குறித்து கவலை வெளியிட்டு இலங்கையை சேர்ந்த ஐந்து அரசசார்பற்ற நிறுவனங்கள் கடிதங்களை அனுப்பியுள்ளதாக திவயின கூறியுள்ளது.

இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கூட்டமைப்பை பயன்படுத்துகிறது அமெரிக்கா: திஸ்ஸ விதாரண!

Sunday, August 31, 2014
இலங்கை::இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்கா பயன்படுத்தி வருவதாக, அமைச்சர் திஸ்ஸ விதாரண குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
பதவி விலகிச் செல்லும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை விவகாரத்தில் மிக அதிகளவில் பக்கச்சார்பாக நடந்துகொண்டார். குறிப்பாக அமெரிக்காவினதும் புலம்பெயர் மக்களினதும் தேவையை நிறைவேற்றும் நோக்கில் அவர் செயற்பட்டுள்ளார்.
 
குறிப்பாக இலங்கை விவகாரம் குறித்து நவநீதம் பிள்ளை வெளியிட்ட அறிக்கையில் இருந்த விடயங்கள் தருஷ்மன் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களாகும். தருஷ்மன் அறிக்கையின் விடயங்களையே நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தமை அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
 
இலங்கை விவகாரம் குறித்த விசாரணை செலவுக்கான நிதி மனித உரிமைப் பேரவையின் வரவு செலவுத்திட்டத்தில் இருக்கவில்லை. ஆனால் அந்த நிதியை வழங்குவதாக மேற்கு நாடுகள் உறுதியளித்தன. இதிலிருந்து சில நாடுகளின் தேவைக்கு ஏற்ப இவ்வாறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை தெளிவாகின்றது.
 
மேலும் தனக்கு அடங்கிப்போகாத மற்றும் தனது பேச்சைக் கேட்காத நாடுகளின் அரசாங்கங்களை மாற்றியமைப்பதே அமெரிக்காவின் நோக்கமாகும். உலகின் சில நாடுகளில் அமெரிக்கா இவ்வாறு செயற்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கையிலும் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் நோக்கமாகவுள்ளது. இந்த தாற்பரியம் புரியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா ஊடாக தமது தேவைகளை நிறைவேற்ற முயற்சிக்கின்றது.
 
அதனால்தான் கூட்டமைப்பின் செயற்பாடுகளை நாங்கள் எதிர்க்கின்றோம்.
இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் தலையிட்டால் அது இங்குள்ள அனைத்து மக்களையும் பாதிக்கும் என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துகொள்ளவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்ள உள்நாட்டுத் தரப்புடனேயே பேச்சு நடத்தவேண்டும். அதற்காக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவானது
 
உரிய முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இதேவேளை கூட்டமைப்பினர் இந்தியாவுக்கு விஜயம் செய்து அந்நாட்டுத் தரப்பினரை சந்தித்தாலும் இந்தியா எந்தக் கட்டத்திலும் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்காது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்தியா கோரிக்கை விடுக்குமே தவிர அழுத்தங்களை முன்வைக்காது. தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வைக்காண்பதையே இந்தியா விரும்பும் என்றார்.

அரைத்த மாவையே இப்போதும் அரைத்துக் தமிழ் மக்களின் தலையில் நன்றாகவே மிளகாய் அரைத்துவருகின்ற தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புக் காரர்கள்!

Sunday, August 31, 2014
இலங்கை::சம்பந்தன் தலைமையிலான (புலி)கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவினர் முதல்முதலாக இந்தியாவின் பிரதமர் உள்ளடக்கிய குழுவினரை சந்தித்து திரும்பியிருக்கின்றனர். இந்தியாவில் பாரதிய ஜனதா தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து சம்பந்தன் இவ்வாறானதொரு சந்திப்பிற்கான வேண்டுகோளை விடுத்திருந்தார்.
 
இதற்கான ஒழுங்குகளை கொழும்பிலுள்ள இந்திய தூதுவர் மேற்கொண்டிருந்தார். ஆனால் இந்த சந்திப்பின் பின்னர் அதிசயங்கள் நடைபெறப்போவதாக சொல்லி வந்த தமிழ் ஆய்வாளர்கள், ஊடகக்காரர்கள் என்போரின் கதைதான் அதோகதியாகிவிட்டது. பெரும் ஆவலுடன் ஒரு திரைப்படத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர் ஒருவர் படத்தை பார்த்தபின் இவ்வளவுதானா என்று அலுத்துக் கொள்ளுவதற்கு ஒப்பானதுதான், இந்த ஆய்வாளர்கள், ஊடகக்காரர்களின் நிலைமையும்.
 
ஆனால் ஓரளவு உண்மைகளை பேச வேண்டுமென்பதில் நாட்டம் கொண்டிருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில அரசியல் பத்தி எழுத்தாளர்கள் கொஞ்சமாக பேசியுமிருக்கின்றனர். ஆனால் மற்றவர்களோ முன்னர் அரைத்த மாவையே இப்போதும் அரைத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது கூட்டமைப்புக் காரர்கள் சொன்னதை அப்படியே கிளிப்பிள்ளை போன்று எழுதி வருகின்றனர்.
 
கூட்டமைப்பு - மோடி சந்திப்பின் பின்னர் வெளியான எந்தவொரு ஆங்கில அறிக்கைகளையும் படித்திராத இவர்கள், தமிழ் மக்களின் தலையில் நன்றாகவே மிளகாய் அரைத்துவருகின்றனர். கூட்டமைப்புக் காரர்கள் வழமை போலவே - நாங்கள் எல்லாவற்றையும் தெளிவாக சொல்லியிருக்கிறோம். அவர்கள் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டனர். மோடி அவர்கள் மிகவும் உன்னிப்பாக விடயங்களை செவியுற்றார்.
 
அவர்களின் பதிலில் ஓர் உறுதி தெரிந்தது. கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்தப் புராணத்தை வைத்துத்தான் தமிழ் தேசி யவாதிகள் என்போர், தங்கள் அரசியல் குதிரையை ஓட்டிவருகின்றனர். தமிழ் ஊடகங்களின் வக்காலத்து இந்த தேசிய வாதிகள் என்போருக்கு பக்கபலமாக இருப்பதால்தான், அவர்களால் தொடர்ந்தும் நன்றாக மிளகாய் அரைக்க முடிகிறது.
 
உண்மையில் அங்கு என்ன நடந்தது? கூட்டமைப்பு காரர்களும் தமிழ் ஊடகக்காரர்களும் சொல்லுவது போன்று, மோடி அவர்கள் மூக்கில் விரல்வைக்குமளவிற்கு எதையாவது சொல்லி விட்டாரா? சம்பந்தன் தலைமையில் சென்ற கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவினர் புதுடில்லியில் இரு நாட்கள் தங்கியிருந்தனர். கூட்டமைப்பின் சார்பில், தமிழரசு கட்சியின் தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராஜகு, சுமந்திரன் மற்றும் பொன்.செல்வராசா ஆகியோருடன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர்.
 
கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் பிறிதொரு முக்கியமான கட்சியின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் மேற்படி கூட்டமைப்பின் குழுவில் இடம்பெறவில்லை. ஆனால் இந்திய தூதரக மட்டத்தில் இது தொடர்பில் அதிருப்தி நிலவியதாகவும் தகவலுண்டு. இந்திய பிரதமர் மோடியை முதன்முதலாக சந்திக்க செல்லும் போது அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்துச் சென்றால் நல்லதுதானே என்று, நடப்பாக வினவியதாகவும் தகவலுண்டு. ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடுவதாக சொல்லிக் கொள்ளும் கூட்டமைப்பால் ஆகக் குறைந்தது தங்க ளுக்குள்ளேயே ஒற்றுமையாக பயணிக்க முடியவில்லை என்பதுதான் வேடிக்கை யானது. இது பற்றி தமிழ் ஊடகக்காரர்கள் ஒரு போதுமே வாய் திறந்ததில்லை.
 
மேற்படி சந்திப்பின் போது, இந்திய பிரத மர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் , இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜத்குமார் டோவல் மற்றும் இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜகுதா சிங் ஆகியோரை சந்தித்து கூட்டமைப்பு அளவளவியிருந்தது. ஆனால் இந்த சந்திப்பின் போது புதுடில்லி தரப்பால் கூறப்பட்ட விடயங்கள் எவையும் புதியவை இல்லை.
 
1987 இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்திலிருந்து, இந்தியா எதனைக் தெரிவித்து வந்ததோ அதனையே தற்போதும் கூறியிருக்கிறது. அதாவது 13வது தீருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அல்லது அதனை ஒரு சட்டகமாகக் கொண்டு, தீர்வொன்றை காணுங்கள். அதற்கு நாங்கள் உங்களுக்கு உதவுவோம். இவ்வளவுதான் மோடியும் சுஸ்மாவும் சொன்ன விடயங்கள். ஆனால் அதற்கு மேல் ஒரு முக்கியமான விடயத் தையும் அவர்கள் கூட்டமைப்பிடம் வலியு றுத்தியிருக்கின்றனர்.
 
அதாவது அரசாங் கத்துடன் ஒர் உணர்வார்ந்த பங்களிப்புடனும் (ளிசைவை ழக சியசவநெசளாகூசி) பரஸ்பரம் ஒருவரிலொருவர் தாங்கிநிற்கக் கூடியதுமான (அரவரயட யஉஉழஅஅழனயவழைஙூ) ஒரு அணுகுமுறையின் மூலம், 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் ஒரு தீர்வை காண்பதற்கு முயற்சிக்க வேண்டும். ஆனால் கூட்டமைப்பின் புதுடில்லி விஜயத்திற்கு விளக்கவுரைகள் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் எந்தவொரு தமிழ் ஆய்வாளரும் இது பற்றி வாய்திறக்கவில்லை. இது பற்றி பேசினால் எங்கு தங்களின் குட்டு வெளிப்பட்டுவிடுமென்றே அனைவரும் மௌனம் காக்கின்றனர். ஆனால் இதே ஊடகக்காரர்களே ஊடக சுதந்திரம் பற்றியும், கருத்துச் சுதந்தரம் பற்றியும் வாய்கிழிய உபதேசம் செய்துவருகின்றனர்.
 
மோடியின் இந்திய கூட்டமைப்பிற்கு மிகவும் தெளிவான செய்தியை வழங்கி விட்டது. அதாவது ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நீங்கள் பேசுவதற்கான ஓர் உறவை ஏற்படுத்துவது கட்டாயமான ஒன்று. அவ்வாறில்லாது போனால் இந்தியாவால் எதனையும் செய்ய முடியாது போகும். அரசியல் தீர்வு ஒன்றை காண வேண்டுமானால் முதலில் அரசாங்கத்துடன் ஓர் இணக்கப்பாடு அவசியம். அவ்வாறில்லாது போனால் தீர்வுக்கான முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்தின் பக்கத்திலிருந்து எதிர்பார்க்க முடியாது. எனவே கூட்டமைப்பு ஒரு தீர்வு நோக்கிச் செல்ல வேண்டுமாயின் முதலில் உள்ளுக்குள் ஒரு சுமூகமான உறவை எற்படுத்த வேண்டும்.
 
ஆனால் இந்த நோக்கில் தமிழ் ஊடகங்கள் எதுவும் குறிப்பிடவில்லை மாறாக, இந்தியா ஏதோ அரசாங்கத்தை எச்சரிக்கை செய்திருக்கிறது என்னும் கோணத்திலேயே தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு இலங்கை வருவதற்கான சாத்தியப்பாடுகள் ஆராயப்படுகின்றன.
 
எனவே அத்தகையதொரு சூழலில் இலங்கை அரசாங்கத்துடன் முரண்பட்டு நிற்கும் கூட்டமைப்பிற்கு ஓர் ஆலோசனை வழங்கும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஆனால் இதனை அரைகுறையாக விளங்கிக்கொண்ட தமிழ் ஊடகங்களோ, அரைகுறையாகவே செய்திகளையும் ஆய்வுகளையும் வெளியிட்டு வருகின்றன. இந்தியாவின் ஆலோசனைப்படி கூட்டமைப்பு செயலாற்ற வேண்டுமாயின், முதலில் கூட்டமைப்பு அரசாங்கத்தை தண்டிக்கும் நோக்கில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.
 
இலங்கையின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் சர்வதேசத்திற்கு கருத்துச் சொல்வதை நிறுத்த வேண்டும். புலம்பெயர் புலித்தரப்புக்களுடன் கைகோர்த்து இலங்கை இராணுவத்திற்கு எதிராக பேசுவதை நிறுத்த வேண்டும். பிரச்சினைகள் எதுவாக இருப்பினும், அவற்றை உள்ளுக்குள்ளேயே பேசித் தீர்ப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும். சர்வதேச வல்லாதிக்க சக்திகள், தங்களின் தேவைகளுக்காக செய்யும் காரியங்களின் பின்னால் இழுபட்டுக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும்.
 
இவற்றை செய்யாது போனால், மோடி இந்தியா எதிர்பார்க்கும் உணர்வார்ந்த பங்களிப்புடனும் (ளிசைவை ழக சியசவநெசளாகூசி), பரஸ்பரம் ஒருவரிலொருவர் தாங்கிநிற்கக் கூடியதான (அரவரயட யஉஉழஅஅழனயவழைஙூ) ஒரு சூழலை, எக்காலத்திலும் கூட்டமைப்பால் ஏற்படுத்த இயலாது. முதலில் கூட்டமைப்பு தமிழ் மக்களை உண்மையாக நேசிக்க வேண்டும். அவ்வாறில்லாது மண்குதிரையில் வைகுண்டம் செல்லலாம் என்பதாக கதைகள் சொல்லிக் கொண்டிருந்தால், ஓர் இணக்கமான தீர்வை காண்பதற்கு முடியாது போகும். இந்த அரசாங்கம் மட்டுமல்ல எந்தவொரு அரசாங்கமும் தன்னை வீழ்த்த நினைப்பவர்களுடன் எவ்வாறு ஒரு இணக்கத்திற்கு செல்லும்?
 
கூட்டமைப்புக்காரர் அரசாங்கத்திற்கு எதிராக செயலாற்றிக் கொண்டிருக்கும் போது, இந்த நாட்டில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறிக்கொண்டிருக்கும் போது, எவ்வாறு அரசாங்கம் கூட்டமைப்புடன் பேச முடியும். எனவே இவற்றை கருத்தில் கொண்டுதான் மோடியின் இந்தியா இப்படியானதொரு ஆலோசனையை வழங்கியிருக்கிறது. ஆனால் இந்த விடயங்கள் தமிழ் மக்களை போய்ச் சேர்ந்துவிடால், தமிழ் ஊடகக்காரர்கள் தங்களின் வார்த்தைஜகுலங்களால் வேலி போட்டுவிட்டனர். எல்லாவற்றுக்கும் முன், இந்த தமிழ் ஊடகக்காரர்கள் என்பவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் மீது அக்கறைகொள்ள வேண்டும்.
உண்மையில் தமிழ் ஊடகக்காரர்கள்தான் பொய்களை சொல்லிவரும் தமிழ் அரசியல் வாதிகளின் காவல்காரர்களாக இருக்கின்றனர். இந்த காவல்காரர்கள் இருக்கும் வரை கூட்டமைப்பின் காட்டில் ஒரே மழைதான்.

புலிகள் தொடர்பாக இன்று முன்வைக் கப்படும் அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் குற்றச் சாட்டுக்களுக்கும் பதில் கூற வேண்டியவர்கள் தமிழ்க் கூட்ட மைப்பினரே: வீ.ஆனந்தசங்கரி!

Sunday, August 31, 2014
இலங்கை::2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஒரு தடவை வாசித்துப் பார்க்க வேண்டும்.
 
அதில் இக்கூட்ட மைப்பினர் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், தமிழ் மக்களை ஆளும் தகுதி அவர்களுக்கே உள்ளது எனவும், அவர்களது அங்கீகாரத்துடன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத் தியே தாம் தேர்தலில் போட்டியிடு வதாகவும் தெரிவித்துள்ளனர். அப்படியாயின் புலிகள் தொடர்பாக இன்று முன்வைக் கப்படும் அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் குற்றச் சாட்டுக்களுக்கும் பதில் கூற வேண்டியவர்கள் தமிழ்க் கூட்ட மைப்பினரே என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
 
புலிகள் இருந்தபோது ஒரு கதையும், இப்போது அவர்கள் இல்லையென்றதும் மற்றொரு கதையும் பேசக் கூடாது. புலிகள் செய்த பல குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள பல தலைவர்களுக்கும் நன்கு தெரியும். அதனால் இவர்கள் விசாரணைக் குட்படுத்தப்பட வேண்டியவர்கள். குறைந்தது புலிகளைப் பற்றிய வெளிவராத உண்மைகளையாவது இவர்களிடமிருந்து கேட்டறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட தரப்பினர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
 
2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப் பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் மிகவும் பாரதூரமான விடயம். இலங்கை அரசாங்கம் தடை செய்த ஒரு அமைப்பை அவர்கள் தமதும், தமிழ் மக்களதும் பிரதிநிதிகள் என வர்ணித்துள்ளனர். தேர்தல் விஞ்ஞாபனம் என்பது வெறும் துண்டுப் பிரசுரம் அல்ல. அது ஒரு கட்சியின் உத்தியோகபூர்வ ஆவணம். எனவே இதற்கு தமிழ்க் கூட்டமைப்பினர் பதில் கூறியே ஆக வேண்டும் எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
 
இன்று என்னை விமர்சிக்கும் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள பலர் அன்று புலிகளை கடுமையாக விமர்சித்தவர்களே. பதவி ஆசையால் குத்துக்கரணம் போட்டு இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பலரதும் இரட்டை வேடம் எனக்குத் தெரியும். விரைவில் அவற்றை முழுமையாக அம்பலப்படுத்து வேன் எனவும் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

முழுப் பூசணியை சோற்றில் மறைத்த தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு!

Sunday, August 31, 2014
இலங்கை::இந்தியாவிற்கு விஜயம் செய்து அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது சந்திப்பு தொடர்பாக இன்றுவரை ஊடகங்களுக்குத் தெரிவித்துவரும் கருத்துக்கள், பேட்டிகள் அனைத்துமே பொய்யானதும், கை கால் மூக்கு வைத்த கற்பனை கலந்ததுமானது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உண்மையாக மோடி தெரிவித்த கருத்துகள் ஊடகங்களில் மூடி மறைக்கப்பட் டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
சந்திப்புத் தொடர்பாக கூட்டமைப்பினரால் வெளியிடப்பட்ட கருத்துகள் அனைத்துமே அப்பட்டமான பொய். இந்தியா, இலங்கை தொடர்பாக எதனையுமே எதிர்மறையாகக் கூறவில்லை. எத்தகைய தீர்வு எட்டப்பட வேண்டுமானாலும் இலங்கை அரசாங்கத்துடன் பேசியே அது எட்டப்பட வேண்டும் என்பதே மோடியின் ஆணித்தரமான கருத்தாக இருந்தது.எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் இலங்கை அரசாங்கம் தொடர்பாக குறை கூறவே இல்லை. அதிலும் அழுத்தம் கொடுப்பேன், அவர்களுக்கு உத்தரவிடுவேன் என அவர் கூறவே இல்லை.
 
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் வழிவகைகளை மேற்கொள்ளுங்கள் என்றே நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்திருந்தார். அதனை மாற்றித் தமக்குச் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. இதற்குச் சில தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் ஊதுகுழல்களாக இருந்து வருகின்றன என்றும் அமைச்சர் சம்பிக்க கூறினார். தமிழ்க் கூட்டமைப்பு எங்கு சென்றாலும் இறுதியில், இலங்கை அரசாங்கத்து டனேயே பேச்சு நடத்தி தீர்வு காணவேண்டும். இதனை மோடி தெளிவாகவே கூறியுள்ளார் எனவும் அமைச்சர் கூறினார்.
 
சந்திப்பு தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பு தெரிவித்துவரும் ஊடகச் செய்திகள் குறித்து இந்தியத் தரப்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும், இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டை வேடம் இந்தியாவிற்கு நன்கு தெரிந்திருக்கும் எனவும் அமைச்சர் சம்பிக்க தெரிவித்தார். இந்தியப் பிரதமர் தெரிவித்தது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் கலந்துரையாடி பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தம்மை இணைத்துச் செயற்பட முன்வர வேண்டும். இல்லாவிட்டால், அரசாங்கம் தமிழ் மக்களுக்குச் செய்து வரும் சேவைகளை தடுக்காதிருக்க வேண்டும். அரசாங்கம் தமிழ் மக்கள் உட்பட முழு நாட்டு மக்களுமே ஏற்றுக் கொள்ளும் வகையில் தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்கும் எனவும் அமைச்சர் சம்பிக்க தெரிவித்தார்.

தோல்வியில் முடிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிப் பயணம்!

Sunday, August 31, 2014
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துரையாடியுள்ளது. இது அவர்களைப் பொறுத்தவரையில் வெற்றிப் பயணம் என்று அவர்களால் மட்டுமே கூறலாம். ஏனெனில் பிரதமர் மோடியை அவர்கள் நேரில் சந்தித்துவிட்டனர், தாராளமாகப் புகைப்படங்களும் எடுத்துவிட்டனர். அவர்கள் எதிர்பார்த்த படியே அவர்களுக்கு ஆதரவான பத்திரிகைகள் அனைத்திலும் அவை முன்பக்கங்களில் பிரசுரமாகியும் விட்டன.
 
எனவே இச்சந்திப்பு அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வெற்றிப் பயணமே. ஏனெனில் அடுத்த தேர்தலில் தமிழ் மக்களது மனங்களை ஏமாற்ற இதுவொன்றே தமிழ்க் கூட்டமைப்பிற்குப் போதுமானது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உண்மையில் இதுவொரு தோல்விப் பயணமே.
 
பிரதமர் மோடியைச் சந்தித்து அவர்கள் என்ன பேசினார்கள்? இவர்கள் தெரிவித்த விடயங்களுக்கு அவரால் அளிக்கப்பட்ட பதில் அல்லது உறுதிமொழி என்ன என்று உண்மையை அலசி ஆராய்ந்து பார்த்தால் அது இவர்களது பயணம் படுதோல்வியில் அமைந்துள்ளதைத் தெளிவாகக் காட்டு கிறது. ஆனால் இந்த உண்மையை தமிழ் மக்கள் என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை என்பதே எமது கவலையாகும்.
 
பிரதமராகிய பின்னர் மோடி அவர்களினல் ஆற்றப்பட்ட அவரது முதலாவது குடியரசுத்தின விழா உரை தொடர்பாக இந்திய ஊடகங்கள் பலவும் எதிர்மறையான விமர்சனங்களையே செய்துள்ளன. அவர் தேர்தல் காலத்தில் வழங்கிய உறுதி மொழிகளுக்கும் அவரது உரைக்கும் தொடர்பே காணப் படவில்லை என்றும் குறுகிய காலத்திலேயே சொன்னதை மறந்த தலைவர் என்றும் அவர் விமர்சிக்கப்பட்டுள்ளார். அத்தகைய பிரதமரை நம்பி தமிழ்க் கூட்டமைப்பினர் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தருமாறு கோரியுள்ளனர்.
 
உள்நாட்டு விவகாரத்தில் அவர் விமர்சிக்கப்பட்டாலும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தமிழ்க் கூட்டமைப்பினருக்கு அவர் தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்கதாகவே உள்ளது. அதாவது எத்தகைய தீர்வு எட்டப்பட வேண்டுமானாலும் அது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே சாத்தியமாகும் என்றும் அதுவே நீடித்து நிலைக்கும் நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தரும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதுவே உண்மையும்கூட.
பிரதமர் மோடி தெரிவித்த இந்த உண்மையான கருத்தை தமிழ்க் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அச்சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருமே ஊடகங்களிடம் மறைத்துள்ளனர்.
 
ஆனால் இந்திய வெளி விவகார அமைச்சின் பேச்சாளர் இதனைத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகங்கள் பலவும் இதனை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் எமது நாட்டு ஊடகங்கள் அதிலும் குறிப்பாகத் தமிழ் ஊடகங்கள் இவ்விடயத்தைத் தெரிந்திருந்தும் மூடிமறைத்துள்ளன.
 
பிரதமர் மோடி இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்ததாகவும், 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த உறுதிமொழி வழங்கியதாகவும் கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்திகளை வெளி யிட்டன. ஒரு பக்கச் சார்பான செய்திகளையே பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டன. உள்ளூர்த் தமிழ் பத்திரிகைகள் சில வெளியிட்ட செய்திகளை பிரதமர் மோடி மொழிபெயர்த்துப் பார்த்திருந்தால் வியப்படைந்திருப்பார். நான் இவர்களுடன் பேசாத விடயங்களை பிரசுரித்திருக்கிறார்களே என்று சீற்ற மடைந்திருப்பார்.
 
தமிழ்க் கூட்டமைப்பு பிரதமர் மோடியைச் சந்தித்ததை அக்கட்சியினால் வெளியிடப்படும் பத்திரிகைகள் மற்றும் அவர்களது கட்சி வானொலிகள், தொலைக்காட்சிகள் இவ்வாறு கற்பனை கலந்து அல்லது தமக்குச் சார்பாக வெளியிட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் நடுநிலையான தமிழ் ஊடகங்கள் இவ்வாறு ஒருபக்கச் சார்பாக அதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியின் கட்சி ஊடகம் போன்று செயற்படுவது மிகுந்த வேதனை தரும் விடயமாகும்.
 
இதே தமிழ் ஊடகங்கள் பல சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களை சிங்கள மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் சார்பாகவும், இனத்துவேசமாகவும் செய்திகளை வெளியிடுவதாக அவ்வப்போது குற்றம் சாட்டுகின்றன. ஆனால் இவை தாம் என்ன செய்கிறோம் என்பது பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதே கிடை யாது. தமது ஊடகப் பிரசாரத்திற்காக அல்லது ஊடக விற்பனைக்காக உண் மையை மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் மறைப்பது நியாயமாகாது என்பதே எமது வாதமாகும். அப்படியாயின் தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பது போல சிங்கள ஊடகங்கள் சிங்கள மக்களுக்காகச் செயற்படுவதை தவறு என்று கூற முடியாது.
 
தமிழ்க் கூட்டமைப்பின் மோடியுடனான சந்திப்பை தமிழ் மக்களிடையே மிகைப்படுத்திக் காட்ட முயல்வது அக்கட்சியின் மக்களுக்கான செயற்பா டுகளை ஒருபோதும் முன்னோக்கிச் செல்ல உதவாது. மாறாக மக்களின் வாக்குப் பலத்தை அககட்சி தக்கவைத்துக் கொள்ள மட்டுமே உதவும். இலங்கை அரசாங்கத்துடன் பேசியே தீர்வு எட்டப்பட வேண்டும், அதற்கான வழிவகைகள் பற்றி ஆராயுங்கள், நாங்களும் எமது பங்களிப்பை வழங்கு வோம் எனப் பிரதமர் மோடி தெரிவித்த கருத்தில் முக்கியமான பகுதியை விட்டுவிட்டு தமக்குச் சார்பான கருத்தை மட்டும் ஏன் தமிழ்க் கூட்டமைப்பு தெரிவிக்க வேண்டும்? அதனை முழுமையாக நம்பி தமிழ் ஊடகங்கள் ஏன் அப்படியே செய்தியாக்க வேண்டும் என்பதே எமது கேள்வி?
 
இலங்கை அரசுடன் பேசித் தீர்வு காண முயலுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்த உண்மையை தமிழ் ஊடகங்கள் வெளிப்படுத்தி தமிழ்க் கூட்ட மைப்பையும் அது தொடர்பாகச் சிந்திக்க வைத்து அதில் ஈடுபட வைத்திருக்க வேண்டும். கூட்டமைப்பினர் பொய்யைக் கூற அதனை அப்படியே கிளிப் பிள்ளைக் கதையாக இவர்களும் கேட்டு எழுதி வெளியிட அதை வாசித்த தமிழ் மக்கள் மோடி ஓடி வந்து தீர்வைப் பெற்றுத் தரப்போகிறார், நாட்டைப் பிரித்துத் தரப்போகிறார் என நம்பத் தொடங்கியுள்ளனர். இது எவ்வளவு பார தூரமானதும், விபரீதமானதுமான ஒரு செயற்பாடு என்பதை தமிழ் ஊடகங்கள் ஏன் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.
 
முன்னர் புலிகளின் காலத்தில் செய்த அதே தவறை, அதாவது புலிகள் தவறு செய்தாலும் அதைச் சாதனையாக செய்தி வெளியிட்டதை இனியும் தமிழ் ஊடகங்கள் தமிழ்க் கூட்டமைப்பினருக்குச் செய்தால் தமிழ் மக்கள் மீண்டுமொரு பேரழிவையே சந்திக்க நேரிடும். அதனால் இனி தமிழ் மக்க ளைக் காப்பாற்றும் பணியை தமிழ் ஊடகங்கள் தமது கைகளில் எடுக்க வேண்டும். தமிழ் ஊடகவியலாளர்கள்தான் இனிவரும் காலங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். அதற்கான நல்லதொரு சமிக்கையை தமிழ் ஊடகங்கள் காட்ட வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

Saturday, August 30, 2014

ஆஸ்திரேலியாவுக்கு அருகே நியூகினியாவில் எரிமலை வெடித்தது!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

Saturday, August 30, 2014
சிட்னி::ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே பப்புவா நியூகினியா தீவில் உள்ள எரிமலை வெடித்து சிதறியது. இதையடுத்து, அந்த மலைப்பகுதியை ஒட்டியுள்ள நகரில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.  நியூகினியாவில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே 160 கி.மீ. தொலைவில் பப்புவா நியூகினியா தீவு அமைந்துள்ளது. இங்கு 2,270 அடி உயரமுள்ள மவுண்ட் தாவூர்வுர் மற்றும் மவுன்ட் வல்கனோ என்ற 2 மலைகள் உள்ளன. இவற்றில் மவுன்ட் வல்கனோ கடந்த 1994ம் ஆண்டு எரிமலையாக வெடித்தது. இதில் ஏராளமான மக்கள் பலியாகினர். அத்துடன் பல்வேறு நகரங்கள் அழிந்தன. தற்போது அந்த மலையில் இருந்து அவ்வப்போது புகை மட்டுமே எழும்பி வருகிறது.

இந்நிலையில், அதன் அருகே இருக்கும் மவுன்ட் தாவூர்வுர் மலையில் நேற்று காலை எரிமலை வெடித்து சிதறியது. அம்மலையில் இருந்து கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கு நெருப்பு கற்களும் சாம்பல்களும் 60 ஆயிரம் அடி உயரத்துக்கு எழும்பின. மலைக்குள் வெடிக்கும் சத்தம் கேட்டு வருகிறது. மலைப் பகுதியை ஒட்டி இருக்கும் ராபவுல் நகரில் சாம்பல் புகை மண்டலமாக சூழ்ந்துள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்று ஆஸ்திரேலிய எரிமலை சாம்பல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மலையில் இருந்து எழும்பிய சாம்பல் புகை இன்று காலை தென்கிழக்கே ஆஸ்திரேலிய வான் எல்லை வரை பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து நியூகினியா வான் எல்லை வழியாக செல்லும் சிட்னி& டோக்கியோ, சிட்னி&ஷங்காய் செல்லும் 3 விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.பப்புவா நியூகினியாவில் இருந்து செல்லும் விமானங்கள் அனைத்தும் சில நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டன என்று குவான்டாஸ் ஏர்லைன்ஸ் விமான செய்தி தொடர்பாளர் கூறினார்.அப்பகுதியில் எரிமலை தொடர்ந்து வெடித்தபடி இருப்பதால், அங்கு மேகமண்டலமாக சாம்பல் புகை சூழ்ந்துள்ளது. இது ஆஸ்திரேலியாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய முடியாது: அரசாங்கம்!

Emblem of Sri Lanka.svg
Saturday, August 30, 2014
இலங்கை::இலங்கையின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசியல் சாசனத்தை மீறிச் செயற்படக் கூடிய அதிகாரம் எந்தத்தரப்பிற்கும் கிடையாது என சட்ட மா அதிபர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

240 பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதனை தடுக்குமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணைகளில் பங்கேற்ற போது சட்ட மா அதிபர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய பிரதி சொலிசுட்டர் ஜெனரல் ஜனக் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் இலங்கையின் ஒரு சில பாதுகாப்பு விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுள் அகதிகளுக்கான முகவர் நிறுவனமோ அல்லது வேறும் மேற்குலக நாடுகளின் அமைப்புக்களோ அரசியல் சாசனத்தின் வரையறைகளை மீறிச் செயற்பட முடியாது என்பதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மேன்முறையீட்டு நீதவான் உபாலி அபேரட்ன முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி தீர்ப்பை அறிவிக்க உள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

இலங்கை குடிவரவு குடியகழ்வு சட்டங்களின் அடிப்படையில் எந்தவொரு வெளிநாட்டுப் பிரஜையும் உரிய கடவுச் சீட்டு மற்றும் வீசா இன்றி நாட்டில் தங்கியிருக்க முடியாது என பிரதி சொலிசுட்டர் ஜெனரல் ஜனக் டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவினை நீக்குமாறு அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணகைள் பூர்த்தியாகும் வரையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படக் கூடாது என புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

கூட்டாக மீன் பிடிப்பது பற்றி ஆலோசனை : இந்தியா-இலங்கை முடிவு!

Saturday, August 30, 2014
இந்தியா-இலங்கை மீனவர்கள் கூட்டாக மீன் பிடிப்பது குறித்து ஆலோசனை நடத்த இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு, இந்தியா-இலங்கை அதிகாரிகள் மட்டத்திலான முதல் கட்ட நல்லெண்ண ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.

இந்திய தரப்புக்கு மீன்துறை இணைச் செயலாளர் ராஜசேகரும், இலங்கை தரப்புக்கு அந்த நாட்டு மீன்துறை தலைமை இயக்குனர் நிர்மல் ஹெட்டியராச்சியும் தலைமை தாங்கினர். கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டது. சுமார் 3 மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய இலங்கை அதிகாரிகள், தமிழக-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கூட்டு விசாரணைக் குழு உள்ளது போல, ஆந்திரா-ஒடிசா கடல் பகுதிகளில் நிலவும் பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க கூட்டு விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று கோரினர். இதற்கு இந்தியா தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

மேலும் இலங்கை அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள், நல்லெண்ண அடிப்படையில் சட்ட நடைமுறைகள் பாராமல் முன்னதாக விடுதலை செய்யப்படுகிறார்கள். தற்போது இருதரப்பிலும் பிடிபட்ட மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள்’ என்று தெரிவித்தனர். மேலும் இந்தியா-இலங்கை மீனவர்கள் கூட்டாக மீன் பிடிப்பது தொடர்பான அம்சங்களை ஆராய்வது என்று இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக 2-ம் கட்ட ஆலோசனை கூட்டத்தை, இலங்கை தலைநகர் கொழும்புவில் நடத்துவது என்றும் அதற்கான தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மீன்பிடித்தல் தொடர்பாக வியட்நாம் உள்பட சில நாடுகளுடன் இந்திய அரசு, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் இலங்கை அரசுடன் இந்த ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இலங்கையுடன் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், மீன்பிடி தொழிலில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மேம்படும் என்றும் மீனவர் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும் என்றும் தகவல்கள் வெளியானது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்ததாக Colombo ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது!

Saturday, August 30, 2014
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்ததாக   Colombo ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்திப்பதற்காக டெல்லிக்கு சென்றிருந்த, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இந்த சந்திப்புக்களின் பின்னர் சென்னைக்கு சென்றனர்.
 
முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கும் நோக்கிலேயே கூட்டமைப்பினர் சென்னைக்கு சென்றிருந்ததாகவும், வடக்கு பிரச்னைகள் குறித்து தமிழக அரசியல் தலைவர்களுடன் பேசும் நோக்கில் ரகசியமாக கூட்டமைப்பினர் சென்னைக்கு சென்றிருந்ததாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
கூட்டமைப்பினரை ஜெயலலிதா சந்திக்க மறுத்ததால், தமிழக பா.ஜனதா கட்சி உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்றும் Colombo ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எது என்னவோ இச் செய்தி கொழும்பு அரசியல் தலைமைகளுக்கு இனிப்பான செய்தி என்பதுதான் உண்மை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நடைமுறையில் இல்லாது போனால் நாடு பிளவுபடும்: பிரதமர் டி.எம்.ஜயரட்ண!

Saturday, August 30, 2014
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நடைமுறையில் இல்லாது போனால் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியாமல் போகும் என பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார்.
 
நேற்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ஜயரட்ண, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்போம் என்பவர்களுக்கு கட்டுக்கட்டாக டொலர்கள் கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.சிலர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை கூடாதென்கிறார்கள். ஜனாதிபதி முறையிலன்றி சமூகத்திலேயே தவறு இருக்கின்றது. சமூகத்தின் எதிர்கால நிலைமையைக் கட்டுப்படுத்த தவறுவோமானால் நாடு அழிவுப்பாதைக்கே செல்லும்.
 
