Friday, February 28, 2014
இலங்கை::இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைகள் ஒருபோதும் சுயாதீனமானதாக அமையப்போவதில்லை என
மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் சர்வதேச பிரதிநிதியும் அமைச்சருமான மஹிந்த
சமரசிங்க தெரிவித்தார்.
தருஸ்மன் அறிக்கை, நவநீதம் பிள்ளையின் செயற்பாடுகள் இதற்கு சிறந்த உதாரணமாக
அமைந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதனைக் கருத்திற்கொண்டு சர்வதேச விசாரணைகளுக்கு
ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
ஜெனீவா மனித உரிமைப் பேரவை
அமர்வுகள் அண்மித் துள்ள நிலையில் இலங்கை யின் செயற்பாடுகள் குறித்து வினவியபோதே
அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மிகவும் அர்ப்பணிப்புடன் கஷ்டப்பட்டு பெற்றுக்கொண்ட
சமூக, பொருளாதார ஸ்திரத்தன்மையையும் சுதந்திரத்தையும் சீர்குலைக்க சர்வதேச சக்திகள்
மேற்கொள்ளும் சூழ்ச்சிகளுக்கு ஒருபோதும் இட மளிக்கப்போவதில்லை எனவும் அமைச்சர்
தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
எவர் எதைக் குறித்து சந்தோசப் பட்டாலும் நாம் எமது நாட் டையோ பாதுகாப்புப் படையின
ரையோ காட்டிக்கொடுக்கப் போவதில்லை. மிகவும் அர்ப்ப ணிப்புடன் பல சவால்களுக்கு
மத்தியில் பெற்றுக்கொள்ள ப்பட்ட சமூக பொருளாதார அபிவிருத்தி க்கான
ஸ்திரத்தன்மையையும் சுதந்திரத்தையும் சீரழிக்கும் சர்வதேச சூழ்ச்சிக்கு
இடமளிக்கப்போவதில்லை.
மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் சர்வதேச பிரதிநிதி என்ற வகையில் நான் கூறவிரும்புவது சர்வதேச விசாரணைகள் ஒருபோதும் சுயாதீனமானதாக இருக்கப்போவதில்லை என்பதே. இதற்கு தருஸ்மன் அறிக்கை சிறந்த உதாரணமாகும்.
மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் சர்வதேச பிரதிநிதி என்ற வகையில் நான் கூறவிரும்புவது சர்வதேச விசாரணைகள் ஒருபோதும் சுயாதீனமானதாக இருக்கப்போவதில்லை என்பதே. இதற்கு தருஸ்மன் அறிக்கை சிறந்த உதாரணமாகும்.
இந்த குழுவுக்குத் தலைமை வகித்த இந்திய முன்னாள் நீதியரசர் பகவதி அவர்களுக்கும்
காண்பிக்காமல் மேற்கத்தைய நாடுகளைச் சேர்ந்த சிலர் இணைந்து சம்பந்தப்பட்ட அறிக்கையை
வெளியிட்டனர். எமது நாட்டுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினர்.
இதனையடுத்து நான் உடனடியாகவே இந்தியாவுக்குச் சென்று முன்னாள் இந்திய நீதியரசரான
அக்குழுவின் தலைவர் பகவதி அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினேன். அவர்
சம்பந்தப்பட்ட அறிக்கையைத் தாம் நிராகரிப்பதாகத் தெரிவித்தார். அதனையடுத்தே அந்த
அறிக்கை செயலற்றதாகியது.
இதனை நாம் பிரசித்தப்படுத்தவில்லை. எனினும் இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெற்றமை
உண்மையாகும். சர்வதேச விசாரணைகள் ஒருபோதும் சுயாதீனமானதாக அமையப்போவதில்லை என்பதை
இதனை வைத்துக்கூற முடியும்.
எத்தகைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இறுதியில் அதனை அறிக்கையாக வெளியிடும்போது
அது இலங்கைக்கு எதிரானதாகவே இருக்கும் என்பதை நாம் அறிவோம்.
சர்வதேச விசாரணைகள் நடத்தப்படும்போது சம்பந்தப்பட்ட நாடு அதனை விரும்பவில்லை என்றால்
பலவந்தமாக அதனை மேற்கொள்ள முடியுமா என வினவியபோது அதற்குப் பதிலளித்த அமைச்சர்:-
மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டு அதன் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்போது அதற்கு
நாம் இடமளிக்காவிட்டால் அவர்கள் எமது நாட்டுக்கு வராமல் வெளியில் இருந்துகொண்டு
அறிக்கை தயாரிக்கக்கூடிய நிலையும் உள்ளது. எவ்வாறாயினும் அதற்கு நாம்
இடமளிக்கப்போவதில்லை. குறிப்பாக அண்மையில் நாம் நவநீதம்பிள்ளையை வரவழைத்தோம், அவர்
இங்கு வந்து நாட்டின் அபிவிருத்தியையும் முன்னேற்றத்தையும் நேரடியாகக் கண்டுணர்ந்து
எம்மோடு பேச்சு நடத்தினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதுபோன்ற வேறு
சந்திப்புகளின் முடிவுகளையே அவர் அறிக்கையாக தயாரித்திருந்தார்.
இவற்றை தெரிந்துகொண்டும் பல முன்னுதாரணங்களை வைத்துக்கொண்டும் எம்மால் மீண்டும்
இதுபோன்ற சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்க முடியாது. சர்வதேச குழுக்கள் இங்கு வந்து
எதைச் செய்தாலும் முடிவில் எதனை அறிக்கையாக வெளியிடுவர் என்பது எமக்குத் தெரியும்.
ஏனெனில் இத்தகைய அறிக்கைகளை பலம் வாய்ந்த சில நாடுகளே தயாரிக்கின்றன என்பதையும் நாம்
அறிவோம்.
நவநீதம்பிள்ளையைப் பொறுத்தவரை அவர் நீண்டகாலமாக இலங்கையின் உள்விவகாரங்களை
அவதானித்து வந்துள்ளார். அதற்கிணங்கவே இவ்வாறு செயற்பட்டுள்ளார். எனினும் அவருக்கு
முன்பு அப்பதவியி லிருந்தவருடன் நான் பலமுறை தொடர்பு கொண்டுள்ளேன். அவர் இந்தளவு
பாரபட்சமாக செயற்பட்டதில்லை என்பதைக் குறிப்பிடலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment