Sunday, August 31, 2014
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று அந்த பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
இலங்கைக்கு எதிராக பல தகவல்கள் இருப்பதாகவும் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஐ.நா விசாரணை குழு தொடர்ந்தும் முன்னெடுக்கும் என நவநீதம்பிள்ளை இறுதியாக குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் நவநீதம்பிள்ளை, சர்வதேச அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதானியாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை நவநீதம்பிள்ளை ஓய்வுபெறுவது குறித்து கவலை வெளியிட்டு இலங்கையை சேர்ந்த ஐந்து அரசசார்பற்ற நிறுவனங்கள் கடிதங்களை அனுப்பியுள்ளதாக திவயின கூறியுள்ளது.
No comments:
Post a Comment