ஜனாதிபதி முறை இல்லாது போனால் இவற்றைக் கட்டுப்ப டுத்தவும் முடியாமல் போகும். ஜனாதிபதி முறைமை பற்றி பேசுபவர்கள் தேர்தலில் வாக்குகளை எதிர்பார்த்தே அதனைப் பேசுகின்றனர். இவர்களது அடிவருடிகளாக இருக்கும் சக்திகள் அவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்த முயற்சிக்கின்றன. ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்று கூறுபவர்களுக்கு கட்டுக்கட்டாக டொலர்கள் கிடைக்கின்றன.
 
நிறைவேற்று ஜனாதிபதி முறையை தொடர்ந்தும் பலப்படுத்துவதன் மூலம் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமுடியும். நாடு பிளவுகளு க்கும் பிரச்சினைகளுக்கும் முகங் கொடுக்கும் தறுவாயில் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரம் மூலம் மாத்திரமே நாம் அதனை முறியடிக்க முடியும். அவ்வாறு இல்லையாயின் நாடு மிகவும் ஆபத்தான நிலையை சந்திக்க நேரும்.
 
இன்று சிலர் நிறைவேற்று ஜனாதிபதி முறை தேவையில்லையெனக் கூறுகின்றனர். இவ்வாறு கூறுபவர்கள் நாட்டின் பிரச்சினைகளின் தீர்வுக்குப் பதில் கூறவேண்டும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Friday, August 29, 2014

டானியல் றெக்சியன் கொலை வழக்கில் கைதாகியிருந்த வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு பிணை!

கமலேந்திரன் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது!
Friday, August 29, 2014
இலங்கை::நெடுந்தீவு பிரதேசபைத் தலைவர் டானியல் றெக்சியன் கொலை வழக்கில் கைதாகியிருந்த ஈபிடிபியின் முன்னாள் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவராக இருந்தவருமான கமல் என்றழைக்கப்படும்  கமலேந்திரனை பிணையில் செல்ல யாழ்.மேல்நீதிமன்று அனுமதித்துள்ளது.

பிணை கோரும் மனு யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி அ.பிறேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை கடும் நிபந்தனைகளின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் வாரந்தோறும் ஒப்பமிட வேண்டும் கடவுசீட்டை நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டுமென்ற நிபந்தனைகளின் கீழ் காசு பிணையில் கமலேந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார். அதே வேளை கைதாகி கமலேந்திரனுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த நெடுந்தீவு பிரதேசபைத் தலைவர் டானியல் றெக்சியனின் மனைவியும் நிபந்தனைகளின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழில் வரட்சியால் பதிக்கப்பட்ட பிரதேச வாசிகளுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நீர்த் தாங்கிகள் பகிர்ந்தளிப்பு!

 Friday, August 29, 2014
யாழ்ப்பாணத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்காக 72 பிளாஸ்டிக் நீர்த்தாங்கிகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இது தொடர்பான வைபவம் நேற்று முன்தினம் (26) தாழையடி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசலையில் நடைபெற்றது.
யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் கோரிக்கையின்பேரில் 'தெரண' நிறுவனம் 8 லட்சம் ரூபா பெறுமதியான இந்த நீர்த் தாங்கிகளை அன்பளிப்புச் செய்துள்ளது.
1000 லீட்டர் கொள்ளக்கூடிய 52 தாங்கிகளும் 500 லீட்டர் கொள்ளக்கூடிய 10 தாங்கிகளும் 250 லீட்டர் கொள்ளக்கூடிய 10 தாங்கிகளும் வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பகிர்ந்தளிக்கப்பட்டன.

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு!

 Friday, August 29, 2014
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஸல் தாஹிர் ராபிக் பட் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை நேற்று (ஆக.28) அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இரு தரப்பு விடயங்கள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதுடன், சந்திப்பை நினைவு கூரும் முகமாக நினைவுச் சின்னங்களையும் பரிமாரிக் கொண்டனர்.
இச் சந்திபின் போது இலங்கை விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்க, எயார் கொமடே ஹாமிட் ராசிட் ரன்தேவ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கும், பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி எயர் ஷீப் மார்ஸல் தாஹிர் ராபீக் பட்டிற்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இரு தரப்பு உறவுகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு கூட்டுறவு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்கவுடனும், பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

இலங்கை போன்ற நாடுகளில் தான் எதிர்கொண்ட விமர்சனங்கள் என்னை!

Friday, August 29, 2014
இலங்கை போன்ற நாடுகளில் தான் எதிர்கொண்ட விமர்சனங்கள் தன்னை பாதிக்கவில்லை என பதவிவிலகும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

CNNனிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்

இலங்கையில் புலிகள் என வர்ணிக்கப்பட்டது மற்றும் இஸ்ரேலின் குற்றச்சாட்டுகள் உங்களை பாதிக்கவில்லையா என்ற கேள்விக்கு 'இல்லை நான் தார்மீக அதிகாரத்துடன் தான் பேசுகிறேன் என்பது குறித்து நான் உயாந்தபட்ச நம்பிக்கை கொண்டிருந்தேன்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

'இவ்வாறான கருத்துக்கள் என்னை பாதிப்பதில்லை, நாங்கள் அவர்களுக்கு உதவுவதால் எங்களது அலுவலகத்தின் பணிகளை பாராட்டும் 190 வேறு நாடுகள் உள்ளன, முக்கியமான சம்பவங்களை விசாரணை செய்ய வேண்டியதன் அவசியம் அந்த நாடுகளுக்கு தெரியும் அதனால் எங்களது பணிகளை தொடர்கிறோம'; என அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை விடயங்களில் உலக நாடுகள் எதிர்பார்க்கும் தராதரத்திலிருந்து அமெரிக்க விலகிச்செல்கிறது என்ற சர்ச்சைக்குரிய கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்
   

வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் நோக்கில் இரண்டு புதிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன!

Friday, August 29, 2014
வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் நோக்கில் இரண்டு புதிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தினால் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் புகலிடம் கோரும் வெளிநாட்டுப் பிரஜைகளை தடுத்து வைக்கும் நோக்கிலேயே இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு மற்றும் பூசா ஆகிய  இடங்களில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வீசா சட்டங்களை மீறி நீண்ட காலம் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளை தடுத்து வைக்க மிரிஹானவில் ஓர் முகாம் காணப்படுகின்றது.

இந்த முகாமில் பெரும் எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகளவில் இவ்வாறு புகலிடம் கோரி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தில் பதிவு செய்துகொண்ட 1500 வெளிநாட்டுப் பிரஜைகள் தடுப்பு முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.

திருப்திப்படுத்துவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: உதய கம்மன்பில!

Friday, August 29, 2014
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திருப்திப்படுத்துவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சட்ட ஆலோசகரும், மேல்மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இன அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா திருப்திப்படுத்த வேண்டியதில்லை. 1987ம் ஆண்டு இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இந்தியா பின்பற்றுகின்றதா? ஒப்பந்தம் தொடர்பிலான இந்தியாவின் பொறுப்புக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா?
 
ஒப்பந்தத்தின் 2.16 என்ற சரத்து முழுமையாக மீறப்பட்டுள்ளது. இந்திய அமைதி காக்கும் படையினர் வடக்கு கிழக்கு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறியுள்ளனர். 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா கோரிக்கை விடுப்பதற்கு முன்னதாக, இலங்கையுடனான ஒப்பந்தத்தின் தமது பக்க கடப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதனை இந்தியா ஆராய வேண்டும்.13ம் திருத்தச் சட்டத்தை ஏதேனும் ஆயுத குழுவொன்று ஏற்றுக் கொள்ளாவிட்டால் நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியா உறுதியளித்திருந்தது. எனினும் இந்த உறுதிமொழிக்கு அமைய இந்தியா செயற்படவில்லை. இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய எந்தவொரு செயற்பாட்டுக்கும் இந்தியாவை பயன்படுத்திக் கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என இந்தியா அறிவித்திருந்தது.
இலங்கையில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்றனர், இதன் அடிப்படையிலான ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியொரு இன சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் தொடர்பு பேணுவதில் பயனில்லை. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியான ஓர் நிகழ்ச்சி நிரலை கொண்டு இயங்கி வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் குரல் என்பது இரகசியமானதல்ல. இவ்வாறான ஓர் நிலையில் 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அது தொடர்பில் இனவாத பிரதேச அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. மாறாக இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டுமென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நடுகள் பாதுகாப்பு பேரவையில் ஆசனமொன்றை பெற்றுக் கொள்வதற்கு இலங்கையின் ஆதரவை, ஸ்பெய்ன் நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!

Friday, August 29, 2014
ஐக்கிய நடுகள் பாதுகாப்பு பேரவையில் ஆசனமொன்றை பெற்றுக் கொள்வதற்கு இலங்கையின் ஆதரவை, ஸ்பெய்ன் நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆதரவு திரட்டும் நோக்கில் ஸ்பெய்ன் வெளிவிவகார அமைச்சர் ஜோஸ்; மனுவெல் கார்சியா மார்கலோ (துழளé ஆயரெநட புயசஉíய-ஆயசபயடடழ) இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

ஆசனமொன்றை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவினை திரட்டும் முயற்சியில் ஸ்பெய்ன் வெளிவிவகார அமைச்சர் ஜோஸ் மனுவெல் விஜயங்களை மேற்கொண்டு வருகின்றார்.

ஜோஸ் மனுவெல், இன்று இந்தோனேஷியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் ஸ்பெய்ன் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கும் ஜோஸ் மனுவெல் விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Thursday, August 28, 2014

தீவிரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் நீடிக்கிறது-அமெரிக்க கண்டனம்!

Man Made - American Flag  - Flag Wallpaper

Thursday, August 28, 2014
வாஷிங்டன்,::அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட கனின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி நேற்று கூறியதாவது:
 
பாகிஸ்தான் நாடு, இன்னமும் தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாகவே நீடிக்கிறது. அந்நாட்டு ராணுவம், சில தீவிரவாத குழுக்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும், ராணுவம் நீண்ட காலத்துக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் நடவடிக்கை எடுக்கவே தொடங்கியிருக்கிறது.
 
தீவிரவாதிகளால் அமெரிக்கா, ஆப்கனிஸ்தான் நாடுகளுக்கு மட்டுமின்றி பாகிஸ்தானுக்கே அச்சுறுத்தல் உள்ளது. தீவிரவாதிகளால் ஏற்படும் அச்சுறுத்தல் பொதுவான பிரச்னை. இதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும்.  தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கா செயல்படும். அதே சமயம், ஒவ்வொரு நடவடிக்கையையும் அமெரிக்கா கண்காணிக்க முடியாது. தற்போது பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட பல்வேறு வசதிகள் உள்ளன. அதை தொடர்ந்து பயன்படுத்துவோம்.
இவ்வாறு ஜான் கிர்பி கூறினார்.

தமிழக மீனவர் பிரச்னை இந்திய, இலங்கை கூட்டுக்குழு: டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

Thursday, August 28, 2014
சென்னை::இலங்கை கடற்படையால் அடிக்கடி தமிழக மீனவர்கள் தாக்கப்படும்  பிரச்னை தொடர்பாக டெல்லியில் நாளை உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சர்வதேச கடல் எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதில் தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் நீடித்து வருகிறது. எனவே, சர்வதேச கடல் எல்லை பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை காண இந்தியா-இலங்கை அதிகாரிகள் இடம்பெற்றுள்ள உயர்மட்ட கூட்டு குழு அமைக்கப்பட்டது  இக்குழுவில் இந்திய வெளியுறவு துறையை சேர்ந்த 2 உயர் அதிகாரிகளும், 2 வல்லுனர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு பேச்சுவார்த்தை நாளை டெல்லியில் நடக்க உள்ளது.

இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் விவாதிக்கப்பட வேண்டிய பொருள்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த திங்கட்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதன்படி, நாளை டெல்லியில் நாளை நடைபெறும் கூட்டுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து மீன்வளத்துறை செயலாளர் விஜயகுமார், மீன்வளத்துறை ஆணையர் பீலா ராஜேஷ் கலந்து கொள்கிறார்கள். இலங்கை அரசின் மீன்வளத்துறையில் இருந்து ஒரு அதிகாரியும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்குழுவின் பிரதிநிதி ஒருவரும் கலந்துகொள்ள உள்ளார்.இந்த கூட்டத்தில் தமிழக மீனவர் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைத்தால் வேலைநிறுத்த போராட்டத்தை விலக்கிக்கொள்வது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் நாளை மாலை மீனவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

முஸ்லிம் பயங்கரவாதம்உலகம் பூராகவும் தலைவிரித்தாடுகின்றது: பொதுபலசேனா!

Thursday, August 28, 2014
இலங்கை::உலகம் பூராகவும் இன்று முஸ்லிம் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றது. எனவே, ஐ.எஸ்.ஐ.எஸ்.போகோ ஹராம் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதம் தொடர்பில் இலங்கையிலுள்ள சூறா சபை உலமா சபைகளின் நிலைப்பாடு. இதனை ஆதரிக்கின்றீர்களா? எதிர்க்கின்றீர்களா? என்பதை பகிரங்கப்படுத்த வேண்டுமென சவால் விடுக்கும் பொதுபலசேனா.
அரபுலகின் பணத்துக்கும் எண்ணெய்க்கும் இலங்கையையும் சிங்கள பௌத்தத்தையும் காட்டிக்கொடுக்க முடியாதென்றும் அவ் அமைப்பு தெரிவித்தது.

கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-

சூறா சபை மற்றும் உலமா சபைகள் எல்லாம் அரபு நாடுகளிலேயே இயங்குகின்றது. அவ்வாறான அமைப்புக்கள் இலங்கைக்கு தேவையில்லை. எனவே, இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்த சபைகள் உண்மையிலேயே மனித உரிமைகளை ஜனநாயகத்தை மதிக்கும் சபைகள் என்றால் இதனை மீறும் இயக்கங்கள் தொடர்பாக தமது எதிர்ப்பை வெளியிட வேண்டும்.

இல்லா விட்டால் இந்த பயங்கரவாத இயக்கங்களை ஆதரிப்பதாகவே எண்ண வேண்டி வரும். அவ்வாறே கருத வேண்டி வரும். அதேபோன்று அரசாங்க சார்பற்ற நிறுவனம் ? மனித உரிமைகள் தொடர்பாக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்ளும் நிமல்கா பெர்னாண்டோ போன்றோர்.

போகோ ஹராம் இயக்கம் பெண்களை கடத்தி பாலியல் வர்த்தகத்திற்கு ஈடுபடுத்துவது கொலை செய்வது உட்பட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கள் தொடர்பாக தமது நிலைப்பாடுகளை வெளியிட வேண்டும்.

உலகில் இன்று முஸ்லிம் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றது. கிறிஸ்தவர்கள் மிலேச்சத்தனமாக கொலை செய்யப்படுகின்றார்கள். எனவே, அரபுலகின் பணத்திற்காகவும் எண்ணெய் வளத்திற்காகவும் இலங்கையையும் சிங்கள பௌத்தர்களையும் காட்டிக்கொடுக்க முடியாது.

