Thursday, February 27, 2014

1975-2014 இலங்கை’- ஒரு சரித்திர முக்கியத்துவமிக்க பயணம்:::-புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத செயற்பாடுகளும் அவற்றின் விளைவால் மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்த சூழலும்!!

Thursday, February 27, 2014
இலங்கை::சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கை நெறிகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் கல்வி நிலையத்தில் நேற்று முன் தினம்  ‘1975-2014 இலங்கை எனும் தலைப்பில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது.
இப்புத்தகமானது 70 கலிளிருந்து தற்போது வரையிலான இலங்கையின் சரித்திர முக்கியத்துவமிக்க பல தோற்றங்களை விளக்குகின்றது. அனுபவமுள்ள பத்திரிகையாளரும் நேசன் பத்திரிகையின் பத்திரிகை ஆசிரியருமான திரு. மாலிந்த செனவிரத்னவினால் எழுதப்பட்ட இப்புத்தகமானது நல்லிணக்க மற்றும் கூட்டுறவு நிலையத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. கடந்த காலங்களில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத செயற்பாடுகளும் அவற்றின் விளைவால் மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்த சூழலும் இப்புத்தகத்தின் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளன.
 
புத்தக வெளியீட்டு வைபவமானது இந்நாட்டில் சமாதானமும் சபீட்சமும் மீண்டும் வருவதற்கு பங்களிப்பு செய்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கௌரவ வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸும் இவ்வைபவத்தில் பிரசன்னமாகியிருந்தார். இதன் போது அமைச்சர் பீரிஸினால் பாதுகாப்பு செயலாளருக்கு புத்தகம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
 
சிரேஷ்ட வழக்கறிஞர் திரு.காமினி தயசிரி, லக்ஸ்மன் கதிர்காமர் நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.அசங்க அபேகுணசேகர, திரு.அருன் தம்பிமுத்து ஆகியோரும் இவ்வைபவத்தில் பங்குபற்றியிருந்தனர். பாதுகாப்பு செயலாளரையும் பேராசிரியர் பீரிஸையும் புலிகள் கொலை செய்ய பல தடவை சதிசெய்தனர் எனினும் அவர்கள் அதிஷ்டவசமாக புலிகளின் சூழ்ச்சிகளிலிருந்து தப்பித்துக் கொண்டனர். இருந்த போதும் திரு.தம்பிமுத்தும் திரு.அபேகுணசேகரவும் பிரலமிக்க அரசியல் வாதிகளான தங்களது தந்தையர்களை புலிகளின் தாக்குதலினால் இழந்துவிட்டனர்.
 
புத்தகத்தின் உள்ளடக்கத்தை விபரிக்கும் வகையில் குறுகிய ஆனால் முழுமையான ஆவணப்படமொன்று பெருமளவில் கொழுப்பிலுள்ள இராஜதந்திரிகளை உள்ளடக்கிய பார்வையாளர்களுக்கு கான்பிக்கப்பட்டது. இதன் மூலம் 1975 ஆம் ஆண்டு தொடக்கம் புலிகள் புரிந்த அட்டூழியங்களை பார்வையாளர்களால் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.
 
நாட்டை பிளவுபடுத்தி தமக்கானதோர் மாநிலத்தை அல்லது அரசை நிறுவும் நோக்குடன் புலிகினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த தாக்குதல்கள் பல தசாப்தங்களாக குறிப்பாக 80 களின் ஆரம்பத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்புத்தகமும் ஆவணப்படமும் மனித உரிமைகள் தொடர்பாக பேசுபவர்களுக்கு ஒரு சிறந்த சான்றாகும்.::
tamil matrimony_HOME_468x60.gif

No comments:

Post a Comment