Friday, February 28, 2014
புதுடெல்லி::இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மியான்மர் நாட்டில்
நடக்க இருக்கும் மாநாட்டின் போது, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து
பேச இருக்கிறார்.
பிரதமர் மன்மோகன்சிங் வருகிற மார்ச் மாதம் மியான்மர் நாட்டுக்கு செல்கிறார்.
அங்கு வங்ககடல் நாடுகளான இந்தியா, வங்காளதேசம், மியான்மர், இலங்கை
உள்ளிட்ட 7 நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது.
இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு 7 நாடுகளின் தொழில் நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு குறித்து உரை நிகழ்த்துகிறார்.
அப்போது மாநாட்டில் பங்கேற்கும் இலங்கை அதிபர் ராஜபக்சே, வங்காள தேச
பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரை சந்தித்து இரு நாடுகள் இடையேயான பிரச்சினை
பற்றி பேசுகிறார்.
அனேகமாக மார்ச் 4_ம் தேதி இந்த சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது. சுற்றுப் பயண விவரம் தயாராகி வருகிறது.
பாராளுமன்றத்துக்கு தேர்தல் வரும் நிலையில், மன்மோகன் சிங்கின் கடைசி வெளிநாடு சுற்றுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment