Thursday, January 29, 2015
சென்னை::புலிகளுக்கு ஆதரவாக உயிரை
காக்க இந்திய அரசை வலியுறுத்தி சாஸ்திரி பவனில் தீக்குளித்து இறந்த
முத்துக்குமாரின் 6–ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
முத்துக்குமார்
நினைவு நாளையொட்டி தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் இன்று ஊர்வலமாக சென்று
சாஸ்திரி பவன் முன்பு முத்துக்குமாரின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி
போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு போலீசார்
அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து சாஸ்திரி பவன் முன்பு போலீசார்
குவிக்கப்பட்டிருந்தனர். இன்று காலையில் தமிழர் எழுச்சி இயக்க
ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, செயலாளர் குமரவேல் மற்றும் நிர்வாகிகள் சாஸ்திரி
பவன் வாசலில் முத்துக்குமார் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
செலுத்தினார்கள். பின்னர் முத்துக்குமார் முக மூடியை அணிந்து ஊர்வலமாக
செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 15 பேரை கைது
செய்தனர்.
போராட்டம் தொடர்பாக வேலுமணி கூறியதாவது:–
புலிகளுக்கு ஆதரவாக உயிர் நீத்த முத்துக்குமாரின் 6–வது நினைவு நாளான இன்று ஊர்வலம்
நடத்தப்போவதாக அறிவித்தோம். ஆனால் ஊர்வலத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை.
எனவே தடையை மீறி முத்துக்குமார் முகமூடியை அணிந்து போராட்டம் நடத்தினோம்.
சாஸ்திரிபவன் முன்பு உள்ள ஹாடோஸ் சாலைக்கு முத்துக்குமார் பெயரை சூட்ட
வேண்டும்.
புலிகளின் தமிழ் ஈழம் மலர இந்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். முத்துக்குமாருக்கு சிலை வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முத்துக்குமார்
நினைவு நாளையொட்டி கொளத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் நடிகர் சத்யராஜ்,
வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன், டைரக்டர்கள் கவுதமன், புகழேந்தி
தங்கராஜ், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், சமத்துவ மக்கள் கட்சி
பொதுச்செயலாளர் கருநாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவிக்குமார்
மற்றும் காஞ்சி அமுதன், உமாபதி, அருணா பாரதி அகியோர் அஞ்சலி
செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment