Thursday, January 29, 2015

இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருட காலமாக குறைக்க நடவடிக்கை: ஜனாதிபதி மைத்திரிபால!

Thursday, January 29, 2015
இலங்கை::இலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஆறு வருட காலத்திலிருந்து ஐந்து வருடமாக குறைப்பதற்கு அரசியலமைப்பு நிபுணத்துவக் குழு மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் அரசியலமைப்புக்கு புதிய திருத்தங்களை முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
 
உண்மையிலேயே ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 04 வருடகாலமாக குறைப்பதையே நான் விரும்புகிறேன்' எனினும் தற்போது அரசமைப்பு யாப்பு சீர்திருத்த பதவியிலிருப்பவர்கள் எனது விருப்பதுடன் இணங்கவில்லை அதனால் தற்போது பொது சீர்திருத்தமாக ஐந்து வருட காலமாக குறைப்பதில் சட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பொதுமக்கள் மத்தியில் தெரிவித்தார்.

தற்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் குறைக்கப்படுமிடத்து மேற்கொள்ள வேண்டிய சட்டதிட்டங்கள் மற்றும் தேவையான யாப்பு சீர்திருத்தங்கள் அரசியலமைப்பு வல்லுனர்கள் உள்ளடக்கிய குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
பொலன்னறுவை தோப்பாவெவ விளையாட்டு மைத்தானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
 
தென்னாப்பிரிக்காவில் விடிவெள்ளியாக உதித்து அந்த மண்ணின் மைந்தர்களான கருப்பினத்தவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஒப்பற்ற தலைவர் நெல்சன் மண்டேலா (சக்ஙீசூச்ஙூ ஙஹஙூக்ஷக்ஙீஹ) தனது நான்கு வருட ஆட்சிக் காலத்தில் நாட்டுக்கு தேவையான பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். அதன் பின்னர் தன் கொள்கைக்காக 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் ஆவார் என ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அத்துடன் மண்டேலாவின் கருத்துக்கு எதிராக நின்றவர்களைக்கூட அவர் பிரிவினை பாராது நாட்டின் அபிவிருத்தி ஒத்துழைப்பில் அவர்களுடன் ஒன்றாக செயற்பட்டவர். அதே மாதிரி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மற்றும் நடவடிக்கைகளில் என்னை எதிர்த்து நின்றவர்களை நான் பிரிவினை பாராது நாட்டின் அபிவிருத்தியில் ஒன்றிணைத்து செயற்படுவேன் என்றார்.
 
அத்துடன் அரசியல் சார்ந்தவர்களின் செல்வாக்கிலோ, வேறு யாராவது பிரமுகர்களின் செல்வாக்கிலோ தகுதியடிப்படையின்றி எவருக்கும் வேலை வழங்கப்பட மாட்டாது எனவும் வலியுறுத்தினார். அனைவருக்கு அவரவர் தகுதி ,திறமை, நேர்மை அடிப்படையிலே தொழில்கள் வழங்கப்படும் எனவும் அவர் உறுதி செய்துள்ளார்.
 
நாட்டில் முன்னர் காணப்பட்ட ஆட்சி முறையானது தேர்தல் காலத்தின் போது காணப்பட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் மீறி செயற்பட்டது. பலவருட காலமாக தேர்தலில் வாக்களிப்புக்களில் பின்பற்றப்பட்டு வந்த நேர்மை மற்றும் கொள்கைகள் கடந்த தேர்தல் காலத்தில் மீறப்பட்டது. அத்துடன் பொதுச் சேவைகளில் ஈடுபட்டு வருபவர்கள் கடந்த சில காலமாக சரிவு நிலையை எதிர்நோக்கி வந்தனர்.
 
அத்துடன் அரசாங்க சேவையில் ஈடுபடுவர்களை எவ்வாறு ஒரு அரசியல் கடசியானது தனது தேர்தல் பிரசாரத்திற்காகவும் தேர்தல் வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் பயன்படுத்தி வந்தார்கள் என்று கடந்த தேர்தலில் நாம் காணக்கூடியதாக இருந்தது. இது எவராலும் எதிர்பார்க்க முடியாத சூழ்நிலையாகும். இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசியல் கட்சியும் இவ்வாறானதொரு அரசியல் நோக்கத்திற்காக அரசாங்க ஊழியர்களை பயன்படுத்தியது இல்லை.
 
இருந்த போதிலும் கடந்த முறை எமது நாட்டில் இடம்பெற்ற தேர்தலானது மிகவும் சாதகமான நிலையிலும் சூழ்நிலையிலும் இடம்பெற்றதொரு வெற்றிகரமான தேர்தல் முறையாகும் என மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment