Friday, August 29, 2014
இலங்கை::நெடுந்தீவு பிரதேசபைத் தலைவர் டானியல்
றெக்சியன் கொலை வழக்கில் கைதாகியிருந்த ஈபிடிபியின் முன்னாள்
யாழ்.மாவட்ட அமைப்பாளரும், வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவராக இருந்தவருமான
கமல் என்றழைக்கப்படும் கமலேந்திரனை பிணையில் செல்ல யாழ்.மேல்நீதிமன்று
அனுமதித்துள்ளது.
பிணை கோரும் மனு யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி அ.பிறேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை கடும் நிபந்தனைகளின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் வாரந்தோறும் ஒப்பமிட வேண்டும் கடவுசீட்டை நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டுமென்ற நிபந்தனைகளின் கீழ் காசு பிணையில் கமலேந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார். அதே வேளை கைதாகி கமலேந்திரனுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த நெடுந்தீவு பிரதேசபைத் தலைவர் டானியல் றெக்சியனின் மனைவியும் நிபந்தனைகளின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment