Saturday, August 30, 2014
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்ததாக Colombo ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்திப்பதற்காக டெல்லிக்கு சென்றிருந்த, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இந்த சந்திப்புக்களின் பின்னர் சென்னைக்கு சென்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கும் நோக்கிலேயே கூட்டமைப்பினர் சென்னைக்கு சென்றிருந்ததாகவும், வடக்கு பிரச்னைகள் குறித்து தமிழக அரசியல் தலைவர்களுடன் பேசும் நோக்கில் ரகசியமாக கூட்டமைப்பினர் சென்னைக்கு சென்றிருந்ததாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டமைப்பினரை ஜெயலலிதா சந்திக்க மறுத்ததால், தமிழக பா.ஜனதா கட்சி உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்றும் Colombo ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எது என்னவோ இச் செய்தி கொழும்பு அரசியல் தலைமைகளுக்கு இனிப்பான செய்தி என்பதுதான் உண்மை.
No comments:
Post a Comment