Thursday, January 29, 2015

புலிகளுக்கு ஆதரவாக உயிரை காக்க முத்துக்குமார் 6–ம் ஆண்டு நினைவுநாள்: தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் கைது!

Thursday, January 29, 2015
சென்னை::புலிகளுக்கு ஆதரவாக உயிரை காக்க இந்திய அரசை வலியுறுத்தி சாஸ்திரி பவனில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் 6–ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
 
முத்துக்குமார் நினைவு நாளையொட்டி தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் இன்று ஊர்வலமாக சென்று சாஸ்திரி பவன் முன்பு முத்துக்குமாரின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
 
இதையடுத்து சாஸ்திரி பவன் முன்பு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இன்று காலையில் தமிழர் எழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, செயலாளர் குமரவேல் மற்றும் நிர்வாகிகள் சாஸ்திரி பவன் வாசலில் முத்துக்குமார் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் முத்துக்குமார் முக மூடியை அணிந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 15 பேரை கைது செய்தனர்.
 
போராட்டம் தொடர்பாக வேலுமணி கூறியதாவது:–
 
புலிகளுக்கு ஆதரவாக உயிர் நீத்த முத்துக்குமாரின் 6–வது நினைவு நாளான இன்று ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்தோம். ஆனால் ஊர்வலத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே தடையை மீறி முத்துக்குமார் முகமூடியை அணிந்து போராட்டம் நடத்தினோம். சாஸ்திரிபவன் முன்பு உள்ள ஹாடோஸ் சாலைக்கு முத்துக்குமார் பெயரை சூட்ட வேண்டும்.
 
புலிகளின் தமிழ் ஈழம் மலர இந்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். முத்துக்குமாருக்கு சிலை வைக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
முத்துக்குமார் நினைவு நாளையொட்டி கொளத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் நடிகர் சத்யராஜ், வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன், டைரக்டர்கள் கவுதமன், புகழேந்தி தங்கராஜ், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளர் கருநாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவிக்குமார் மற்றும் காஞ்சி அமுதன், உமாபதி, அருணா பாரதி அகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

2016ம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் இந்தியாவில்: ஐசிசி அறிவிப்பு!

Thursday, January 29, 2015
சென்னை::2016 ஆம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
 
துபாயில் இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
2016 மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை போட்டி நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
 
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் 20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை யை 2007ல் இந்தியாவும், 2009ல் பாகிஸ்தானும், 2010ல் மேற்கிந்திய தீவு அணியும், 2014ல் இலங்கையும் கைப்பற்றியுள்ளது.

அரசாங்கத்தின், 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ்,இடைக்கால வரவு செலவு திட்டம்!

Thursday, January 29, 2015
இலங்கை::அரசாங்கத்தின், 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், அரச சேவையாளர்களுக்கான வேதனம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க இடைக்கால வரவு செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, பெப்ரவரி மாதம் முதல் அரச சேவையாளர்களின் வேதனம் 5 ஆயிரம் ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எஞ்சிய 5 ஆயிரம் ரூபா வேதனம் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளர்.

இதனிடையே, தனியார் சேவையாளர்களுக்கான வேதனத்தை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரிக்குமாறு நிதியமைச்சர் கோரியுள்ளார்.

ஒய்வூதிய கொடுப்பனவாளர்களுக்கான கொடுப்பனவு ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்னை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
400  கிராம் பால் மா பொதியின் விலை 61 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

கோதுமை மா 12 ரூபா 50 சதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து அமுலாகும் வகையில், சீனியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது...
 
 
இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் 13 பொருட்களின் விலைகள் வகையில் குறைகின்றன.
சீனி- கிலோ 10 ரூபா குறைப்பு
பால் மா - குறைப்பு 61 ரூபா (400கிராம் பக்கெற் புதிய விலை - 325 ரூபா)
கோதுமை மா - கிலோ 12.50 ரூபா குறைப்பு
பாண் - 6 ரூபா குறைப்பு
பாசிப்பயறு - கிலோ 40 ரூபா குறைப்பு
நெத்தலி - கிலோ 15 ரூபா குறைப்பு
டின் மீன் - 60 ரூபா குறைப்பு
கொத்தமல்லி - கிலோ 60 ரூபாவால் குறைப்பு
மாசிக் கருவாடு - கிலோ 10 ரூபாவால் குறைப்பு
மிளகாய்த் தூள் - கிலோ 25 ரூபாவால் குறைப்பு

சுற்றுலா வீசா மூலம் நாட்டிற்கு வந்த குமார் குணரத்தினத்திடம் விளக்கம் கோரல்!

Thursday, January 29, 2015
இலங்கை::சுற்றுலா வீசா மூலம் நாட்டிற்கு வந்து, அரசியல் நடவடிக்கையில் ஈடுப்படுவது எவ்வாறு என, முன்னணி சோஷலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னத்திடம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விளக்கம் கோரியுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்டிருந்த அறிவித்தலுக்கு அமைய அவர் நேற்று அங்கு சென்றிருந்தார்.

இதன்போது இந்த விளக்கம் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், விசாரணைக்காக மீண்டும் வருகை தருமாறு தமக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டதாக முன்னணி சோஷலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் ப.சிதம்பரம் புறக்கணிப்பு - தனிக்கட்சி தொடங்க தீவிர ஆலோசனை?

Thursday, January 29, 2015
சென்னை::காங்கிரஸ் கட்சியிலிருந்து புறக்கணிக்கப்படுவதால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனிக்கட்சி தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமாக ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்கியுள்ள நிலையில், ப.சிதம்பரமும் காங்கிரஸில் புறக்கணிக்கப்படுவதால் தனது ஆதரவாளர்களுடன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஞானதேசிகன் விலக்கப்பட்ட நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக ப.சிதம்பரம் பெயரே அடிபட்டது. ஆனால் திடீரென ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவராக்கப்பட்டார்.

இந்த நிலயில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், காமராஜர் திட்டங்களை மட்டும் பேசி பயனில்லை. புதிய திட்டத்துடன் மக்களை சந்திக்க வேண்டும் என்றார். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கார்த்தி சிதம்பரத்தின் பேச்சை இளங்கோவன் கடுமையாக கண்டித்துப் பேசினார்.

மேலும் மேலிடத்தில் இளங்கோவன் பற்றி சிதம்பரம் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் புகாரை மேலிடம் கண்டுகொள்ளவில்லை. மாறாக சிதம்பரத்தை புறக்கணிக்க ஆரம்பித்தது. இதனால், சிதம்பரத்துக்கும், இளங்கோவனுக்கும் மோதல் அதிகரித்தது.

இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் கடந்த வாரம் கார்த்தி சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் போது, புதிய கட்சி அல்லது பழைய அமைப்பான ஜனநாயக பேரவையை மீண்டும் ஆரம்பிப்பது நல்லது என்று பேசப்பட்டுள்ளது.

இது குறித்து சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது மேலிடத்துக்கும் கூறப்பட்டுள்ளது.
 
எனவே எந்த நேரத்திலும் ப.சிதம்பரம் தனிக்கட்சி தொடங்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருட காலமாக குறைக்க நடவடிக்கை: ஜனாதிபதி மைத்திரிபால!

Thursday, January 29, 2015
இலங்கை::இலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஆறு வருட காலத்திலிருந்து ஐந்து வருடமாக குறைப்பதற்கு அரசியலமைப்பு நிபுணத்துவக் குழு மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் அரசியலமைப்புக்கு புதிய திருத்தங்களை முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
 
உண்மையிலேயே ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 04 வருடகாலமாக குறைப்பதையே நான் விரும்புகிறேன்' எனினும் தற்போது அரசமைப்பு யாப்பு சீர்திருத்த பதவியிலிருப்பவர்கள் எனது விருப்பதுடன் இணங்கவில்லை அதனால் தற்போது பொது சீர்திருத்தமாக ஐந்து வருட காலமாக குறைப்பதில் சட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பொதுமக்கள் மத்தியில் தெரிவித்தார்.

தற்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் குறைக்கப்படுமிடத்து மேற்கொள்ள வேண்டிய சட்டதிட்டங்கள் மற்றும் தேவையான யாப்பு சீர்திருத்தங்கள் அரசியலமைப்பு வல்லுனர்கள் உள்ளடக்கிய குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
பொலன்னறுவை தோப்பாவெவ விளையாட்டு மைத்தானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
 
தென்னாப்பிரிக்காவில் விடிவெள்ளியாக உதித்து அந்த மண்ணின் மைந்தர்களான கருப்பினத்தவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஒப்பற்ற தலைவர் நெல்சன் மண்டேலா (சக்ஙீசூச்ஙூ ஙஹஙூக்ஷக்ஙீஹ) தனது நான்கு வருட ஆட்சிக் காலத்தில் நாட்டுக்கு தேவையான பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். அதன் பின்னர் தன் கொள்கைக்காக 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் ஆவார் என ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அத்துடன் மண்டேலாவின் கருத்துக்கு எதிராக நின்றவர்களைக்கூட அவர் பிரிவினை பாராது நாட்டின் அபிவிருத்தி ஒத்துழைப்பில் அவர்களுடன் ஒன்றாக செயற்பட்டவர். அதே மாதிரி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மற்றும் நடவடிக்கைகளில் என்னை எதிர்த்து நின்றவர்களை நான் பிரிவினை பாராது நாட்டின் அபிவிருத்தியில் ஒன்றிணைத்து செயற்படுவேன் என்றார்.
 
அத்துடன் அரசியல் சார்ந்தவர்களின் செல்வாக்கிலோ, வேறு யாராவது பிரமுகர்களின் செல்வாக்கிலோ தகுதியடிப்படையின்றி எவருக்கும் வேலை வழங்கப்பட மாட்டாது எனவும் வலியுறுத்தினார். அனைவருக்கு அவரவர் தகுதி ,திறமை, நேர்மை அடிப்படையிலே தொழில்கள் வழங்கப்படும் எனவும் அவர் உறுதி செய்துள்ளார்.
 
நாட்டில் முன்னர் காணப்பட்ட ஆட்சி முறையானது தேர்தல் காலத்தின் போது காணப்பட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் மீறி செயற்பட்டது. பலவருட காலமாக தேர்தலில் வாக்களிப்புக்களில் பின்பற்றப்பட்டு வந்த நேர்மை மற்றும் கொள்கைகள் கடந்த தேர்தல் காலத்தில் மீறப்பட்டது. அத்துடன் பொதுச் சேவைகளில் ஈடுபட்டு வருபவர்கள் கடந்த சில காலமாக சரிவு நிலையை எதிர்நோக்கி வந்தனர்.
 
அத்துடன் அரசாங்க சேவையில் ஈடுபடுவர்களை எவ்வாறு ஒரு அரசியல் கடசியானது தனது தேர்தல் பிரசாரத்திற்காகவும் தேர்தல் வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் பயன்படுத்தி வந்தார்கள் என்று கடந்த தேர்தலில் நாம் காணக்கூடியதாக இருந்தது. இது எவராலும் எதிர்பார்க்க முடியாத சூழ்நிலையாகும். இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசியல் கட்சியும் இவ்வாறானதொரு அரசியல் நோக்கத்திற்காக அரசாங்க ஊழியர்களை பயன்படுத்தியது இல்லை.
 
இருந்த போதிலும் கடந்த முறை எமது நாட்டில் இடம்பெற்ற தேர்தலானது மிகவும் சாதகமான நிலையிலும் சூழ்நிலையிலும் இடம்பெற்றதொரு வெற்றிகரமான தேர்தல் முறையாகும் என மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.

நடுக்கடலில் தத்தளித்த இலங்கை அகதிகளை கைது செய்தது சரிதான்: ஆஸ்திரேலிய கோர்ட்டு தீர்ப்பு!

Thursday, January 29, 2015
சிட்னி::இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு 50 குழந்தைகள் உள்ளிட்ட 157 தமிழர்கள் அகதிகளாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்றனர். அவர்கள் சென்ற படகு, ஆஸ்திரேலியா அருகே நடுக்கடலில் பழுதாகி, அவர்கள் தவித்தனர். அவர்கள் பின்னர் ஆஸ்திரேலிய அரசால் கைது செய்யப்பட்டனர்.

