Thursday, February 27, 2014
இலங்கை::அமெரிக்காவின் சூழ்ச்சி காரணமாகவே இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் இலங்கை இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் விரைவில் களையப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவும், ஐரோப்பாவும் இலங்கையை ஓரம் கட்ட முயற்சித்து வரும்
நிலையில், எதிர்க்கட்சிகள் அதற்கு ஆதரவு அளித்து வருவதாகத்
தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்தியா பாரியளவில்
ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அழுத்தங்கள் காரணமாகவே இந்திய மத்திய அரசாங்கம் தற்போது சற்று தளம்பிய நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவு பாதிக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவித்துள்ளார். இந்த நிலைமைக்கு அமெரிக்காவே காரணம் என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனீவா பிரச்சினைகளைக் காண்பித்து மக்களை ஏமாற்றி
வாக்குகளை சேகரிக்கும் அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என அவர்
குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் மிக முக்கியமான தருணங்களில்
நாட்டுக்காக குரல் கொடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment