Friday, February 28, 2014

த லாஸ்ட் பேஸ்’ பிரித்தானிய பாராளு மன்றில் திரையிடப்பட்டது!

Friday, February 28, 2014
இலங்கை::த லாஸ்ட்பேஸ்’ ஆவணப்படம் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி பிரித்தானியாவில் வெற்றிகரமாக திரையிடப்பட்டது. பிரித்தானிய பாராளு மன்ற உறுப்பினர்கள், விமர்சகர்கள், இலங்கைகான உயர்ஸ்தானிகர் கிரிஸ் நொனிஸ் உட்பட திரு.நெவில்லே டி சில்வா மற்றும் உயர் ஸதானிகத்தின் ஏனைய அதிகாரிகள் என விசேட அதிதிகள் பலரும் பங்கேற்றிருந்தனர். இந்நிகழவ்னது சர்வ தேச சமுகம் இலங்கை யுத்தம் தொடர்பாக அறிந்திராத பல விடயங்களை தெளிவு படுத்தக்கூடியதாக அமைந்திருந்தன.
 
லோர்ட் நேஸ்பி அங்கு வருகை தந்திருந்த பிரபலங்கள் அடங்கிய குழுவினரிடையே பேராசிரியர் மோர்க்ராப்ட் மற்றும் ‘ த லாஸ்ட் பேஸ்’ தொகுப்பாளர் ரிசார்ட் முண்டி உட்பட பலரையும் இலங்கையின் தற்போதய நிலைமை குறித்து கலந்தாலோசிக்க அறிமுகப்படுத்தினார். பேராசிரியர் மோர்க்ராப்ட் வெளிநாட்டு கொள்கைப் பகுப்பாய்வுக்கான இங்கிலாந்து மையத்தின் பணிப்பாளராக கடமையாற்றுவதுடன் அவர் அரச இராணுவ கல்வி நிலையத்தின் சிரேஷ்ட போதனா ஆசிரியராக் கடமையாற்றிருந்தார் மேலும் பத்திரிகை துறை கற்கையில் பேராசிரியராக கடமையாற்றுகின்றார் அத்துடன் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் மோதல்களின் போது பல அனுபவங்களைப்பெற்றுள்ள வரலாற்று ஆசிரியராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அவர் பல புத்தகங்களை எழுதியதுடன் 2012 இல் இலங்கை யுத்தம் தொடர்பில் பரந்தளவில் ஆராய்ந்த முன்னனி நபராக இருப்பதுடன் ‘டோட்டல் டிஸ்ரக்ஸன் ஒப் தமிழ் டைகர்’ எனும் புத்தகத்தை கொழும்பில் வெளியிட்டு வைத்தார்.ரிசார்ட் முண்டி ஒரு பிரித்தானியர் அவர் தற்போது இலங்கையில் வசிக்கின்றார். விஷேடமாக இந் நோக்கத்துக்காகவே அவர் லண்டன் சென்றிருந்தார்.
 
ரிசார்ட் முண்டி ஆவணப்படம் தொடர்பாக அறிமுகம் ஒன்றை செய்ததுடன் முன்னாள் பெண் புலி உறுப்பினரான ஜயவதனியையும் அவரது குடும்பத்தையும் பற்றி ஒரு விளக்கத்தையும் கொடுத்தார். இத்திட்டத்துக்காக பணிபுரிந்த இலங்கை படத் தயாரிப்பு குழுவின் இப்படத்தின் இயக்குணர் ஜீவன் சந்திமல், தயாரிப்பாளர் ருவன் குகுல விதான ஆகியோரின் அர்ப்பணிப்பை அவர் சுட்டிக்காட்டினார்.
 
ஜயவதனி இள வயதிலே ஒரு தீவிரவாத இராணுவமாக செயற்படுவதற்கு புலிகளினால் பல கொடுமைகளுடன் நிர்ப்பந்திக்கப்பட்டார் பின்னர் அவர்களாலே ஏமாற்றப்பட்டார். புலிகள் சுதந்திரத்துக்காக போராடுவதாகக் கூறினர் எனினும் அவர்களுக்குள்ளேயே பல கொலைகள் இடம் பெற்றன. இவை 2009 ஆம் ஆண்டுடன் முற்றுப்புள்ளிக்கு வந்துவிட்டது. அவரும் அவரது குடும்பமும் காப்பற்றப்பட்டமைக்கு ஜயவதனியின் குடும்பத்தார் என்றென்றும் இலங்கை இராணுவத்துக்கு நன்றிசெலுத்த கடமைப் பட்டுள்ளவர்களாக உள்ளனர். ஜயவதனி போன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் போரின் முடிவில் இராணுவத்தால் காப்பற்றப்பட்டு பராமரிக்கப்பட்டனர்.
 
டொக்டர் லயனல் சமரசிங்க இலங்கையின் கன்சரவடிவ் நன்பர்கள் சார்பாக நன்றியுரையை வழங்கினார் இதேவேளை படத்தயாரிப்புக் குழுவான ஜீவன் சந்திமால், ருவன் கெகுலவிதான உள்ளிட்டோர் பிரித்தானிய விஷா பெறுவதில் கொழும்பில் ஏற்பட்ட தாமதத்தினால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

No comments:

Post a Comment