Friday, August 29, 2014
யாழ்ப்பாணத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
குடிதண்ணீர் வழங்குவதற்காக 72 பிளாஸ்டிக் நீர்த்தாங்கிகள் யாழ் பாதுகாப்பு
படைத் தலைமையகத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இது தொடர்பான வைபவம் நேற்று முன்தினம் (26) தாழையடி ரோமன்
கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசலையில் நடைபெற்றது.
யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவின்
கோரிக்கையின்பேரில் 'தெரண' நிறுவனம் 8 லட்சம் ரூபா பெறுமதியான இந்த நீர்த்
தாங்கிகளை அன்பளிப்புச் செய்துள்ளது.
1000 லீட்டர் கொள்ளக்கூடிய 52 தாங்கிகளும் 500 லீட்டர்
கொள்ளக்கூடிய 10 தாங்கிகளும் 250 லீட்டர் கொள்ளக்கூடிய 10 தாங்கிகளும்
வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு
பகிர்ந்தளிக்கப்பட்டன.
No comments:
Post a Comment