அடைக்கலம் கேட்டு ஆஸ்திரேலியாவுக்கு வருவோரை அனுமதிப்பதில்லை என்று அந்த நாட்டு அரசு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருவதே இதற்கு காரணம் ஆகும். இந்த கைது நடவடிக்கைக்கு எதிராகவும், கைது செய்ததற்கு நிவாரணம் வழங்கக்கோரியும் ஆஸ்திரேலிய ஐகோர்ட்டில் இலங்கை தமிழர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அடைக்கலம் கேட்டு வந்த தமிழ் அகதிகளை, ஆஸ்திரேலிய கடல் எல்லைக்கு அப்பால் ஆஸ்திரேலிய அரசு கைது செய்தது சட்டப்படி சரியானதுதான் என தீர்ப்பு அளித்தது. எனவே அவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது எனவும் அந்த கோர்ட்டு மறுத்து விட்டது. இலங்கை தமிழர்கள் சார்பில் வழக்கை நடத்திய வக்கீல்கள், இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறினர். இதுபற்றி அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இந்த தீர்ப்பு ஏகமனதானது அல்ல. இந்த வழக்கு சர்வதேச கவனத்தை ஈர்த்தது” என கூறினர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் நேற்று பாதுகாப்பு அமைச்சுக்கு சமூகமளித்தார்!

Thursday, January 29, 2015
இலங்கை::முப்படைகளின் கட்டளைத் தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் நேற்று (ஜன.28) பாதுகாப்பு அமைச்சுக்கு சமூகமளித்தார். பாதுகாப்புச் ராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் அமைச்சில் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.  
இங்கு உரையாற்றிய அதிமேதகு ஜானாதிபதி, தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கடந்த இரண்டு வாரங்களாக அதிக வேலைப்பழு காரணமாக பாதுகாப்பு அமைச்சிற்கு சமூகமளிக்க முடியவில்லை எனவும் இன்று விஜயமளிக்க கிடைத்தமைக்காக தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் தேசிய பாதுகாப்பை பேண வேண்டிய தேவை காணப்படுவதுடன் இதற்காக பாதுகாப்பு அமைச்சினால் பாரியளவிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், நாட்டில் ஜனநாயகத்தை நிலை நாட்டி நல்லாட்சியை கொண்டு செல்வதற்க்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு ஊழியர்களின் ஒத்துழைப்பை எதிர் பார்ப்பதாகவும், தாய் நாட்டுக்காக அனைவரும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிஎம்யுடி. பஸ்நாயக, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பதவி மற்றும் பதக்கங்கள் மீள வளங்கப்பட்டன!

Thursday, January 29, 2015
இலங்கை::அரசியலமைப்பின் 34வது சரத்துக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். நேற்றைய தினம் இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சரத் பொன்சேகா இழந்திருந்த அனைத்து வரப்பிரசாதங்களும் எத்தகைய சட்டரீதியான தடைகளுமின்றி பெற்றுக்கொள்ள இதன் மூலம் வழிவகுக்கப்பட்டுள்ளது.
 
பாதுகாப்பு அமைச்சு, ஜெனரல் சரத் பொன்சேகா 2010 ஆம் ஆண்டு இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதற்கு முன் பறிக்கப்பட்ட நான்கு நட்சத்திர ஜெனரல் தரத்தை பெறவும், அவருடைய பதக்கங்கள், ஓய்வூதியம் மற்றும் அனைத்து இராணுவ சலுகைகளை பெற்றுக் கொள்வதற்கும் தகுதியுடைவர் என்பதை உறுதி செய்துள்ளது.
மேலும் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களின் சேவைக் காலத்தின் போது பெற்றுக் கொண்ட ராண விக்கிரம பதக்கம் (ஆர்டபில்யூபி), ராண சூர பதக்கம் (எஸ்.பி), விஸிஸ்டா சேவா விபூஷனய ( விஎஸ்வி), உத்தம சேவா பதக்கம (யூ.எஸ்.பி.) போன்றவற்றை மீண்டும் அணிய முடியும் எனவும் அணுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
இவர் தனது பிஎஸ்சீ பட்டத்தினை இராணுவ கல்லூரியில் பெற்றுக் கொண்டதோடு உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் தனது தொழில் சார் பாடநெரிகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார.
இவர் 1970 பெப்ரவரி 05 இல் இராணுவத்தில் இணைந்து கொண்டு இலங்கை 1வது சிங்க படைப்பிரிவில் கடமையாற்றும் காலகட்டத்தில் 2/லெப்டினன்ட் ஆக நியமிக்ப்பட்டார் அத்துடன் அவர் 05.02.1973 அன்று லெப்டினன்ட் ஆக பதவி உயர்வு பெற்றார் அத்தோடு அதிகாரிகளுக்கான கமாண்டோ பாடநெறியை 1973 ஆம் ஆண்டு இந்தியாவில் வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் இலங்கை இராணுவக் கல்லூரியில் இணைந்து கொண்டு மேலதிக பயிற்சிகளை தியத்தலாவ இராணுவ பயிற்சிக் கல்லூரியில் மேற் கொண்டார்.
இதற்கிணங்க முப்படைகளின் முன்னாள் பிரதானியான சரத் பொன்சேகா அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் மன்னிப்பளிக்கப் பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். சரத் பொன்சேகா வின் ஜெனரல் பதவி அவருக்கான வாக்குரிமை அனைத்தும் இதனூடாக மீண்டும் உரித்தாகிறது. அத்துடன் இனி சரத் பொன்சேகா முன்னாள் ஜெனரல் என அழைக்கப்படுவார் என்றும் அவருக்கு வாக்குரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை வெற்றிகொள்வதில் முக்கிய பங்காற்றியிருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, இறுதி யுத்தத்தின் போது இராணுவத் தளபதியாகக் கடமையாற்றியிருந்தார்.

Tuesday, January 27, 2015

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்ற முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா: டெல்லியில் நடந்த கோலாகல குடியரசு தின விழா!

Tuesday, January 27, 2015
புதுடெல்லி::இந்திய ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையிலும், நமது பாரம்பரியம் கலாச் சாரத்தை விளக்கும் வகை யில் நடைபெற்ற சுந்திர  தின அணிவகுப்பை கண்டு வியந்தார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. நாட்டின் 66வது குடியரசு தினவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக அமெரிக்க  அதிபர் ஒபாமா அழைக்கப்பட்டிருந்தார். டெல்லியில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நேற்று காலை 9.20 மணிக்கு தொடங்கியது.
 
இந்தியா கேட்  அருகேயுள்ள அமர்ஜவான் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர்வளையம் வைத்து  மரியாதை செலுத்தினர். விழா மேடைக்கு ராஜஸ்தான் டர்பன் அணிந்து பிரதமர் மோடி வந்தார். அமெரிக்க அதிபர் ஒபாமா, மிச்செல் ஆகியோர் பீஸ்ட்  காரில் விழா மேடைக்கு வந்தனர். அப்போது மழை பெய்ததால், ஒபாமாவுக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டது. திறந்தவெளி விழா மேடை யில்  அமர்ந்திருந்த வி.ஐ.பி.க் களுக்கு சிறிது நேரம் குடை பிடிக்கப்பட்டது.
 
வழக்கமாக குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள், ஜனாதிபதி காரில் உடன் வருவர். அமெரிக்க அதிபர் பீஸ்ட் காரில் வர  வேண்டும் என முடிவு செய்யப்பட்டாதல் அவர் ஜனாதிபதிக்கு முன்பாகவே விழா மேடைக்கு வந்தார். குதிரை வீரர்கள் அணிவகுப்புடன்  விழாமேடைக்கு காலை 9.30 மணிக்கு வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ராணுவ பேண்ட்  தேசிய கீதம் இசைக்கும்போது 21 பீரங்கி குண்டுகள் முழங்கின. அதன்பின்னர் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு அசோக சக்ரா  உள்ளிட்ட விருதுகளை பிரணாப் முகர்ஜி வழங்கினார். அதன்பின் ராணுவ அணிவகுப்புகள் தொடங்கின.

தலையாட்டி ரசித்தார் ஒபாமா: முப்படைகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், பேண்ட் இசைக் குழுவுடன் அணிவகுத்து வந்தனர். ராணுவ இசைக்குழுவின்  ‘லெப்ட், ரைட், லெப்ட்’ டிரம் பீட்களை தலையசைத்தபடி நீண்ட நேரம் ரசித்துக் கொண்டிருந்தார் ஒபாமா. சுவி¢ங்கம் மென்றபடி ராணுவ  அணிவகுப்புகளை ரசித்து பார்த்தார் ஒபாமா. முப்படையை சேர்ந்த பெண்களின் தனி அணி வகுப்புகளும் முதல் முறையாக இந்த குடியரசு  தினவிழாவில் இடம் பெற்றன. ராணுவ டேங்குகள், ஏவுகணைகளும் அணி வகுத்து வந்தன.
 
துணை ராணுவ படையினர், டெல்லி போலீசார், என்.சி.சி  மாணவர்களும் வீர நடைபோட்டு வந்தனர். ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சார ஊர்திகளும் அணி வகுப்பில் தொடர்ந்து வந்தன. புதிய மாநிலமான  தெலங்கானா சார்பிலும் கலாச்சார ஊர்தி அணிவகுப்பில் கலந்து கொண்டது. அதில் வந்தவர்கள் கலாச்சார நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.  பள்ளிச் சிறுவர், சிறுமியர்கள் நடனம் ஆடியபோது மிச்சேல் ஒபாமா கைதட்டி பாராட்டினார்.
 
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா, ஜன் தன் யோஜனா, பெண் குழந்தைகளை காப்போம் போன்ற திட்டங்களுக்கும் அணிவகுப்பில்  முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் பைக் சாகசங்கள் அதிபர் ஒபாமாவை வெகுவாக கவர்ந்தன. அவர்களை நோக்கி  பெருவிரலை தூக்கி காட்டி உற்சாகப்படுத்தினார் ஒபாமா. அணிவகுப்பின் இறுதியில் விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது.சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சிகளை அதிபர் ஒபாமா பார்வையிட்டார். வெளிநாட்டு நிகழ்ச்சியில், அதுவும் திறந்த  வெளியில் அமெரிக்க அதிபருக்கு நீண்ட நேரம் பாதுகாப்பு அளித்தது அவரின் சீக்ரெட் சர்வீஸ் படையினருக்கு புது அனுபவமாக இருந்தது.  அணிவகுப்பு நடந்த இடத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்து 7 அடுக்கு பாதுகாப்பில் 45 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர்  ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மோடி-ஒபாமா நெருக்கம் அதிகரிப்பு
 
குடியரசு தினவிழா அணிவகுப்பிலும் மோடி-ஒபாமா இடையேயான நெருக்கம் மேலும் அதிகரித்தது. விழா மேடைக்கு வந்த ஒபாமாவிடம், மிக நெருங்கிய நண்பர் போல் அவரது வலது கையை பிடித்தபடி கை குலுக்கினார் மோடி. மேடையில் இருவரும் அருகருகே அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அணிவகுப்பு பற்றி ஒபாமாவுக்கு மோடி விளக்கி கொண்டிருந்தார்.

1 குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா. 2 முறை இந்தியாவுக்கு வந்த அமெரிக்க அதிபரும் இவரே.

2 பாதுகாப்பு காரணங்களுக்காக, வெளிநாட்டில் திறந்தவெளியில் 45 நிமிடங்களுக்கு மேல் எந்த நிகழ்ச்சியிலும் அமெரிக்க அதிபர்கள் பங்கேற்க  மாட்டார்கள். முதல் முறையாக நேற்றுதான் அதிபர் ஒபாமா இரண்டரை மணி நேர குடியரசு தின விழாவில் பங்கேற்றார்.

3  குடியரசு தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்பவர்கள் ஜனாதிபதியுடன் சேர்ந்து வருவது வழக்கம். முதல் முறையாக அதிபர்  ஒபாமா, அவரது மனைவி மிச்செல் இருவரும் அவர்களது பாதுகாப்பு வாகனமான பீஸ்ட்டில் தனியாக வந்தனர்.

4 பெண்களுக்கு அதிகாரமளித்தல்‘ என்பதே இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பின் மையக்கருத்தாகும். எனவே, இந்திய ராணுவத்தில் பெண்களின்  சக்தியை வெளிப்படுத்தும் வகையில், முதல் முறையாக பெண்களின் முப்படை வீரர்களின் அணிவகுப்புக்கு 154 பெண் அதிகாரிகள் தலைமை ஏற்று  நடத்தி வந்தனர். 25 வயதாகும் கேப்டன் திவ்யா அஜித் குமார் தலைமையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது.

5 புதிய மாநிலமாக உருவான தெலங்கானா முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது.

6 வெளிநாட்டிலிருந்து இந்திய கடற்படைக்காக வாங்கப்பட்ட நீண்ட உளவுப்பணி மற்றும் நீர்மூழ்கி கப்பலை தாக்கும் விமானமான பி-
8ஐ, நீண்ட தூர  இலக்கை தாக்கக் கூடிய மிக்-29கே போர் விமானம் ஆகியவை முதல் முறையாக அணிவகுப்பில் இடம் பெற்றன.

இலங்கை, இந்திய அரச தலைவர்களின் பரஸ்பர விஜயங்கள் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மேலும் பலப்படும்: வை.கே.சிங்ஹா!

Tuesday, January 27, 2015
இலங்கை::இலங்கை, இந்திய அரச தலைவர்களின் பரஸ்பர விஜயங்கள் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மேலும் பலப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். இந்த விஜயம் அவருடைய முதலாவது வெளிநாட்டு விஜயமாக அமையவுள்ளது.
 
அதேநேரம், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கூடியவிரைவில் இலங்கை வரவுள்ளார். இந்த அரச தலைவர்களின் விஜயங்களின் போது எடுக்கப்படக்கூடிய தீர்மானங்கள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலப்படும் என்றும் அவர் கூறினார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்திருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
 
இந்தியாவின் 66வது குடியரசு தினம் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
 
இலங்கையில் நடைபெற்று முடிந்த தேர்தலின் மூலம் ஜனநாயகம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமைதியான முறையில் நடத்தப்பட்ட தேர்தலுக்காக இலங்கை மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு இந்தியா தயாராக இருக்கின்றது.
 
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கடந்த வருடங்களில் மேலும் பலப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வர்த்தகம் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்திய முதலீடுகள் அதிகரித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலமடையும்.
 
வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் அபிவிருத்தியில் இந்தியா உதவிகளை வழங்கியுள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்டவர் களுக்கும் இந்தியா உதவிகளை வழங்கியுள்ளது.
 
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வெறுமனே பூகோளரீதியான தொடர்புகள் மாத்திரம் இல்லை. கலாசார, மதரீதியான நெருக்கங்கள் காணப்படுகின்றன.
 
குடும்ப ரீதியான தொடர்புகள் இரு நாட்டு மக்களுக்கு மிடையில் உள்ளன. இந்த உறவுகள் மற்றும் தொடர்புகள் மேலும் பலப்படும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

இன்னும் மூன்று மாதங்களில் மகிந்த ராஜபக்ஷ யுகம் மீண்டும் ஏற்படுத்தப்படும்: முன்னாள் பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம!

Tuesday, January 27, 2015
இலங்கை::இன்னும் மூன்று மாதங்களில் மகிந்த ராஜபக்ஷ யுகம் மீண்டும் ஏற்படுத்தப்படும் என முன்னாள் பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
 
வந்துரம்ப பிரதேசத்தில் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார மேடை தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரை பொலிஸ் நிலையத்தில் இருந்து பலவந்தமாக அழைத்துச் சென்றதாக முன்னாள் பிரதியமைச்சர் முத்துஹெட்டிகம மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது சம்பந்தமான அவருக்கு எதிரான வழக்கு இன்று பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றதுடன் விசாரணைகள் அடுத்த மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 
முன்னாள் பிரதியமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது அவருக்கு எதிரான சாட்சியங்கள் உட்பட ஏனைய அறிக்கைகளை பொலிஸார் சரியான முறையில் நீதிமன்றத்தில் சமர்பிக்காத காரணத்தில் நீதவான் சந்திம எதிரிமான்ன வழக்கை ஒத்திவைத்தார். இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட முத்துஹெட்டிகம, தான் செய்யாத தவறுக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறினார்.
 
எவ்வாறாயினும் நீதிமன்றத்தில் நியாயம் நிறைவேற்றப்படும் எனவும் தான் எதற்கும் கவலைப்படும் நபர் அல்ல எனவும் இன்னும் மூன்று மாதங்களில் மகிந்த ராஜபக்ஷ யுகம் மீண்டும் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Monday, January 26, 2015

புலிகள் விவகாரத்தை சரியாக கையாளாவிடின் பயங்கரவாதம் தலைதூக்கும்: சரத் பொன்சேகா!

Monday, January 26, 2015
மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும்  புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது. நிலைமையை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் அதன் கொடூரத்தை மீண்டும் தொடங்க முடியும் என்று முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியுமென நான் நினைக்கின்றேன். எவ்வாறாயினும், யுத்தம் உச்ச கட்டத்திலிருந்ததை விட இப்போது மிக குறைவாகவே அங்கு இராணுவம் உள்ளது. தேவையேற்படின் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வைத்துக்கொண்டு இராணுவ குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

டெய்லிமிரருக்கு அவர் வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே மேற்கண்டவாறு கூறினார். அந்த பேட்டியில் அவர் வழங்கிய தகவல்களின் சில பின்வருமாறு,

'நான் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை என்பதால் என்னால் நேரடியாக அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஈடுபடமுடியாது. எனினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான பல கட்சித் தலைவர்கள் உறுப்பினராகவுள்ள தேசிய நிறைவேற்று அதிகார பேரவையில் அங்கத்தவராக உள்ளேன். விரைவில் வண.சோபித தேரரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் இந்த பேரவையில் சேரவுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் வாக்களிக்க செல்பவர்களை தடுக்கவென தேர்தலின்போது, மேலதிக படையினர் நகர்த்தப்படவில்லை.

ஆனால், வாக்களிப்பை தடுப்பதற்காக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. தேர்தலுக்கு முன்னர், வடக்கு பாதுகாப்பு படைகளின் தளபதியை இடமாற்றம் செய்தனர். சில புலனாய்வு அதிகாரிகளுடன் சேர்ந்து திட்டங்களை வகுத்தனர். எம்மிடம் இது தொடர்பான விவரங்கள் உள்ளன. விரைவில் இவற்றை விசாரணைகளின் மூலம் அம்பலப்படுத்துவேன்.