அடிப்படைவாத சக்திகள் சர்வதேச ரீதியாக எமக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இங்குள்ள ஒரு சிலர் வெளிநாட்டு தூதரகங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு எமக்கெதிரான புத்தகங்களையும் தயார்படுத்தி வருகின்றனர்.

எம்மிடம் இனவாதம் இல்லை. ஆனால் சிங்களவர்களாகட்டும் தமிழர்களாகட்டும் முஸ்லிம்களாகட்டும் அடிப்படைவாதத்தை எதிர்க்கின்றோம்.

எமது இந்த அலுவலகத்தில் அண்மையில் முஸ்லிம் பிரமுகர்கள் சந்தித்து எம்மோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்போது அவர்களுக்கு தொழுகை நடத்த இங்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்தோம்.

தர்மம் என்பது சத்தியம் ஆகும். இதனையே நாம் வெளிப்படுத்துகின்றோம். ஒரு சிலருக்கு இது கசப்பாக இருக்கலாம்.

நிறைவேற்று அதிகாரம்

இதில் அபரிதமான அதிகாரங்கள் இருப்பதையும் அதனை குறைக்க வேண்டுமென்பதையும் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ஒழிப்பதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லையென்பதையும் இங்கு உணரப்பட வேண்டும். நாட்டில் 10 இலட்சத்திற்கு மேல் அரச ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் பலர் நிறைவேற்று அதிகாரத்தின் கடிதங்களையே மதிப்பதில்லை. நடைமுறைப்படுத்துவதில்லை.

அவ்வாறானதோர் நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ஒழித்தால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

இந்தியா

பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் எமக்கு சாதகமாக உள்ளது. இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் டிலந்த விதானகே தெரிவித்தார்.

இலங்கை மக்களினது தேவைகளுக்கேற்பவே இந்திய அரசு உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி வருகின்றது: இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே சிங்ஹா!

Thursday, August 28, 2014
இலங்கை::வடக்கு மாகாண சபை மத்திய அரசுடன் இணைந்து செயற்பட வேண்டுமென இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே சிங்ஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் அங்குரார்ப்பண நிகழ்வில் (27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றும் போது இவ்வாறான கைத்தொழிற்பேட்டையை ஆரம்பிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்திய இலங்கை நாடுகளுக்கிடையே கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் காணமுடிகின்றது.

இலங்கை மக்களினது தேவைகளுக்கேற்பவே இந்திய அரசு உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி வருகின்றது.

அந்தவகையில்தான் இலங்கை அரசினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கென சுற்றுமதில், நீர் விநியோகம், மின்சாரம், கழிவகற்றும் செயற்திட்டமென இந்திய அரசு முன்னெடுத்துள்ளது.

அதுமட்டுமன்றி இக் கைத்தொழிற்பேட்டைக்கு உள்ளூரிலிருந்து மட்டுமன்றி வெளிநாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் முதலீடுகளைச் செய்ய முன்வர வேண்டும்.

இங்குள்ள மக்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், மேம்படுத்தவும் இக்கைத்தொழிற்பேட்டை உதவும் என்று நான் நம்புகின்றேன்.

உள்ளூர் உற்பத்திகளை குறிப்பாக ஆடை, விவசாயம் உள்ளிட்ட துறைகள் மேம்படுத்தப்படும் அதேவேளை, இதனூடாக 2000 பேருக்கு நேரடியாகவும், 10,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை வழங்க முடியும்.

இந்திய அரசினது உதவியுடன் இலங்கையில் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப் பாதை புனரமைப்பு, யாழ்ப்பாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கலாசார மண்டபம், பொறியியல் மற்றும் விவசாய பீடங்களின் நிர்மாணம், வீட்டுத்திட்டம், உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அவற்றின் நிதியொதுக்கீடுகள் தொடர்பிலும் விளக்கினர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இலங்கைக்கு மென்மேலும் பல உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாகத் தெரிவித்த அவர், கைத்தொழில்துறை மேம்பாட்டுக்கும் முன்னேற்றத்துக்கும் தாம் உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே வடபகுதி மக்களது மேம்பாட்டுக்காக வடக்கு மாகாண சபை மத்திய அரசுடன் இணைந்து செயற்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே சிங்ஹா அவ்வாறு செயற்படும் போதுதான் இந்திய தொடர்ச்சியான பங்களிப்புக்களை வழங்க தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்களை ஜீ.எல். பீரிஸ் சந்தித்து கலந்துரையாடல்!

Thursday, August 28, 2014
இலங்கை::ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்களை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சந்தித்து பிராந்தியத்தில் அவர்கள் முன்னெடுத்து வந்த வேலைத்திட்டங்கள் குறித்து மீளாய்வுக் கலந்துரையாடலொன்றை மேற்கொண் டிருந்தனர்.
 
இந்தச் சந்திப்பு இத்தாலியின் ரோம் நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையில் நெருங்கிய பொருளாதார தொடர்புகள் உள்ளமையி னால் இந்நாடுகளுடனான வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பில் இச்சந்திப்பின் போது கூடுதல் முக்கியத்துவமளிக்கப்பட்டது.
 
ஒவ்வொரு தூதுவர்களும் கடந்த வருடம் ஆற்றிய செயற்பாடுகள் மற்றும் அதனால் அடைந்த வளர்ச்சி ஆகியன குறித்து விளக்கமளித்த அதேவேளை இன்னும் சில மாதங்களில் குறித்த நேர வரையறைக்குள் அடையவுள்ள சாதனைகள் குறித்தும் சுட்டிக்காட்டினர். மேலும் இந்த நாடுகளில் இலங்கைக் கெதிராக மனித உரிமைகள் உள்ளிட்ட பல விவகாரங்களை அரசியல் சாதனங் களாக பயன்படுத்தி முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருக்கும் பிரசாரங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
 
இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்ப்பதற்கு அந்தந்த நாடுகளில் வாழும் இலங்கையர்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியமெனவும் அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தினார். அமைச்சர் பீரிஸ் இத்தாலியிலுள்ள இலங்கை சமூகத்தினருடனும் கலந்துரை யாடினார்.
பிரான்ஸ் தூதுவர் கருணாரத்ன ஹங்கவத்த, ஜெர்மனி தூதுவர் கருணாதி லக்க அமுனுகம, ஜெனிவாவிலுள்ள ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி ரவிநாத பி ஆரியசின்ஹ, இத்தாலி தூதுவர் நாவலகே பேனட் குரே, பிரெவ்பெர்ட் டிற்கான இலங்கையின் கன்சியுலர் பிரதீப் ஜயவர்தன ஆகியோருடனேயே அமைச்சர் பீரிஸ் கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.

பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் தாஹிர் ராபிக் பட் இலங்கை வருகை!

Thursday, August 28, 2014
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் தாஹிர் ராபிக் பட் இலங்கை வந்தடைந்தார்.
 
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நெற்றிரவு வந்தடைந்த பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி தலைமையிலான குழுவினரை இலங்கை விமானப் படையின் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்க தனது பாரியார் சகிதம் வரவேற்றார்.
 
மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
 
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு விமானப் படைகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்குடனே இந்த விஜயம் அமைந்துள்ளதாக விமானப் படையின் பதில் ஊடகப் பேச்சாளர் வின்ங் கொமான்டர் பி. என். டி. கொஸ்தா தெரிவித்தார்.
 
இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் தளபதி இலங்கை விமானப் படையின் தளங்கள் பலவற்றிற்கும் விஜயம் செய்து பார்வையிடவுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இலங்கை விமானப் படைத் தளபதிக்கும் பாகிஸ்தான் விமானப் படைத் தளபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (28) காலை கொழும்பிலுள்ள விமானப் படைத் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக் கது.