Friday, February 28, 2014
ஜி.எல்.பீரிஸ் தலைமையில் இலங்கைக்குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம்!
Friday, February 28, 2014
இலங்கை::25வது ஜெனீவா மனித உரிமை பேரவையில் பங்கேற்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான உயர்மட்டக் குழு அடுத்தவாரம் முதற்பகுதியில் ஜெனீவா பயணமாகிறது. அதற்கு முன்னதாக ஜனாதிபதியுடன் ஆலோசனைகளை நடத்துவதற்கும் குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க 9ம் தேதி தான் அங்கு செல்ல இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள பிரேரணைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவை பெறுவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் முதல் ஜெனீவாவில் இடம்பெற இருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கூறியது.
இதேவேளை, ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வு மார்ச் 3ம் தேதி முதல் 28ம் தேதி வரை இடம்பெறுகிறது. இலங்கை தொடர்பான விவகாரம் 2ம் தேதி ஆராயப்படவிருப்பதாக மனித உரிமைப் பேரவை நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை குழுவின் தலைவரான அமைச்சர் ஜி. எல் பீரிஸ் எதிர்வரும் 5ம் தேதி மனித உரிமை பேரவையில் உரையாற்ற இருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
இலங்கை குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ள அங்கத்தவர்கள் குறித்து இன்னும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும், ஜனாதிபதியின் செயலாளர் வெளிநாட்டில் உள்ளதால் அவர் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து தற்போதைக்கு கூற முடியாது என்றும் அவர் கூறினார்.
ஜெனீவா மாநாடு குறித்து கருத்துத் தெரிவித்த குழு உறுப்பினரான அமைச்சர் மஹிந்த அமரசிங்க, இலங்கைக்கு அங்கத்துவ நாடுகளின் ஆதரவுகளைத் திரட்டுவதற்கான இறுதிச் சட்ட முன்னெடுப்புகள் இலங்கைக் குழுவினால் ஜெனீவா மாநாட்டின் போது பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படும் என்றார்.
கடந்த வருடத்தை விட இம்முறை இலங்கைக்கு கூடுதலான நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கைக்குழு ஒருமித்த முயற்சியை எடுக்கும் எனவும், இதேவேளை இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டும் முயற்சிகளும் பரந்தளவில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
The Last Phase film shows a different perspective on Sri Lankan war in UK Parliament!
Friday, February 28, 2014
The Last Phase film shows a different perspective on Sri Lankan war in UK Parliament
Apart from Mr Paisley, the other parliamentarians who attended the event were Baron West of Spithead (former First Sea Lord) and the following Members of Parliament, Brian Binley, Mark Durkan, Bob Blackman, James Wharton, Laurence Robertson, Andrew Turner, Nick De Bois as well as Foreign Office and Parliamentary researchers and assistants.
Richard Mundy gave an introduction to the documentary and explained the story of Jayawardani , a former LTTE combatant and her family. He mentioned the dedicated Sri Lankan production team who had worked on the project as a labour of love, including Jeevan Chandimal, Director, and Ruwan Kukulewithana, Producer. They had been inspired by the tragic story of Jayawardani, who had been indoctrinated by the LTTE and joined its terrorist army at a young age, but ultimately felt deceived by the Tigers, who claimed to be fighting for their freedom, but regularly threatened and killed their own supporters. It was only at the end of the war in 2009, that she and her family had to be grateful to the Sri Lanka Army for ultimately saving their lives. Her story was only one of the many thousands of individual humanitarian efforts performed by the armed services to allay the suffering of about 300,000 people who were held hostage by the LTTE, but who were eventually saved and liberated at the conclusion of the war.
Professor Moorcroft spoke of the events at the end of the war from a military perspective. He explained that in all his experience, having investigated wars in other countries, that the Sri Lankan Army conducted themselves very professionally in comparison to other armies. His observations and opinions were formed after visiting Sri Lanka and having had access to all the workings of the armed services as well as with surviving Tiger cadres. The total civilian casualties in the final days of the war, he observed, could not be ascertained with accuracy, but based on the figures of those injured, the estimate of 40,000 civilian deaths quoted by Gordon Weiss in his book and thereafter repeated by many others, including by the Darusman Report and Channel 4, is a gross exaggeration, which he confirmed should not be relied upon as being accurate.
Questioned by MPs, Prof. Moorcraft said that since the defeat of the LTTE, the island had not suffered from incidents of terrorist killings or bombings. This gives credence to the fact that terrorism has been totally eradicated on the island and that there is now genuine prospects for peace and true reconciliation which the Government should pursue. However, he acknowledged that the country faced several challenges, in particular with regards its relations to the large Tamil diaspora and the country's engagement with NGOs and the United Nations. Turning on to other questions from the floor, the panel responded in some detail with regards IDP resettlement, the transparency of the actions of the armed forces and the need to address allegations of disappearances and religious intolerance. Professor Moorcraft expressed the view that greater access to the press would be in the long term be beneficial to Sri Lanka in maintaining the progress of trust with the international community and ultimately lead to a better understanding of the positive changes that Sri Lanka has achieved.
Dr. Chris Nonis, High Commissioner addressed the issues pertaining to the Government of Sri Lanka. In a robust delivery he stated that there was never a Civil War in Sri Lanka and that it should be instead correct to understand it as a war against terrorism. He said that people from all communities and religions lived side by side in all parts of the country, and that for example, the demography of the capital Colombo was 30% Sinhalese, 30%Tamils, 30% Muslims. He maintained that many external politicians were making unwarranted pronouncements about Sri Lanka with understanding basic demographics and that it was long and complex war story, which needs to be understood by visiting and experiencing the country's committed efforts at post-war progress first-hand. He made a passionate plea for supporting the country's reconciliation processes via the LLRC and appealed to all expatriate communities to work towards this goal. His appeal to the international community was for greater understanding of Sri Lanka's achievements and stated that all communities are playing a substantial role in the economic and social progress of the country. His address was well received by all those present.
At the meeting's conclusion Lord Naseby encouraged the audience to watch the full documentary and share the DVD of 'The Last Phase', which was made freely available, and to read Professor Moorcraft's book 'Total Destruction Of Tamil Tigers' as they both provide a different narrative than is currently being shown in the British media. He also recommended all friends and supporters of Sri Lanka to read another book by Engage Sri Lanka entitled 'Corrupted Journalism', which deals with the claims alleged against Sri Lanka by Channel 4. He mentioned that the book was a thorough and powerful response which addresses and rebuts the vast majority of the allegations forthrightly.
Dr. Lionel Samarasinghe on behalf of the Conservative Friends of Sri Lanka gave a vote of thanks to Lord Naseby and the All Party Parliamentary Group for Sri Lanka for hosting the event in Parliament. Professor Moorcraft was thanked for giving up his time to attend this event and for his invaluable and learned contribution. Special gratitude was also extended to Richard Mundy, whose passionate comments on the behalf of all the documentary's film-makers was thoroughly welcomed by parliamentarians and audience alike. It was mentioned that it was great shame that the other members of the film's production team namely, Jeevan Chandimal and Ruwan Kukulewithana were unable attend this event as there had been delays in the processing of their British visas in Colombo. The Sri Lanka High Commissioner and his staff, British parliamentarians, the Foreign & Commonwealth Office and other audience members who attended this important gathering were also thanked for their participation and contribution.
The Last Phase film shows a different perspective on Sri Lankan war in UK Parliament
Lord Naseby, Chair of The All Party Parliamentary Group on Sri Lanka, supported by Conservative Friends of Sri Lanka, held a very successful screening of the documentary film, 'The Last Phase' in the Westminster Houses of Parliament on Monday, February 24th to a distinguished gathering of British Parliamentarians and opinion makers. Special guests included His Excellency, the High Commissioner for Sri Lanka, Dr. Chris Nonis, his Deputy, Mr. Neville de Silva and other senior officials from the High Commission. Public places for the event had been in great demand and representatives from all Sri Lankan communities and ethnicities attended the gathering in the packed Commonwealth Parliamentary Association room within Parliament. It was the first time that an independent Sri Lanka produced documentary about the War had been shown in the cradle of Britain's democracy and seen by parliamentarians from all sides of the Houses of Commons and Lords. Mr Ian Paisley MP, who attended the meeting commented that it was refreshing to see an alternative perspective about the Sri Lankan war, and this event clearly demonstrated that the international community did not have a monopoly on the truth in relation to Sri Lanka. He thanked the film-makers and event organisers for successfully challenging that the erroneous presumption that there is only one perception from which to judge the Sri Lankan war and hoped that the film would be seen by as wide a global audience as possible.
Apart from Mr Paisley, the other parliamentarians who attended the event were Baron West of Spithead (former First Sea Lord) and the following Members of Parliament, Brian Binley, Mark Durkan, Bob Blackman, James Wharton, Laurence Robertson, Andrew Turner, Nick De Bois as well as Foreign Office and Parliamentary researchers and assistants.
Lord Naseby introduced a distinguished panel, comprising Professor Paul Moorcraft and Mr. Richard Mundy, who was the narrator on "The Last Phase" to discuss the war and current developments in Sri Lanka. Professor Moorcraft is director of London's Centre for Foreign Policy Analysis and was a senior instructor at the Royal Military Academy, Sandhurst and the UK Joint Services Command and Staff College. He is a Visiting Professor at Cardiff University's School of Journalism, Media and Cultural Studies and is a distinguished military historian with experience in various theatres of conflict in Africa, Middle East and the Balkans. He has authored many books and in 2012 was given access to the leading figures in the Sri Lankan
conflict which he researched extensively, resulting in the publication of 'Total Destruction of the Tamil Tigers', which was re-launched in Colombo last week. Richard Mundy is a Briton who currently lives in Sri Lanka and travelled especially to London for this event. Richard, who has undertaken work in a Tsunami Housing Project, has lived on the island for more than a decade with his wife, who works for a leading Sri Lankan garment manufacturing company. Having lived on the island for over 12 years he feels passionately for Sri Lanka and for the sincere efforts that all communities are collaboratively contributing towards moving forward after a long period of terrorism and divisiveness into a new period of unity and prosperity. He was attracted by the efforts of a group of independent and enthusiastic film makers who dedicated their time and resources to produce this documentary. He freely volunteered his services as a narrator to the project as he felt aggrieved that there was deliberate misinformation outside the island both about the war and the ground realities in contemporary Sri Lanka, which needed to be challenged.
conflict which he researched extensively, resulting in the publication of 'Total Destruction of the Tamil Tigers', which was re-launched in Colombo last week. Richard Mundy is a Briton who currently lives in Sri Lanka and travelled especially to London for this event. Richard, who has undertaken work in a Tsunami Housing Project, has lived on the island for more than a decade with his wife, who works for a leading Sri Lankan garment manufacturing company. Having lived on the island for over 12 years he feels passionately for Sri Lanka and for the sincere efforts that all communities are collaboratively contributing towards moving forward after a long period of terrorism and divisiveness into a new period of unity and prosperity. He was attracted by the efforts of a group of independent and enthusiastic film makers who dedicated their time and resources to produce this documentary. He freely volunteered his services as a narrator to the project as he felt aggrieved that there was deliberate misinformation outside the island both about the war and the ground realities in contemporary Sri Lanka, which needed to be challenged.
Richard Mundy gave an introduction to the documentary and explained the story of Jayawardani , a former LTTE combatant and her family. He mentioned the dedicated Sri Lankan production team who had worked on the project as a labour of love, including Jeevan Chandimal, Director, and Ruwan Kukulewithana, Producer. They had been inspired by the tragic story of Jayawardani, who had been indoctrinated by the LTTE and joined its terrorist army at a young age, but ultimately felt deceived by the Tigers, who claimed to be fighting for their freedom, but regularly threatened and killed their own supporters. It was only at the end of the war in 2009, that she and her family had to be grateful to the Sri Lanka Army for ultimately saving their lives. Her story was only one of the many thousands of individual humanitarian efforts performed by the armed services to allay the suffering of about 300,000 people who were held hostage by the LTTE, but who were eventually saved and liberated at the conclusion of the war.
Professor Moorcroft spoke of the events at the end of the war from a military perspective. He explained that in all his experience, having investigated wars in other countries, that the Sri Lankan Army conducted themselves very professionally in comparison to other armies. His observations and opinions were formed after visiting Sri Lanka and having had access to all the workings of the armed services as well as with surviving Tiger cadres. The total civilian casualties in the final days of the war, he observed, could not be ascertained with accuracy, but based on the figures of those injured, the estimate of 40,000 civilian deaths quoted by Gordon Weiss in his book and thereafter repeated by many others, including by the Darusman Report and Channel 4, is a gross exaggeration, which he confirmed should not be relied upon as being accurate.
Questioned by MPs, Prof. Moorcraft said that since the defeat of the LTTE, the island had not suffered from incidents of terrorist killings or bombings. This gives credence to the fact that terrorism has been totally eradicated on the island and that there is now genuine prospects for peace and true reconciliation which the Government should pursue. However, he acknowledged that the country faced several challenges, in particular with regards its relations to the large Tamil diaspora and the country's engagement with NGOs and the United Nations. Turning on to other questions from the floor, the panel responded in some detail with regards IDP resettlement, the transparency of the actions of the armed forces and the need to address allegations of disappearances and religious intolerance. Professor Moorcraft expressed the view that greater access to the press would be in the long term be beneficial to Sri Lanka in maintaining the progress of trust with the international community and ultimately lead to a better understanding of the positive changes that Sri Lanka has achieved.
Dr. Chris Nonis, High Commissioner addressed the issues pertaining to the Government of Sri Lanka. In a robust delivery he stated that there was never a Civil War in Sri Lanka and that it should be instead correct to understand it as a war against terrorism. He said that people from all communities and religions lived side by side in all parts of the country, and that for example, the demography of the capital Colombo was 30% Sinhalese, 30%Tamils, 30% Muslims. He maintained that many external politicians were making unwarranted pronouncements about Sri Lanka with understanding basic demographics and that it was long and complex war story, which needs to be understood by visiting and experiencing the country's committed efforts at post-war progress first-hand. He made a passionate plea for supporting the country's reconciliation processes via the LLRC and appealed to all expatriate communities to work towards this goal. His appeal to the international community was for greater understanding of Sri Lanka's achievements and stated that all communities are playing a substantial role in the economic and social progress of the country. His address was well received by all those present.
At the meeting's conclusion Lord Naseby encouraged the audience to watch the full documentary and share the DVD of 'The Last Phase', which was made freely available, and to read Professor Moorcraft's book 'Total Destruction Of Tamil Tigers' as they both provide a different narrative than is currently being shown in the British media. He also recommended all friends and supporters of Sri Lanka to read another book by Engage Sri Lanka entitled 'Corrupted Journalism', which deals with the claims alleged against Sri Lanka by Channel 4. He mentioned that the book was a thorough and powerful response which addresses and rebuts the vast majority of the allegations forthrightly.
Dr. Lionel Samarasinghe on behalf of the Conservative Friends of Sri Lanka gave a vote of thanks to Lord Naseby and the All Party Parliamentary Group for Sri Lanka for hosting the event in Parliament. Professor Moorcraft was thanked for giving up his time to attend this event and for his invaluable and learned contribution. Special gratitude was also extended to Richard Mundy, whose passionate comments on the behalf of all the documentary's film-makers was thoroughly welcomed by parliamentarians and audience alike. It was mentioned that it was great shame that the other members of the film's production team namely, Jeevan Chandimal and Ruwan Kukulewithana were unable attend this event as there had been delays in the processing of their British visas in Colombo. The Sri Lanka High Commissioner and his staff, British parliamentarians, the Foreign & Commonwealth Office and other audience members who attended this important gathering were also thanked for their participation and contribution.
For more information:
Watch 'The Last Phase'
Jayawardani's Story - http://www.thesundayleader.lk/2013/05/19/from-sheer-hatred-to-
stark-reality/
Conservative Friends of Sri Lanka - http://www.conservativefriendsofsrilanka.org/home
Courtesy : APPGSL & CFSL
Related News >>
த லாஸ்ட் பேஸ்’ பிரித்தானிய பாராளு மன்றில் திரையிடப்பட்டது!
Friday, February 28, 2014
இலங்கை::த லாஸ்ட்பேஸ்’ ஆவணப்படம் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி பிரித்தானியாவில் வெற்றிகரமாக திரையிடப்பட்டது. பிரித்தானிய பாராளு மன்ற உறுப்பினர்கள், விமர்சகர்கள், இலங்கைகான உயர்ஸ்தானிகர் கிரிஸ் நொனிஸ் உட்பட திரு.நெவில்லே டி சில்வா மற்றும் உயர் ஸதானிகத்தின் ஏனைய அதிகாரிகள் என விசேட அதிதிகள் பலரும் பங்கேற்றிருந்தனர். இந்நிகழவ்னது சர்வ தேச சமுகம் இலங்கை யுத்தம் தொடர்பாக அறிந்திராத பல விடயங்களை தெளிவு படுத்தக்கூடியதாக அமைந்திருந்தன.
லோர்ட் நேஸ்பி அங்கு வருகை தந்திருந்த பிரபலங்கள் அடங்கிய குழுவினரிடையே பேராசிரியர் மோர்க்ராப்ட் மற்றும் ‘ த லாஸ்ட் பேஸ்’ தொகுப்பாளர் ரிசார்ட் முண்டி உட்பட பலரையும் இலங்கையின் தற்போதய நிலைமை குறித்து கலந்தாலோசிக்க அறிமுகப்படுத்தினார். பேராசிரியர் மோர்க்ராப்ட் வெளிநாட்டு கொள்கைப் பகுப்பாய்வுக்கான இங்கிலாந்து மையத்தின் பணிப்பாளராக கடமையாற்றுவதுடன் அவர் அரச இராணுவ கல்வி நிலையத்தின் சிரேஷ்ட போதனா ஆசிரியராக் கடமையாற்றிருந்தார் மேலும் பத்திரிகை துறை கற்கையில் பேராசிரியராக கடமையாற்றுகின்றார் அத்துடன் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் மோதல்களின் போது பல அனுபவங்களைப்பெற்றுள்ள வரலாற்று ஆசிரியராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அவர் பல புத்தகங்களை எழுதியதுடன் 2012 இல் இலங்கை யுத்தம் தொடர்பில் பரந்தளவில் ஆராய்ந்த முன்னனி நபராக இருப்பதுடன் ‘டோட்டல் டிஸ்ரக்ஸன் ஒப் தமிழ் டைகர்’ எனும் புத்தகத்தை கொழும்பில் வெளியிட்டு வைத்தார்.ரிசார்ட் முண்டி ஒரு பிரித்தானியர் அவர் தற்போது இலங்கையில் வசிக்கின்றார். விஷேடமாக இந் நோக்கத்துக்காகவே அவர் லண்டன் சென்றிருந்தார்.
ரிசார்ட் முண்டி ஆவணப்படம் தொடர்பாக அறிமுகம் ஒன்றை செய்ததுடன் முன்னாள் பெண் புலி உறுப்பினரான ஜயவதனியையும் அவரது குடும்பத்தையும் பற்றி ஒரு விளக்கத்தையும் கொடுத்தார். இத்திட்டத்துக்காக பணிபுரிந்த இலங்கை படத் தயாரிப்பு குழுவின் இப்படத்தின் இயக்குணர் ஜீவன் சந்திமல், தயாரிப்பாளர் ருவன் குகுல விதான ஆகியோரின் அர்ப்பணிப்பை அவர் சுட்டிக்காட்டினார்.
ஜயவதனி இள வயதிலே ஒரு தீவிரவாத இராணுவமாக செயற்படுவதற்கு புலிகளினால் பல கொடுமைகளுடன் நிர்ப்பந்திக்கப்பட்டார் பின்னர் அவர்களாலே ஏமாற்றப்பட்டார். புலிகள் சுதந்திரத்துக்காக போராடுவதாகக் கூறினர் எனினும் அவர்களுக்குள்ளேயே பல கொலைகள் இடம் பெற்றன. இவை 2009 ஆம் ஆண்டுடன் முற்றுப்புள்ளிக்கு வந்துவிட்டது. அவரும் அவரது குடும்பமும் காப்பற்றப்பட்டமைக்கு ஜயவதனியின் குடும்பத்தார் என்றென்றும் இலங்கை இராணுவத்துக்கு நன்றிசெலுத்த கடமைப் பட்டுள்ளவர்களாக உள்ளனர். ஜயவதனி போன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் போரின் முடிவில் இராணுவத்தால் காப்பற்றப்பட்டு பராமரிக்கப்பட்டனர்.
டொக்டர் லயனல் சமரசிங்க இலங்கையின் கன்சரவடிவ் நன்பர்கள் சார்பாக நன்றியுரையை வழங்கினார் இதேவேளை படத்தயாரிப்புக் குழுவான ஜீவன் சந்திமால், ருவன் கெகுலவிதான உள்ளிட்டோர் பிரித்தானிய விஷா பெறுவதில் கொழும்பில் ஏற்பட்ட தாமதத்தினால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
சர்வதேச விசாரணைகள் சுயாதீனமாக இருக்காதென்பதற்கு தருஸ்மன் அறிக்கை சாட்சி;;நவநீதம்பிள்ளையின் செயற்பாடுகளும்;ஒருதலைப்பட்சம் வெளிநாட்டுத் தலையீடுகளை நிராகரிக்க இதுவே காரணம்!
Friday, February 28, 2014
இலங்கை::இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைகள் ஒருபோதும் சுயாதீனமானதாக அமையப்போவதில்லை என
மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் சர்வதேச பிரதிநிதியும் அமைச்சருமான மஹிந்த
சமரசிங்க தெரிவித்தார்.
தருஸ்மன் அறிக்கை, நவநீதம் பிள்ளையின் செயற்பாடுகள் இதற்கு சிறந்த உதாரணமாக
அமைந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதனைக் கருத்திற்கொண்டு சர்வதேச விசாரணைகளுக்கு
ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
ஜெனீவா மனித உரிமைப் பேரவை
அமர்வுகள் அண்மித் துள்ள நிலையில் இலங்கை யின் செயற்பாடுகள் குறித்து வினவியபோதே
அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மிகவும் அர்ப்பணிப்புடன் கஷ்டப்பட்டு பெற்றுக்கொண்ட
சமூக, பொருளாதார ஸ்திரத்தன்மையையும் சுதந்திரத்தையும் சீர்குலைக்க சர்வதேச சக்திகள்
மேற்கொள்ளும் சூழ்ச்சிகளுக்கு ஒருபோதும் இட மளிக்கப்போவதில்லை எனவும் அமைச்சர்
தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
எவர் எதைக் குறித்து சந்தோசப் பட்டாலும் நாம் எமது நாட் டையோ பாதுகாப்புப் படையின
ரையோ காட்டிக்கொடுக்கப் போவதில்லை. மிகவும் அர்ப்ப ணிப்புடன் பல சவால்களுக்கு
மத்தியில் பெற்றுக்கொள்ள ப்பட்ட சமூக பொருளாதார அபிவிருத்தி க்கான
ஸ்திரத்தன்மையையும் சுதந்திரத்தையும் சீரழிக்கும் சர்வதேச சூழ்ச்சிக்கு
இடமளிக்கப்போவதில்லை.
மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் சர்வதேச பிரதிநிதி என்ற வகையில் நான் கூறவிரும்புவது சர்வதேச விசாரணைகள் ஒருபோதும் சுயாதீனமானதாக இருக்கப்போவதில்லை என்பதே. இதற்கு தருஸ்மன் அறிக்கை சிறந்த உதாரணமாகும்.
மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் சர்வதேச பிரதிநிதி என்ற வகையில் நான் கூறவிரும்புவது சர்வதேச விசாரணைகள் ஒருபோதும் சுயாதீனமானதாக இருக்கப்போவதில்லை என்பதே. இதற்கு தருஸ்மன் அறிக்கை சிறந்த உதாரணமாகும்.
இந்த குழுவுக்குத் தலைமை வகித்த இந்திய முன்னாள் நீதியரசர் பகவதி அவர்களுக்கும்
காண்பிக்காமல் மேற்கத்தைய நாடுகளைச் சேர்ந்த சிலர் இணைந்து சம்பந்தப்பட்ட அறிக்கையை
வெளியிட்டனர். எமது நாட்டுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினர்.
இதனையடுத்து நான் உடனடியாகவே இந்தியாவுக்குச் சென்று முன்னாள் இந்திய நீதியரசரான
அக்குழுவின் தலைவர் பகவதி அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினேன். அவர்
சம்பந்தப்பட்ட அறிக்கையைத் தாம் நிராகரிப்பதாகத் தெரிவித்தார். அதனையடுத்தே அந்த
அறிக்கை செயலற்றதாகியது.
இதனை நாம் பிரசித்தப்படுத்தவில்லை. எனினும் இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெற்றமை
உண்மையாகும். சர்வதேச விசாரணைகள் ஒருபோதும் சுயாதீனமானதாக அமையப்போவதில்லை என்பதை
இதனை வைத்துக்கூற முடியும்.
எத்தகைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இறுதியில் அதனை அறிக்கையாக வெளியிடும்போது
அது இலங்கைக்கு எதிரானதாகவே இருக்கும் என்பதை நாம் அறிவோம்.
சர்வதேச விசாரணைகள் நடத்தப்படும்போது சம்பந்தப்பட்ட நாடு அதனை விரும்பவில்லை என்றால்
பலவந்தமாக அதனை மேற்கொள்ள முடியுமா என வினவியபோது அதற்குப் பதிலளித்த அமைச்சர்:-
மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டு அதன் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்போது அதற்கு
நாம் இடமளிக்காவிட்டால் அவர்கள் எமது நாட்டுக்கு வராமல் வெளியில் இருந்துகொண்டு
அறிக்கை தயாரிக்கக்கூடிய நிலையும் உள்ளது. எவ்வாறாயினும் அதற்கு நாம்
இடமளிக்கப்போவதில்லை. குறிப்பாக அண்மையில் நாம் நவநீதம்பிள்ளையை வரவழைத்தோம், அவர்
இங்கு வந்து நாட்டின் அபிவிருத்தியையும் முன்னேற்றத்தையும் நேரடியாகக் கண்டுணர்ந்து
எம்மோடு பேச்சு நடத்தினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதுபோன்ற வேறு
சந்திப்புகளின் முடிவுகளையே அவர் அறிக்கையாக தயாரித்திருந்தார்.
இவற்றை தெரிந்துகொண்டும் பல முன்னுதாரணங்களை வைத்துக்கொண்டும் எம்மால் மீண்டும்
இதுபோன்ற சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்க முடியாது. சர்வதேச குழுக்கள் இங்கு வந்து
எதைச் செய்தாலும் முடிவில் எதனை அறிக்கையாக வெளியிடுவர் என்பது எமக்குத் தெரியும்.
ஏனெனில் இத்தகைய அறிக்கைகளை பலம் வாய்ந்த சில நாடுகளே தயாரிக்கின்றன என்பதையும் நாம்
அறிவோம்.
நவநீதம்பிள்ளையைப் பொறுத்தவரை அவர் நீண்டகாலமாக இலங்கையின் உள்விவகாரங்களை
அவதானித்து வந்துள்ளார். அதற்கிணங்கவே இவ்வாறு செயற்பட்டுள்ளார். எனினும் அவருக்கு
முன்பு அப்பதவியி லிருந்தவருடன் நான் பலமுறை தொடர்பு கொண்டுள்ளேன். அவர் இந்தளவு
பாரபட்சமாக செயற்பட்டதில்லை என்பதைக் குறிப்பிடலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ராஜீவ் கொலை வழக்கு: 4 பேர் விடுதலைக்கு இடைக்கால தடை!
Friday, February 28, 2014
மேலும், 4 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக விளக்கம் கோரி தமிழக அரசுக்கும், நளினி உள்பட 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி, மாநில அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழக அரசின் முடிவு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசின் விடுதலை முடிவை எதிர்த்து மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.
இதனைத் தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 3 பேர் விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரையும் விடுவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிதாக
ஒரு மனு தாக்கல் செய்தது.
மத்திய அரசின் புதிய மனு மீதான விசாரணை (பிப்ரவரி -27) நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அதன்படி, மத்திய அரசின் புதிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 4 பேரை, உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கும் வரை விடுவிக்கக் கூடாது என உத்தரவிட்டது. மேலும் விசாரணை மார்ச் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி::ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 4 பேரை விடுதலை செய்யும் தமிழக
அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

மியான்மர் பயணம்: பிரதமரின் கடைசி வெளிநாடு பயணம்!
Friday, February 28, 2014
புதுடெல்லி::இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மியான்மர் நாட்டில்
நடக்க இருக்கும் மாநாட்டின் போது, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து
பேச இருக்கிறார்.
பிரதமர் மன்மோகன்சிங் வருகிற மார்ச் மாதம் மியான்மர் நாட்டுக்கு செல்கிறார்.
அங்கு வங்ககடல் நாடுகளான இந்தியா, வங்காளதேசம், மியான்மர், இலங்கை
உள்ளிட்ட 7 நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது.
இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு 7 நாடுகளின் தொழில் நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு குறித்து உரை நிகழ்த்துகிறார்.
அப்போது மாநாட்டில் பங்கேற்கும் இலங்கை அதிபர் ராஜபக்சே, வங்காள தேச
பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரை சந்தித்து இரு நாடுகள் இடையேயான பிரச்சினை
பற்றி பேசுகிறார்.
அனேகமாக மார்ச் 4_ம் தேதி இந்த சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது. சுற்றுப் பயண விவரம் தயாராகி வருகிறது.
பாராளுமன்றத்துக்கு தேர்தல் வரும் நிலையில், மன்மோகன் சிங்கின் கடைசி வெளிநாடு சுற்றுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, February 27, 2014
அமெரிக்காவின் சூழ்ச்சி காரணமாகவே இந்தியா - இலங்கைக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது: !
Thursday, February 27, 2014
இலங்கை::அமெரிக்காவின் சூழ்ச்சி காரணமாகவே இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் இலங்கை இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் விரைவில் களையப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவும், ஐரோப்பாவும் இலங்கையை ஓரம் கட்ட முயற்சித்து வரும்
நிலையில், எதிர்க்கட்சிகள் அதற்கு ஆதரவு அளித்து வருவதாகத்
தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்தியா பாரியளவில்
ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அழுத்தங்கள் காரணமாகவே இந்திய மத்திய அரசாங்கம் தற்போது சற்று தளம்பிய நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவு பாதிக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவித்துள்ளார். இந்த நிலைமைக்கு அமெரிக்காவே காரணம் என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனீவா பிரச்சினைகளைக் காண்பித்து மக்களை ஏமாற்றி
வாக்குகளை சேகரிக்கும் அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என அவர்
குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் மிக முக்கியமான தருணங்களில்
நாட்டுக்காக குரல் கொடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மஹா சிவராத்திரி தின பிரார்த்தனைகள் சமூக ஐக்கியத்துக்கான அர்ப்பணமாக திகழும்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
Thursday, February 27, 2014
இலங்கை::முழுமுதற் கடவுளான சிவபெருமானை பூஜித்து கொண்டாடப்படும் பிரதான விரதங்களில் மிகவும் சிறப்பான விரதமாக கருதி மகா சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று மகா சிவராத்திரி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இப்புனித
தினத்தில் ஜனாதிபதி அவர்கள் இலங்கை வாழ் சகல இந்து மக்களுக்கும் வாழ்த்துச்
செய்துயொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய தினம் மகா சிவராத்திரி இலங்கை வாழ் இந்துக்கள் உலகெங்கிலுமுள்ள
இந்துக்களுடன் இணைந்து கொள்கின்றனர். இப்பண்டிகையுடன் தொடர்புடைய பல்வேறு
கிரியைகளில் விரதம் அனுஷ்டித்தல், கோவிலில் இரவில் விழித்திருந்து நான்கு
ஜாமப்பூஜைகளில் கலந்து கொண்டு , தானம் வழங்குதல், விளக்கேற்றல், சிவபெருமானைப்
புகழ்த்து தோத்திரம் பாடுதல் போன்றவையும் அடங்குகின்றன.
இப்பண்டிகையின் முக்கிய அம்சமான திருவிளக்கேற்றும் வைபவம் அறியாமையை அகற்றி
ஞானத்தைத் தேடும் மானிட சமூகத்தின் உறுதியான முயற்சிகளையும் தமது வாழ்விலும்
சமூகத்திலும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் அடைந்து கொள்வதையும் குறித்து
நிற்கிறது.
இலங்கைவாழ் இந்துக்கள் எமது சமூகத்தில் உள்ள ஏனைய சமயங்களைச் சேர்ந்தவர்களுடன் பல
நூற்றாண்டுகளாக சகோதரத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த
முக்கியமான பண்டிகையை உண்மையான ஐக்கிய உணர்வுடனும் புரிந்துணர்வுடனும்
சுதந்திரமாகக் கொண்டாடுவதற்கேற்ற சமாதானச் சூழல் தற்போது நாடெங்கிலும் காணப்படுவது
மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
பிரதியமைச்சர் சரத் அமுனுகம இன்று முதல் எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் எத்தியோப்பிய நாடுகளுக்கு விஜயம்!
Thursday, February 27, 2014
இலங்கை::நிதி மற்றும் தி;ட்டமிடல் பிரதியமைச்சர் சரத் அமுனுகம இன்று முதல் எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் எத்தியோப்பிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதியாகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2 ஆம் திகதி வரை இந்தியாவிலும், 5 ஆம் திகதிவரை எத்தியோப்பியாவிலும் பயணங்களை மேற்கொண்டு உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இந்த பயணங்கள் காரணமாக அமைச்சரின் இன்றைய ஜெர்மனிக்கான விஜயம் ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மும்பையில் நீர்மூழ்கிக் கப்பலில் தீ: 5 மாலுமிகள் காயம்!!
Thursday, February 27, 2014
மும்பை::மும்பை கடல் பகுதியில் நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 மாலுமிகள் காயமடைந்தனர்.
ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் இன்று அதிகாலை திடீரென
தீ பிடித்தது. தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் மாலுமிகள் 5
பேருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாலுமிகள் அனைவரும்
ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
நீர்மூழ்கிக் கப்பலுக்கு பெரிய அளவில் எந்த சேதமும் ஏற்படவில்ல என கடற்படை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியக் கடறபடை நீர்மூழ்கிக் கப்பலில் தீ விபத்து ஏற்படுவது இது 3-வது
முறையாகும். கடந்த ஆண்டு ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பலில்
தீ பிடித்த போது 18 மாலுமிகள் பலியாகினர்.
இலங்கை விமானப்படை ஏர் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம பிரியாவிடை அழைப்பு!
Thursday, February 27, 2014
இலங்கை::இலங்கையின் விமானப்படைத் தளபதி எயார் மாசல் ஹர்ஷ அபேவிக்ரம இன்று சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளவுள்ளார்
இலங்கை::இலங்கையின் விமானப்படைத் தளபதி எயார் மாசல் ஹர்ஷ அபேவிக்ரம இன்று சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளவுள்ளார்
இலங்கை விமானப்படை ஏர் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம: பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி திரு கோத்தபாய ராஜபக்ச பிரியாவிடை அழைப்பு நினைவுச்சின்னங்களை பரிமாறி கொண்டனர்.
ஏர் மார்ஷல் ஹர்ஷ துமிந்த அபேவிக்ரம 1980 ல் இலங்கை விமானப்படை ( விமானப்படையில் ) சேர்ந்து 1982 மோதல் உச்ச கட்டத்தில் அவர் போர் விமானங்களை பயிற்சி எடுத்து முதல் விமானிகள் ஒரு தேர்வு செய்யப்பட்டார் . அவர் இலங்கை விமானப்படையின் முதல் ஜெட் படை நிறுவுவதில் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் அவர் 5 ஜெட் படை முதல் கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர் சூப்பர்சோனிக் பறக்க முதல் இலங்கை பைலட் என்ற பெருமையை பெற்றுள்ளார் .
அவர் 2006 ஆம் ஆண்டு மற்றும் அதன் பின்னர் இயக்குனர் வான் செயல் இயக்குனர் நடவடிக்கைகளுக்கு மேலாண்மை விமானப்படை வாரியம் நியமிக்கப்பட்டார் . பின்னர் அவர் 2008 ல் இயக்குனர் வான் செயல் என தொடர்ந்து அதே பணியாளர்களின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.
அபேவிக்ரம கடந்த மூன்று ஆண்டுகளாக விமானப் படைத் தளபதியாக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானப்படைத் தளபதி கடமைகளை வெற்றிகரமாக செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 2011 இல், ஏர் மார்ஷல் ஹர்ஷ துமிந்த அபேவிக்ரம இலங்கை விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டார் . ரன அலங்கரிக்கப்பட்ட போர் விமானி ஆவார் . அவர் ' ராணா விக்கிரம Padakkama ' (இரண்டு முறை) , ' ராணா சூரா Padakkama ' , 'உத்தம சேவா Padakkama ' மற்றும் ' Vishishta சேவா Vibhushanaya ' பதக்கங்களை பெற்றவர் .
13வது திருத்தச் சட்டத்தைக் காரணம் காட்டி பிரிவினைவாத சக்திகளுடன் அதிகாரப் பகிர்வு தேவையில்லை!
Thursday, February 27, 2014
இலங்கை::13வது திருத்தச் சட்டத்தைக் காரணம் காட்டி அதிகாரங்களைக் கோரிய அமைச்சர்கள்
சிலர், தற்பொழுது ஜெனீவாவின் ஊடாக அதிகாரப் பகிர்வைக் கோர முயற்சிக்கின்றனர்.
பிரிவினைவாத சக்திகளுடன் அதிகாரப் பகிர்வொன்றுக்குச் செல்ல வேண்டிய தேவை இல்லையென
அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவை எமக்கு
எதிராக நேரடியான பொருளாதாரத் தடையை விதிக்க முடியாது. இதற்காக பாதுகாப்புச்
சபையினதும், பொதுச் சபையினதும் அங்கீகாரம் பெறவேண்டும். 13வது திருத்தச் சட்டம்
எமக்கு பலாத்காரமாகத் திணிக்கப்பட்ட ஒன்றாகும் என அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட
அமைச்சர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
13வது திருத்தச்சட்டம் மற்றும் இலங்கைக்கு எதிரான ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பாக அமைச்சர் விமல்வீரவன்ச, அமைச்சர் ரோஹித்த அபயகுணவர்த்தன, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரிடம் நேற்று தினகரன் கேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர்.
அமைச்சரவை என்ற வகையில் கூட்டுப்பொறுப்பை எதிர்கொள்ள வேண்டுமென்றும், தனி நபர்களாக அல்லது குழுக்களாக கருத்துக்களை வெளியிடுவது பொருத்தமில்லையென்றும் அமைச்சரவைக் குழுவாகப் பேசுவதே பொருத்தமானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து வெளியிடுகையில், எல்.ரி.ரி.ஈ. யினர்
பலமாக இருந்த காலத்தில் 13வது திருத்தச் சட்டத்தைக் காரணம் காட்டி அதிகாரங்களைக்
கோரிய அமைச்சர்கள் சிலர், தற்பொழுது ஜெனீவாவின் ஊடாக அதிகாரப் பகிர்வைக் கோர
முயற்சிப்பதாக வீடமைப்பு மற்றும் பொறியியல்துறை அமைச்சர் விமல் வீரவன்ச
தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தைப் பயமுறுத்தி, பிரிவினைவாதிகளுடன் இணைந்து புலிகள் தேவையில்லையெனக் காண்பித்து அதிகாரப் பகிர்வைக் கோருவதற்கு இவர்கள் முயற்சிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் பிரேரணையால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என பயமுறுத்தி அதிகாரப் பகிர்வுக்குச் செல்லவே முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தல் நடத்துவதை அரசாங்கம் பின்னடித்தபோது அதற்கு எதிராக அழுதவர்களும் இந்த அமைச்சர்களே. வட மாகாணசபை அமைக்கப்பட்ட பின்னர் அது தற்போது அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது. நாட்டின் சட்டத்துக்கு எதிராக வட மாகாணசபை தீர்மானங்களை நிறைவேற்றும்போது இந்த அமைச்சர்கள் மெளனம் காத்து வருகின்றனர்.

சட்டத்துக்கு முரணான பிரேரணைகளே வட மாகாண
சபையில் நிறைவேற்றப்படுகின்றன.
இந்தியாவுக்கு அடிபணிந்து செல்லவேண்டிய தேவை இல்லையெனக் குறிப்பிட்ட அமைச்சர் விமல்
வீரவன்ச, தமிழ் பிரிவினைவாத சக்திகளுடன் அதிகாரப் பகிர்வொன்றுக்குச் செல்ல வேண்டிய
தேவை இல்லையென்றும் கூறினார்.
பயங்கரவாதிகள் விரும்பியதை தற்பொழுது அடைவதற்கு முயற்சிக்கும் சர்வதேச சக்திகளுக்கு எதிராக மக்கள் திரண்டெழவேண்டியதே தற்பொழுது நாட்டில் தேவையான விடயமாகும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.
தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு எமக்கு எதிராக நேரடியான பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது. இதற்காக பொதுச்சபையினதும் பாதுகாப்புச் சபையினதும் அங்கீகாரம் இருக்க வேண்டும். சில வேளை எமக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படுமானால் அதனை நடைமுறைப்படுத்த இலங்கையின் அங்கீகாரமும் இருக்க வேண்டும்.
நாட்டுக்கு நாடு தொடர்பாக தீர்மானம் எடுக்கலாம். அமெரிக்காவுக்கு தேவைப்படுமானால் எம்முடைய நாட்டைப் பற்றி தீர்மானம் எடுக்கலாம். இலங்கைக்கும் அவ்வாறே எந்த நாடு தொடர்பாகவும் தீர்மானம் எடுக்கலாம். என்றாலும் ஜெனீவா மாநாட்டுக்கு எமது நாடு தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு ஆளுமையில்லை. துறைமுக பெருந்தெருக்கள் கப்பல்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன,
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் எங்களுடைய நாட்டுக்கு பலாத்காரமாக திணிக்கப்பட்ட அரசியலமைப்பாகும். அதனை நடைமுறைப்படுத்தும் போது சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற எந்தவொரு இனத்திற்கும் பிரச்சினை ஏற்பட இடமளிக்கக்கூடாது. குறிப்பாக மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரத்தை கொடுப்பது தொடர்பாக மக்கள் மத்தியில் சந்தேக உணர்வு உருவாகியுள்ளது. இதனால், எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படவுள்ள சகல இடங்களையும் மூடிவிட வேண்டும்.
13ஆவது அரசியலமைப்பு போன்ற குழப்பத்தில் உருவாக்கப்பட்ட யாப்பு தொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானங்களுக்கு வர வேண்டும். அதிகாரத்தை பரவலாக்கும் போது மேலும் பிரச்சினைகள் ஏற்படலாம். வடக்கில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி, தெற்கில் பிரச்சினையை ஏற்படுத்தத் தேவையில்லை. முழுமையான கூட்டுப் பொறுப்பை நிறைவேற்றி தேவையற்ற பிரச்சினைகள் உருவாகுவதை தவிர்க்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு என்பது சொல்வதை செய்யும், செய்வதை சொல்லும் அரசாங்கமாகும்.
புலிகள் அமைப்பிற்கு உதவியளித்து செய்யமுடியாதவற்றை ஜெனீவாவின் மூலம் செய்வதற்கு சர்வதேசம் முயற்சி செய்கிறது. அரசாங்கம் என்ற வகையில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவை எதிர்கொள்ள நாம் தயார். அமைச்சரவை என்ற வகையில் நாம் கூட்டுப் பொறுப்பை எதிர்கொள்ள வேண்டும். தனி நபர்களாக, குழுக்களாக ஒவ்வொரு முறையும் கருத்துக்களை வெளியிடுவது பொருத்தமல்ல. அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் கூட்டுப்பொறுப்பான பேச்சு வார்த்தைகளை நடத்தி அமைச்சரவைக் குழுவாக பேசுவதும், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதும் சாலப் பொத்தமானதாகும்.

1975-2014 இலங்கை’- ஒரு சரித்திர முக்கியத்துவமிக்க பயணம்:::-புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத செயற்பாடுகளும் அவற்றின் விளைவால் மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்த சூழலும்!!
Thursday, February 27, 2014
இலங்கை::சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கை நெறிகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் கல்வி நிலையத்தில் நேற்று முன் தினம் ‘1975-2014 இலங்கை எனும் தலைப்பில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது.
இப்புத்தகமானது 70 கலிளிருந்து தற்போது வரையிலான இலங்கையின் சரித்திர முக்கியத்துவமிக்க பல தோற்றங்களை விளக்குகின்றது. அனுபவமுள்ள பத்திரிகையாளரும் நேசன் பத்திரிகையின் பத்திரிகை ஆசிரியருமான திரு. மாலிந்த செனவிரத்னவினால் எழுதப்பட்ட இப்புத்தகமானது நல்லிணக்க மற்றும் கூட்டுறவு நிலையத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. கடந்த காலங்களில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத செயற்பாடுகளும் அவற்றின் விளைவால் மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்த சூழலும் இப்புத்தகத்தின் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளன.
புத்தக வெளியீட்டு வைபவமானது இந்நாட்டில் சமாதானமும் சபீட்சமும் மீண்டும் வருவதற்கு பங்களிப்பு செய்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கௌரவ வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸும் இவ்வைபவத்தில் பிரசன்னமாகியிருந்தார். இதன் போது அமைச்சர் பீரிஸினால் பாதுகாப்பு செயலாளருக்கு புத்தகம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
சிரேஷ்ட வழக்கறிஞர் திரு.காமினி தயசிரி, லக்ஸ்மன் கதிர்காமர் நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.அசங்க அபேகுணசேகர, திரு.அருன் தம்பிமுத்து ஆகியோரும் இவ்வைபவத்தில் பங்குபற்றியிருந்தனர். பாதுகாப்பு செயலாளரையும் பேராசிரியர் பீரிஸையும் புலிகள் கொலை செய்ய பல தடவை சதிசெய்தனர் எனினும் அவர்கள் அதிஷ்டவசமாக புலிகளின் சூழ்ச்சிகளிலிருந்து தப்பித்துக் கொண்டனர். இருந்த போதும் திரு.தம்பிமுத்தும் திரு.அபேகுணசேகரவும் பிரலமிக்க அரசியல் வாதிகளான தங்களது தந்தையர்களை புலிகளின் தாக்குதலினால் இழந்துவிட்டனர்.
புத்தகத்தின் உள்ளடக்கத்தை விபரிக்கும் வகையில் குறுகிய ஆனால் முழுமையான ஆவணப்படமொன்று பெருமளவில் கொழுப்பிலுள்ள இராஜதந்திரிகளை உள்ளடக்கிய பார்வையாளர்களுக்கு கான்பிக்கப்பட்டது. இதன் மூலம் 1975 ஆம் ஆண்டு தொடக்கம் புலிகள் புரிந்த அட்டூழியங்களை பார்வையாளர்களால் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.
நாட்டை பிளவுபடுத்தி தமக்கானதோர் மாநிலத்தை அல்லது அரசை நிறுவும் நோக்குடன் புலிகினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த தாக்குதல்கள் பல தசாப்தங்களாக குறிப்பாக 80 களின் ஆரம்பத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்புத்தகமும் ஆவணப்படமும் மனித உரிமைகள் தொடர்பாக பேசுபவர்களுக்கு ஒரு சிறந்த சான்றாகும்.::
Wednesday, February 26, 2014
மனித உரிமை விசாரணைகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது: பேராசிரியர் பீரிஸ்!
Wednesday, February 26, 2014
இலங்கை::ஒரு நாட்டின் மனித உரிமை விவகாரங்களை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாதென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்
இலங்கை::ஒரு நாட்டின் மனித உரிமை விவகாரங்களை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாதென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்
வலியுறுத்தியிருக்கின்றார். கொழும்பில் அமைந்துள்ள சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கை நெறிகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் 19752014 என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது உரையாற்றுகையிலேயே ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.
த நேஷன் பத்திரிகையின் ஆசிரியர் மலிந்த செனவிரட்ணவால் எழுதப்பட்ட இந்நூல், இலங்கையின் போர் தொடர்பான புகைப்படங்களைத் தாங்கி வெளிவந்துள்ளது.
இந்நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் பீரிஸ் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் சகல நாடுகளும் ஒரே மாதியான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கவில்லை. இலங்கை மீது மட்டுமல்லாது ஏனைய சில நாடுகள் மீதும் மனித உரிமை விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அந்நாடுகளும் அச்சவால்களை எதிர்கொண்டு வெற்றி கொண்ட நாடுகளாகவே உள்ளன. இலங்கை போருக்குப் பின்னரான நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், நாட்டின் மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைப்பது நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.
சர்வதேச நிறுவனங்கள் நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக ஒரே மாதிரியான அணுகுமுறையையே கொண்டிருக்க வேண்டும். தேர்வுகளின் அடிப்படையிலான அணுகுமுறையினைக் கொண்டிருக்கக் கூடாது.
மனித உரிமைகள் மீறப்பட்ட விடயங்களில் அவை தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதேவேளை, ஒவ்வொரு நாட்டிலும் காணப்படும் பிரச்சினைகளது உண்மைத் தன்மையினையும், அவற்றின் உள்ளீடுகளையும் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
உந்நாட்டின் பிரச்சினைகளில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு காணப்படக்கூடாது. நம் நாட்டினை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஐ.நா. சபையின் சகல திணைக்களங்களினதும் தலைமை அதிகாரிகளையும் நாட்டிற்கு அழைத்து எமது உண்மை நிலையினை வெளிக்காட்டினோம். நாம் எதனையும் மறைக்கவில்லை. அத்துடன் எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கை ஐ.நா. பொறிமுறையுடன் இணைந்தே செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3000பேருக்கு காணி உறுதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன –மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வி.முரளிதரன்!
Wednesday, February 26, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டு இதுவரையில் காணி உறுதிகள் பெறாதவர்களுக்கு அவற்றிக்கான உறுதிகளைப்பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுவருவதாக
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 3000பேருக்கு ஜயபூமி காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 7000 பேருக்கு அவற்றினை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மண்முனைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு,கிராண்குளம் ஆகிய பகுதிகளில் குடியேற்றம் செய்யப்பட்டவர்களுக்கு காணி உறுதிப்பத்திரத்தினை பெற்றுக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1994ஆம் ஆண்டு குடியேற்றம் செய்யப்பட்டவர்களுக்கு இதுவரையில் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படாமை தொடர்பில் பிரதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசென்றதை தொடர்ந்து இந்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளர் விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது இதுவரையில் காணி உறுதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாதவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த பிரதியமைச்சர் அவர்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களைபெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,வர்த்தகர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சென்னையில் காங்கிரஸ்–நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதல்!
Wednesday, February 26, 2014
சென்னை::எண்ணூர்
துறைமுகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்காக மத்திய மந்திரி
ஜி.கே.வாசனுக்கு பாராட்டு விழா இன்று நடந்தது. பாராட்டு விழாவுக்காக
காங்கிரஸ் தரப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டரின் மீது
நாம் தமிழர் கட்சியினர் சத்திய மூர்த்தி பவனை இன்று முற்றுகையிடப் போவதாக
இன்று போஸ்டர் ஒட்டினார்கள்.
இதைப் பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள் ஆவேசமடைந்தனர். ராயப்பேட்டை விழாவில் திரண்டிருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த தகவல் பறந்தது.
இதையடுத்து
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம்,
ஹரிகிருஷ்ண ரெட்டி, அகரம் கோபி, கொளத்தூர் கோபால், எஸ்.எம்.குமார் உள்ளிட்ட
நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சத்திய மூர்த்தி பவன் முன்பு குவிந்தனர்.
நாம் தமிழர் கட்சியினருக்கு பதிலடி கொடுப்பதற்கு காங்கிரசார் காத்து
நின்றனர்.
அண்ணாசாலையும் ஜி.பி.ரோடும் இணையும் இடத்தில் நாம் தமிழர்
கட்சியின் இளைஞர் பாசறை அறிவுச் செல்வன் தலைமையில் தொண்டர்கள் திரண்டனர்.
அவர்கள் சத்திய மூர்த்தி பவனை நோக்கி சென்றனர். 100 அடிக்கு முன்னதாக
வந்தபோது காங்கிரஸ் தொண்டர்கள் விரட்டினர்.
அங்கு வந்த போலீசார்
தடுப்புவேலி அமைத்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால்
காங்கிரசாருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. காங்கிரஸ்
அலுவலகம் முன்பு வைத்த தடுப்பு வேலியை அகற்று மாறு தொண்டர்கள் சாலை
மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
தொடர்ந்து சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு உள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)