Thursday, August 28, 2014
வாஷிங்டன்,::அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட கனின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி நேற்று கூறியதாவது:
பாகிஸ்தான் நாடு, இன்னமும் தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாகவே நீடிக்கிறது. அந்நாட்டு ராணுவம், சில தீவிரவாத குழுக்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும், ராணுவம் நீண்ட காலத்துக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் நடவடிக்கை எடுக்கவே தொடங்கியிருக்கிறது.
தீவிரவாதிகளால் அமெரிக்கா, ஆப்கனிஸ்தான் நாடுகளுக்கு மட்டுமின்றி பாகிஸ்தானுக்கே அச்சுறுத்தல் உள்ளது. தீவிரவாதிகளால் ஏற்படும் அச்சுறுத்தல் பொதுவான பிரச்னை. இதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கா செயல்படும். அதே சமயம், ஒவ்வொரு நடவடிக்கையையும் அமெரிக்கா கண்காணிக்க முடியாது. தற்போது பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட பல்வேறு வசதிகள் உள்ளன. அதை தொடர்ந்து பயன்படுத்துவோம்.
இவ்வாறு ஜான் கிர்பி கூறினார்.
இவ்வாறு ஜான் கிர்பி கூறினார்.
No comments:
Post a Comment