சில மாதங்களுக்கு முன்னர் சில  புலிகள் கைது செய்யப்பட்டனர். முன்னிருந்த அரசாங்கத்தின் அக்கறையின்மையே இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணம். நான் இராணுவத்தை விட்டு இளைப்பாறியதும் அவர்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதன்மூலம் தப்பியிருந்த புலி உறுப்பினர்களை பிடித்திருக்கலாம். ஆனால், முன்னைய அரசாங்கம் இதை செய்யவில்லை.

உண்மையில் முன்னைய அரசாங்கம், கே.பி, கருணா அம்மான், பிள்ளையான், எமில் காந்தன் ஆகிய புலித் தலைவர்களுக்கு செல்லம் கொடுத்திருந்தனர்.

இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தவறினர். இவர்களை அரசாங்கம் தேவையான போது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்தினர். வடக்கு, கிழக்கு மக்களை பயமுறுத்தவும் பயன்டுத்தினர். புலிகளுடன் சேர்ந்திருந்த புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்ளவும் இவர்களை தயக்கமின்றி பயன்படுத்தினர்.

இவ்வாறாக பயங்கரவாதிகளுடனும் அவர்களது ஆதரவாளர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தது முன்;னைய அரசாங்கமேயன்றி நாம் அல்ல. நாம் இருக்கும்போது பயங்கரவாதிகள் ஒரு போதும் திரும்பிவரமாட்டார்கள்.

மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது. நிலைமை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் அதன் கொடூரத்தை மீண்டும் தொடங்க முடியும். எனவே, அரசியல் தலைவர்களின் செயற்பாட்டிலேயே இந்த கேள்விக்கு பதிலுண்டு.

வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியுமென நான் நினைக்கின்றேன். எவ்வாறாயினும், யுத்தம் உச்ச கட்டத்திலிருந்ததை விட இப்போது மிக குறைவாகவே அங்கு இராணுவம் உள்ளது.

தேவையேற்படின் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வைத்துக்கொண்டு இராணுவ குறைப்பை மேற்கொள்ள வேண்டும். ஆனால், முன்னைய அரசாங்கம் அதை சரியாக திட்டமிடவில்லை. சில இராணுவ தலைமைகள் பெரிதாக கதைப்பினும் ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை. இதுதான் இங்குள்ள பிரச்சினை.
அவர்களுக்கு கண்ட கண்ட வேலைகளை கொடுத்து அவர்களின் நற்பெயரை களங்கப்படுத்த கூடாது. படைவீரரை கூலியாட்களாக பயன்படுத்தகூடாது. படைவீரன் கூலியாள் அல்ல. இளைய ஆண்களும் பெண்களும் நாட்டுக்காக தியாகம் செய்யவே இராணுவத்தில் இணைகின்றார்கள். முன்னாள் செயலாளர்களுக்கு இது விளங்கவில்லை.

தேசத்துக்கு சேவையாக இராணுவம் இவ்வாறான வேலைகளில் ஈடுபட வேண்டுமென அவர் ஒரு டீ.வி நிகழ்ச்சியில் கூறினார். அவர் நேர்மையாக இதனை கூறியிருப்பின் அவராகவே முன்வந்து கழிவு வாய்க்கால்கள் துப்புரவு செய்து முன்னுதாரணமாக நடந்திருக்க வேண்டும்.

இந்த கூற்றுக்கள் அவர் மனநிலையை பிரதிபலிக்கின்றன. அவர் இராணுவ கடமையில் இருந்த போது, ஒருபோதும் சந்தோஷமாக இருக்கவில்லை. அவருக்கு இராணுவத்திலிருந்தது துக்கமாக இருந்தது. நாம் அவரை வாய்க்கால்களை சுத்தம் செய்ய அனுமதிக்கவில்லை. சுத்தம் செய்ய அனுமதிக்கவில்லை. இதனால்தான் அவர் இராணுவத்திலிருந்து விலகிச்சென்றார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் தீப்பந்த சின்னத்தில் தனித்து போட்டியிடுவோம். எமது கட்சியின் கொள்கை ஏனையவற்றிலிருந்து சற்று வித்தியாசமானது. ஒரு வித்தியாசமான அரசியல் அபிலாஷையை நாம் கொண்டுள்ளோம். நாம் போட்டியிட்ட பின்னர் ஓர் அரசாங்கத்தை அமைக்க ஆதரவு வழங்குவது பற்றி யோசிப்போம்.

எமது சிந்தனையோடு ஒத்துழைத்து போகுமாயின் நாம் அதனுடன் இணைவோம். இல்லையேல் எதிர்க்கட்சியில் அமர்வோம்' என்று சரத் பொன்சேகா மேலும் கூறினார்.

Sunday, January 25, 2015

ஜப்பானிய பணயக் கைதிகளில் ஒருவர் கொலை வீடியோ உண்மையானது: பிரதமர் அபே!

Sunday, January 25, 2015
ஜப்பானிய பணயக் கைதிகளில் ஒருவர் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளால் கொல்லப்பட்டுள்ளதாகக் காட்டுகின்ற வீடியோ பதிவு உண்மையானது என்று நம்புவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபே கூறியுள்ளார்
 
ஜப்பானின் தேசியத் தொலைக்காட்சியில் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசிய ஷின்ஸோ அபே, ஹருணா யக்குவாவின் கொலையை பார்த்து பேச்சிழந்து போனதாகக் கூறியுள்ளார்.
 
மற்றைய பணயக் கைதியான கென்ஜி கோட்டோவை விடுவித்துக் கொள்வதே தங்களின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்றும் ஜப்பானின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
 
ஜோர்தானின் சிறை வைக்கப்பட்டுள்ள இராக்கிய பெண் ஒருவரை விடுவித்தால், ஜப்பானிய பணயக் கைதியான கோட்டோவை விடுவிப்பதாக ஐஎஸ் ஆயுததாரிகள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் போக்குவரத்து பொலீசார் சுட்டதில் வாலிபர் காயம்!!

Sunday, January 25, 2015
புத்தளம்   போக்குவரர்த்து போலீசாருக்கும், வாலிபர் ஒருவருக்குமிடையில் நடந்த வாய்த்தர்க்கத்தை அடுத்து  போக்குவரத்து பொலீசார் துரத்திச்சென்று  சுட்டதில்  வாலிபர் ஒருவர் காயமடைந்த நிலையில்
 
புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தள வைத்தியசாலை வட்டாரங்கள்  புத்தளம் டுடேக்கு தெரிவித்தன.
 
இதே வேளை தற்போது புத்தளம் தள வைத்திசாலை பெரும் பரப்புக்குள்ளாகி  இருப்பதாக அங்குள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் புத்தளம் டுடேக்கு தெரிவித்தார்.  காயமடைந்தவரின் தந்தை புத்தளம் தள வைத்தியசாலையின்  கண் சிகிச்சைப் பிரிவின்  ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதுப் பற்றிய மேலதிக தகவல்கள் சற்று நேரத்தில் வெளிவரும்

அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக பைசர் அச்சுறுத்துகிறாராம்!!

Sunday, January 25, 2015
சிறிலங்கன் விமான சேவையின் புதிய தலைவர் நியமிப்பு தொடர்பில், அமைச்சர் பைசர் முஸ்தபா அரசாங்கத்தில் இருந்து விலகவிருப்பதாக அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. சிறிலங்கன் விமான சேவைக்கான புதிய தலைவர் அஜித் டயஸ் நியமிக்கப்பட்டார்.பிரதமர் ரணில்விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.


எனினும் இது குறித்து இறுதி நேரத்திலேயே தமக்கு அறிவிக்கப்பட்டதாவும், விமான சேவைகளுக்கான அமைச்சராக இருந்த போதும் தமக்கு தெரியாமல் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட 53 வாகனங்கள் குறித்து லலித் வீரதுங்க விளக்கம்

Sunday, January 25, 2015
புறக்கோட்டை ஸ்ரீஜயவர்த்தனபுர பல்பொருள் கூட்டுறவு நிலையத்திற்கு சொந்தமான இடத்திலிருந்து மீட்கப்பட்ட வாகனங்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டவை என முன்னாள் ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த வௌ்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சேதமடைந்த புல்லட் புரூப் சொகுசு கார்கள் உட்பட 53 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
 
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலில் வீரதுங்க இது குறித்து கருத்து வெளியிடுகையில்,
 
அந்தப் பகுதியில் இருந்த வாகனங்கள் அதி உயர் பாதுகாப்புடையவை என்பதால் சந்தைகளில் விற்கவோ அல்லது ஏலத்தில் விடவோ அனுமதிக்கப்படவில்லை என லலித் வீரதுங்க சுட்டிக்காட்டினார்.
 
குறித்த வாகனங்களை நிறுத்தி வைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஒப்பந்த அடிப்படையில் அவற்றை குறித்த இடத்தில் நிறுத்தி வைத்திருந்ததாகவும், அந்த அனைத்து வாகனங்களிலும் பதிவுகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

22ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுமி மரணம்!!

Sunday, January 25, 2015
வெள்ளவத்தையிலுள்ள ஹவேலொக் சிடி வீட்டுத்தொகுதியிலுள்ள 22ஆவது மாடியிலுள்ள வீடொன்றிலிருந்து 4 வயதான பெண் சிறுமியொருவர் கீழே விழுந்து மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, படுகாயமடைந்த இந்தச் சிறுமி கொழும்பு போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் சிகிட்சைகள் பலன் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
முகம்மட் நௌசாத் மற்றும் பாத்திமா சபீகா ஆகியோரின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 
 

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்; பவானி சிங் திடீர் ராஜினாமா!!

Sunday, January 25, 2015
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
 
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை முடிந்ததும் அனைவரும் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினர். ஆனால் பவானி சிங் மட்டும் வெளியே வராமல் நீண்ட நேரம் தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். திமுக வழக்கறிஞர் சரவணனுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி குணசீலனை அழைத்து தனது ராஜினாமா கடிதத்தை பவானிசிங் அளித் துள்ளார்.
 
அதில், ''தொடர் வேலைப்பளு காரணமாக உடல்ரீதியாக நான் மிக‌வும் பாதிக்கப்பட்டுள்ளேன். சமீபகாலமாக தேவையில்லாத‌ மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் என்னால் தொடர்ந்து அரசு வழக்கறிஞராக நீடிக்க முடியாது. எனவே அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து இன்றுமுதல் விடுபடுகிறேன்''என குறிப்பிட் டுள்ளார்.
 
இதுதொடர்பாக சென்னையில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் ஜெயலலிதா வழக்கின் பொறுப் பாளரான வழக்கறிஞர் செந்திலிடமும் ஐஜி குணசீலன் தகவல் தெரி வித்தார்.
''வேலைப்பளு காரணமாக உடல்ரீதியாக மிக‌வும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னால் தொடர்ந்து அரசு வழக்கறிஞராக நீடிக்க முடியாது'' என குறிப்பிட்டுள்ளார்
 
ஜெயலலிதாவின் வழக்கறிஞருடன் ரகசிய பேச்சு
 
ராஜினாமா தகவலால் அதிர்ச்சி அடைந்த செந்தில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் தனியாக பேசிக் கொண்டு இருந்தார்.
 
திமுக தரப்பு நெருக்கடிகளை பொறுக்க முடியவில்லை. சுப்பிரமணியன் சுவாமியும் டிராபிக் ராமசாமியும் என்னை நீக்க முயற்சிக்கிறார்கள். சமீபகாலமாக எனக்கு உடல்நிலையும் சரியில்லை. இவ்வளவு நெருக்கடியுடன் என்னால் அரசு வழக்கறிஞராக‌ தொடர‌ முடியாது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எனக்கு ஒரு நாளைக்கு ரூ.65 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்குகிறது. டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர்கள் என்றால் ரூ.25 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. இவ்வளவு குறைந்த ஊதியத்தில் எப்படி பணியாற்ற முடியும் என பவானி சிங் கேள்வி எழுப்பியதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் செந்தில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி குணசீலன் உள்ளிட்டோர் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை தனிமையில் சந்தித்து அரை மணி நேரம் பேசியதாகத் தெரிகிறது.
 
அப்போது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியதாகவும் அவருக்கு போதிய ஊதிய உயர்வு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர். இருப்பினும் பவானி சிங் தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
 
அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து பவானி சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் சொத்துக்குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

3 நாள் பயணமாக டெல்லி வந்தார் பாரக் ஒபாமா: பிரதமர் மோடி வரவேற்பு!

 Sunday, January 25, 2015
குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக, 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி மிச்செல்லுடன் அதிநவீன வசதிகள் கொண்ட ‘ஏர்போர்ஸ்–1’ விமானம் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லி வந்தார்.
 
இந்திய நேரப்படி நேற்று மாலை அவர் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார். டெல்லி பாலம் விமான நிலையத்தில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். மேலும், அவரை மத்திய அமைச்சர்கள் குழு வரவேற்றது.
 
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று அவர் அஞ்சலி செலுத்துகிறார்.
 
டெல்லியில் திங்கள்கிழமை நடைபெறும் குடியரசு தினவிழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
ஒபாமா வருகையையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம்,புலி கைதிகளின் விடுதலை குறித்து வடக்கு முதலமைச்சர் சுவாமிநாதனுடன் சந்திப்பு!

Sunday, January 25, 2015
நாட்டில் மீண்டும் புலிகளின்  தீவிரவாதததை உருவாக்க பல கட்சிகள் ஆர்வம் காட்டிவருகின்றது!
 
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்று சனிக்கிழமை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனைச் சந்தித்து வலி. வடக்கு பிரதேசத்தில் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
 
அமைச்சர் சுவாமிநாதனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், முதலமைச்சருடன் வட மாகாண சபையின் 3 அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
வலி. வடக்கில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் மக்களின் காணிகளை விடுவித்து அதில் மக்களை அவர்களது சொந்த காணிகளில் மீள்குடியேற்றம் செய்வது பற்றி இந்த சந்திப்பில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
வலி. வடக்கில் சுமார் 6,500 ஏக்கர் காணி பாதுகாப்பு படையினரால் கையப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் தேசிய பாதுகாப்புக்கும் படையினரின் தேவைகளுக்கும் அவசியமற்ற ஏனைய அனைத்து காணிகளிலும் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்றும் தற்போதைய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்குள் இவ்விடயத்தையும் உள்வாங்கி அவற்றை நிறைவேற்றுவதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதன்போது மீள்குடியேற்ற அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அத்துடன், வலி. வடக்கில் பாதுகாப்புப் படையினரால் தற்போது கையகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் காணிகளில் சிறிய பரப்பொன்றே அவர்களதும் அதேபோல், தேசிய பாதுகாப்பின் நிமித்தமானதுமான தேவைகளுக்கு அவசியமாக இருக்கும் என்ற வகையில் 5 ஆயிரம் ஏக்கர்களுக்கும் அதிகமான காணிகளை மக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்க முடியும் என்றும் விக்னேஸ்வரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதேநேரம், இந்த விவகாரம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் சுவாமிநாதன் இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, சிறைச்சாலைகளில் இருக்கும்  புலி அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.
 
அரசியல் கைதிகளைப் பொறுத்த வரையில் பதிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் பதிவு செய்யப்படாதவர்கள் என்று இரு பிரிவினர் இருக்கும் நிலையில், பதிவு செய்யப்படாதவர்களில் பலரும் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தங்களுக்கும் மக்களுக்கும் இருப்பதால், நீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பில் சிறைச்சாலை சென்று இந்த கைதிகள் பற்றி ஆராய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதற்கான அதிகாரங்கள் நீதிபதிகளுக்கு இருப்பதாகவும் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரான வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்த விடயம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து உரிய கவனம் செலுத்துவதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள நாளை பெல்ஜியம் பயணம்!

Sunday, January 25, 2015
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐரோப்பிய ஆணைக்குழுவை சந்திப்பதற்காக நாளை திங்கட்கிழமை பெல்ஜியத்தின், ரஸல்ஸ் நகருக்குச் செல்லவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
இலங்கையிலிருந்து மீன்களைக் கொள்வனவு செய்யக் கூடாது என ஐரோப்பா கடந்த அரசாங்க காலத்தில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.
 
ஐரோப்பிய ஆணைக்குழு விதித்துள்ள இந்த தடையுத்தரவுக்கு எதிரான காரணங்களை நிவர்த்தி செய்து கொள்ளும் வரையில், அடுத்து வரும் ஆறு மாதங்களுக்காவது இந்த தடையுத்தரவை நீக்குமாறு வேண்டுகோள் விடுப்பது அமைச்சரின் இவ்விஜயத்துக்கான நோக்கமாகும் எனவும் அரசாங்கம் கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் பொதுத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிடும் கூட்டணிக் கட்சிகள்!

Sunday, January 25, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பங்காளிகளாக இருக்கும் கட்சிகள் வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளன. இந்தக் கூட்டணி பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பயன்படுத்திய வெற்றிலை சின்னத்தையே தமது சின்னமாகப்
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன தெரிவானார். இதையடுத்து வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான சின்னமான கை சின்னத்திலேயே போட்டியிட ஆர்வம் காட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நிமால் சிறிபால டிசில்வாவுக்கு கூட்டணிக் கட்சிகள் பெரும் எதிர்ப்பை வெளியிட்டன.
 
இதையடுத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அண்மையில் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவை சந்தித்து தாங்கள் நாடாளுமன்றில் தனித்து இருக்க முடிவு செய்துள்ளனர் எனத் தெரிவித்தனர். சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுள் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்: "கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்தாலும் அவருக்குக் கிடைத்த 57 இலட்சம் வாக்குகளுக்கு மேல் கிடைத்த மக்கள் ஆணையைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. இந்த வாக்குகளை நானோ அல்லது விமல் வீரவன்ஸவோ, நிமால் சிறிபால டிசில்வாவோ அல்லது வேறு யாருமே பெற முடியாது.
 
வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மைத்திரி வழிகாட்டலின் கீழ் போட்டியிடவுள்ளது. எனினும் முன்னணியின் பெரும்பாலான கட்சிகள் அந்த முன்னணியில் போட்டியிட விரும்பவில்லை. எனவே நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கீழ் போட்டியிடவே விரும்புகிறோம். கட்சி பற்றிய முடிவு இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் அவரின் தலைமையின் கீழேயே பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புகிறோம்" என்றார்.
 
புதிய அரசியல் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது போட்டியிடுவதற்கு புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.
 
சில அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளன.
மக்கள் ஐக்கிய முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜ கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றன.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இந்த கூட்டணியில் இணைத்து கொள்வது குறித்தும் பேசப்பட்டு வருகின்றது.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலரும், ஓய்வு பெற்ற சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் சிலரும் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட உள்ளனர்